Prime Minister meets with the President of Trinidad and Tobago

July 04th, 11:37 pm

PM Modi met Trinidad & Tobago President Kangaloo and the two leaders reflected on the enduring bonds shared by the two countries, anchored by strong people-to-people ties. PM Modi conveyed his sincere gratitude for the conferment of the ‘Order of the Republic of Trinidad and Tobago’—describing it as an honour for the 1.4 billion people of India.

பிரதமர் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் டிரினிடாட் நாட்டைச் சேர்ந்த பாடகர் திரு. ராணா மோஹிப்பை சந்தித்துப் பேசினார்

July 04th, 09:42 am

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த இரவு விருந்தில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினக் கொண்டாட்டங்களின் போது ‘வைஷ்ணவ ஜன தோ’ என்ற பாடலைப் பாடிய டிரினிடாட் நாட்டைச் சேர்ந்த பாடகர் திரு. ராணா மோஹிப்பைச் சந்தித்தார்.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற போஜ்புரி சௌதால் நிகழ்ச்சிக்கு பிரதமர் பாராட்டு

July 04th, 09:06 am

இந்தியா - டிரினிடாட் & டொபாகோ நாடுகளிடையயே நீடித்த கலாச்சார பிணைப்புகளை எடுத்துக்காட்டும் வகையில், போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற சிறப்பான போஜ்புரி சௌதால் நிகழ்ச்சிக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

டிரினிடாட் மற்றும் டொபாகோவில் அரசுமுறைப் பயணத்தில் பிரதமர் போர்ட் ஆஃப் ஸ்பெயின் வந்து சேர்ந்தார்

July 04th, 02:16 am

டிரினிடாட் மற்றும் டொபாகோவில் 2025, ஜூலை 3,4, தேதிகளில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று போர்ட் ஆஃப் ஸ்பெயின் வந்து சேர்ந்தார். 1999-க்குப் பின் டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் இருதரப்புப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இரு நாடுகளுக்கும் இடையேயான நெருங்கிய உறவின் சிறப்பு அடையாளமாக, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள விமான நிலையத்திற்கு பிரதமர் வருகைதந்தபோது, ​​டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பிரதமர் திருமதி கம்லா பெர்சாட்-பிஸ்ஸேசர், அவரது அமைச்சரவை சகாக்களுடனும் பல பிரமுகர்களுடனும் வந்திருந்து அவரை வரவேற்றார். பிரதமருக்குப் பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு மரியாதை மற்றும் சிறப்பு கலாச்சார நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.