Fulfilling public aspirations is the core objective of this budget and the resolution of this government: PM Modi

March 09th, 10:30 am

PM Modi addressed the post-budget webinars today, focusing on the theme “Sabka Saath Sabka Vikas-Fulfilling Aspirations of People”. In his remarks, the PM highlighted India’s prowess in the past decade in health, education, sports and tourism. He emphasised the importance of synergy between various stakeholders to accelerate national progress and solidify the foundation of a Viksit Bharat.

“அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் – மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்” என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 09th, 10:15 am

கல்வி, திறன், சுகாதாரம், சுற்றுலா, விளையாட்டு, கலாச்சாரம் ஆகிய துறைகள் இந்த இலக்குகளை அடைவதற்கான முதன்மையான அம்சங்கள் என்பதை எடுத்துரைத்த திரு மோடி, பட்ஜெட் அறிவிப்புகளை திறம்பட அமல்படுத்துவதற்கான கருத்துகளை தெரிவிக்குமாறு நிபுணர்களையும், கொள்கை வகுப்பாளர்களையும் வரவேற்றார். பொதுமக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல் என்பது வெறும் அம்சம் அல்ல என்று கூறிய அவர், அது இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கம் என்றும், இந்த அரசின் தீர்மானம் என்றும் தெரிவித்தார்.

"அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் - மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்" என்ற தலைப்பில் நாளை பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

March 08th, 04:35 pm

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் - மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல் என்ற தலைப்பில் நாளை (மார்ச் 9, 2026) நடைபெறும் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காலை 10:15 மணிக்கு காணொளி மூலம் உரையாற்றுகிறார்.

The government places great emphasis on bringing a 'technology culture' to agriculture: PM Modi

March 06th, 01:14 pm

PM Modi addressed the Post Budget Webinar on the theme “Agriculture and Rural Transformation”. The PM highlighted programmes such as the PM Kisan Samman Nidhi and MSP reforms that benefit farmers. He also spoke about the “technology culture” in agriculture, referring to initiatives like e-NAM and the development of DPI. He called for suggestions on effectively integrating technology with traditional systems.

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 06th, 01:00 pm

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். ஏற்கனவே நடைபெற்ற தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சித் தொடர்பான அமர்வுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், பட்ஜெட் உருவாக்கத்தின் போது பங்குதாரர்கள் மதிப்புமிகு ஒத்துழைப்பை அளித்ததாகக் கூறினார். தற்போது பட்ஜெட்டுக்கு பின் அதன் உண்மையான பயன்களை நாடு அனுபவம் கொள்வது அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பங்கேற்பாளர்களின் ஆலோசனைகள் முக்கியமானது என்றும் திரு மோடி கூறினார்.

பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் “வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம்” என்பது குறித்து மார்ச் 6 அன்று பிரதமர் உரையாற்றவுள்ளார்

March 05th, 06:04 pm

பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் “வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம்” என்பது குறித்து மார்ச் 6 அன்று காலை 11:15 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

This year’s Union Budget reinforces our commitment to sustaining and strengthening economic growth: PM Modi

March 03rd, 11:30 am

PM Modi addressed the Budget Webinar, focusing on the theme of Sustaining and Strengthening Economic Growth. He reiterated the core mantras of Build more, produce more, connect more, and export more. He also urged stakeholders to invest with confidence, adopt cutting-edge technology, make significant investments in research, and maintain global quality standards.

பொருளாதார வளர்ச்சியை நீடிக்கச் செய்தல் மற்றும் வலுப்படுத்துதல் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 03rd, 11:15 am

“அதிக கட்டமைப்பு, அதிக உற்பத்தி, அதிக இணைப்பு, அதிக ஏற்றுமதி” என்ற மந்திரங்களை வலியுறுத்திய பிரதமர் அரசின் தெளிவான தொலைநோக்குப் பார்வையையும் தீர்மானத்தையும் உறுதி செய்தார். பொருள் உற்பத்தி, பொருள் போக்குவரத்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நகர்ப்புற மையங்கள் ஆகியவை தனிப்பட்டவை அல்ல, ஒற்றைப் பொருளாதார கட்டமைப்பின் ஒருங்கிணைக்கப்பட்ட தூண்கள் அவை என்று பிரதமர் விவரித்தார்.

“பொருளாதார வளர்ச்சியை நீடிக்கச் செய்தல் மற்றும் வலுப்படுத்துதல்” குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையதள கருத்தரங்கில் மார்ச் 3-ஆம் தேதி பிரதமர் உரையாற்றுகிறார்

March 02nd, 07:10 pm

“பொருளாதார வளர்ச்சியை நீடிக்கச் செய்தல் மற்றும் வலுப்படுத்துதல்” குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய வலைதள கருத்தரங்கில் மார்ச் 3-ஆம் தேதி காலை 11:15 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுவார்.

"வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொழில்நுட்பம், சீர்திருத்தங்கள் மற்றும் நிதி" குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 27th, 01:01 pm

இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் இணையவழிக் கருத்தரங்கிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கடந்த சில ஆண்டுகளில், பட்ஜெட் இணையவழிக் கருத்தரங்கு என்பது ஒரு வலுவான பாரம்பரியமாக மாறியுள்ளது. பெரும்பாலும், பட்ஜெட் என்பது வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது; சில நேரங்களில் பங்குச் சந்தையின் நகர்வுகள் குறித்தும், சில நேரங்களில் வருமான வரி முன்மொழிவுகள் குறித்தும் விவாதங்கள் மையமாக இருக்கின்றன. உண்மை என்னவென்றால், ஒரு நாட்டின் பட்ஜெட் என்பது குறுகிய கால வர்த்தக ஆவணம் அல்ல; அது ஒரு கொள்கைக்கான வழிகாட்டி. எனவே, பட்ஜெட்டின் செயல்திறனை வலுவான அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், கடன் வழங்கும் முறையை எளிதாக்குதல், தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் , நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குதல் மற்றும் அவர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் அது அமைய வேண்டும். பட்ஜெட்டில் எடுக்கப்படும் இது போன்ற முடிவுகள் பொருளாதாரத்திற்கு நிரந்தர பலத்தை அளிக்கின்றன. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு பட்ஜெட்டையும் தனிமைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்வாகவோ பார்க்கக்கூடாது.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் மற்றும் நிதி குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

February 27th, 11:30 am

இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர், உள்கட்டமைப்பு விரிவாக்கம், கடன் வழங்குவதை எளிதாக்குதல், எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்துதல், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் போன்ற உறுதியான அளவீடுகள் மூலமும், குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குதல், அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலமும், பட்ஜெட்டின் பயன்பாடு மதிப்பிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்த அம்சங்கள் தொடர்பான பட்ஜெட் முடிவுகள் பொருளாதாரத்திற்கு நிரந்தர வலிமையை அளிப்பதாக அவர் கூறினார்.

“வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான தொழில்நுட்பம், சீர்திருத்தங்கள் மற்றும் நிதி” என்ற தலைப்பில் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றுகிறார்

February 26th, 08:07 pm

2026–27 மத்திய பட்ஜெட்டின் முக்கிய கரு பொருள்களை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய வலைதள கருத்தரங்குத் தொடரில், பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கு முதலாவதாகும். 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகளை வலுப்படுத்துவது, விளைவு சார்ந்த செயல்படுத்தலை உறுதி செய்வது, கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளுதல், பங்கேற்பாளர்களிடமிருந்து கட்டமைக்கப்பட்ட கருத்துக்களைப் பெறுதல் முதலியவற்றில் இந்தக் கருத்தரங்கு கவனம் செலுத்தும். முக்கிய பட்ஜெட் அறிவிப்புகளை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்க, தொழில்துறை, நிதி நிறுவனங்கள், சந்தை பங்கேற்பாளர்கள், அரசு, தொழில்துறை ஒழுங்குமுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகாரிகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பங்குதாரர்களை இந்தத் தொடர் கருத்தரங்குகள் ஒன்றிணைக்கும்.

பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் காணொலிக் காட்சி மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து பிரதமர் ஆற்றிய உரை

March 05th, 01:35 pm

இந்த முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் வாழ்த்துக்கள். மக்கள் சக்தி, பொருளாதாரம், புத்தாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்தல்- இது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை அடைவதற்கான வழி வகைகளை வரையறைக்கும் கருப்பொருளாகும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதன் தாக்கம் மிகப் பெரிய அளவில் இருப்பதை நீங்கள் காண முடியும். எனவே, இந்த பட்ஜெட் இந்தியாவின் எதிர்காலத்திற்கான வரைபடமாக உருவெடுத்துள்ளது. மக்கள் சக்தி ,பொருளாதாரம் மற்றும் புத்தாக்கப் படைப்புகளுக்கு எவ்வளவு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறதோ அதே அளவு முன்னுரிமை முதலீடு, உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கும் அளித்து வருகிறோம். திறன் மேம்பாடு, நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனவே, தற்போது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில், இந்தப் பிரிவுகளில் நாம் அதிக முதலீடு செய்ய வேண்டும். இதற்காக, அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். ஏனெனில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது அவசியமாகும். அதே நேரத்தில், இது ஒவ்வொரு நிறுவனத்தின் வெற்றிக்கும் அடிப்படையாகும்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் – மனித சக்தி, பொருளாதாரம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்தல் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

March 05th, 01:30 pm

பட்ஜெட்டுக்குப் பிந்தைய வேலைவாய்ப்பு குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். மனித சக்தி, பொருளாதாரம் மற்றும் புத்தாக்கக்‌ கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் முதலீடு என்ற இணையவழிக் கருத்தரங்கின் கருப்பொருளின் முக்கியத்துவத்தைப் பிரதமர் எடுத்துரைத்தார். இந்த ஆண்டு பட்ஜெட் இந்தக் கருத்தை அதிக அளவில் பிரதிபலிக்கிறது என்றும், இந்தியாவின் எதிர்காலத்திற்கான திட்டமாக இது செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு, தொழில்கள், மனித சக்தி, பொருளாதாரம், புத்தாக்க கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் முதலீடுகளுக்கு சமமான முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். திறன் மேம்பாடு மற்றும் திறமை ஆகியவை நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டிய திரு மோடி, அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தேவைப்படுவதால், இந்தத் துறைகளில் அதிக முதலீடு செய்ய அனைத்து பங்குதாரர்களும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இது நாட்டின் பொருளாதார வெற்றிக்கு இன்றியமையாதது மற்றும் ஒவ்வொரு நிறுவனத்தின் வெற்றிக்கும் அடிப்படையாக அமைகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மார்ச் 5-ம் தேதி வேலைவாய்ப்பு குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் பங்கேற்கிறார்

March 04th, 05:09 pm

வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது அரசின் முக்கிய கவனம் செலுத்தும் துறைகளில் ஒன்றாகும். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, வேலைவாய்ப்பு வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், அதிக வேலைவாய்ப்பு வழிகளை உருவாக்குவதற்கும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த இணையக் கருத்தரங்கு அரசு, தொழில், கல்வித்துறை மற்றும் மக்களிடையே ஒத்துழைப்பை வளர்க்கும். இது மாற்றத்தக்க பட்ஜெட் அறிவிப்புகளை பயனுள்ள விளைவுகளாக மாற்றும் வகையில் விவாதங்களை ஊக்குவிக்கும். மக்களை மேம்படுத்துதல், பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் புதுமைகளை வளர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்தி, விவாதங்கள் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழி வகுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும்; 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் இலக்கை அடைவதை நோக்கி, தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் தலைமைத்துவம், உழைக்கும் திறமையான, ஆரோக்கியமான பணியாளர்களை உருவாக்குவதை இது நோக்கமாக கொண்டிருக்கும்.

பிரதமர் இன்று (மார்ச் 4) பட்ஜெட்டுக்கு பிந்தைய மூன்று இணையவழி கருத்தரங்குகளில் பங்கேற்கிறார்

March 03rd, 09:43 pm

பட்ஜெட்டுக்கு பிந்தைய மூன்று இணையவழிக் கருத்தரங்குகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (மார்ச் 4) நண்பகல் 12.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாகப் பங்கேற்கிறார். இந்த இணையவழிக் கருத்தரங்குகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் குறித்து நடைபெறவுள்ளன. உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் அணுசக்தி இயக்கங்கள், ஒழுங்குமுறை, முதலீடு மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான சீர்திருத்தங்கள் குறித்து கருத்தரங்கங்களில் விவாதிக்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.

வேளாண்மை, கிராமப்புற வளம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழிக் கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 01st, 01:00 pm

பட்ஜெட்டுக்குப் பிறகு, பட்ஜெட் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் உங்களது பங்கேற்பு மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்ச்சியில் இணைந்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டின் பட்ஜெட் எங்கள் அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் முழு பட்ஜெட் ஆகும். இந்த நிதிநிலை அறிக்கை எங்களது கொள்கைகளின் தொடர்ச்சியைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையில் புதிய விரிவாக்கத்தையும் காட்டுகிறது. பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நீங்கள் அனைவரும் அளித்த உள்ளீடுகள், ஆலோசனைகள் பட்ஜெட் தயாரிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இப்போது இந்த வரவு செலவுத் திட்டத்தை மிகவும் திறம்பட செயல்படுத்துவதிலும், சிறந்த, விரைவான பயன்களைப் பெறுவதிலும், உங்கள் பங்கு மேலும் அதிகரித்துள்ளது.

வேளாண்மை, கிராமப்புற வளம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 01st, 12:30 pm

வேளாண்மை, கிராமப்புற வளம் ஆகியவை குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று (01.03.2025) உரையாற்றினார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இந்த கருத்தரங்கில் இணைந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, இந்த ஆண்டின் பட்ஜெட் அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் முழு பட்ஜெட் என்பதை எடுத்துரைத்தார், இது கொள்கைகளின் தொடர்ச்சியையும் வளர்ச்சி அடைந்த பாரத்திற்கான பார்வையின் புதிய விரிவாக்கத்தையும் காட்டுகிறது என்று அவர் கூறினார். பட்ஜெட்டுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் மதிப்புமிக்க உள்ளீடுகள், ஆலோசனைகள் ஏற்கப்பட்டதாகவும் அவை மிகவும் உதவிகரமாக இருந்தன என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்த பட்ஜெட்டை மேலும் சிறப்பானதாக மாற்றுவதில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்கு மேலும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

மார்ச் 1 அன்று "வேளாண்மை மற்றும் கிராமப்புற வளம்" குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் பங்கேற்கிறார்

February 28th, 07:32 pm

மார்ச் 1-ஆம் தேதி மதியம் 12:30 மணியளவில் வேளாண்மை மற்றும் கிராமப்புற செழிப்பு என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.