அவசரநிலைக் காலத்தில், ஜனநாயகத்தை பாதுகாத்தவர்களுக்குப் பிரதமர் மரியாதை
June 25th, 10:53 am
இந்திய வரலாற்றின் மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில், ஜனநாயக விழுமியங்களை உறுதியுடன் பாதுகாத்த அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். இந்த காலக்கட்டம், மௌனமாக இருக்க மறுத்து, அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளக் கொள்கைகளை நிலைநிறுத்திய எண்ணற்ற குடிமக்களின் அசாத்திய துணிச்சலையும், மன உறுதியையும் வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உத்தராகண்ட் முன்னாள் முதலமைச்சர் மேஜர் ஜெனரல் பூவன் சந்திர கந்தூரி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
May 19th, 01:31 pm
உத்தராகண்ட் முன்னாள் முதலமைச்சர் மேஜர் ஜெனரல் பூவன் சந்திர கந்தூரி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேஜர் ஜெனரல் கந்தூரி, ஆயுதப்படை முதல் அரசியல் வரை ஆற்றிய இணையற்ற பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தமது முதலமைச்சர் பதவிக் காலத்தில் உத்தராகண்ட் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு குறித்து சுட்டிக்காட்டிய திரு மோடி, மத்திய அமைச்சராக அவர் பணியாற்றிய விதம் உண்மையில் உத்வேகம் அளிப்பதாக கூறியுள்ளார். நாடு முழுவதும் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய அயராத பணிகளையும் அவர் பாராட்டியுள்ளார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-நெதர்லாந்து கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்
May 17th, 03:45 am
நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மே 16, 17 ஆகிய தேதிகளில் நெதர்லாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் இரண்டாவது நெதர்லாந்துப் பயணமாகும்.இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல் திட்டம் 2026-2030-ன் முக்கிய அம்சங்கள்
May 17th, 03:15 am
பிரதமர் திரு நரேந்திர மோடியும், நெதர்லாந்துப் பிரதமர் திரு ராப் ஜெட்டனும், 2026 மே 16 அன்று ஹேக்கில் நடைபெற்ற சந்திப்பின்போது, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள், கூட்டுச் செயல் திட்டங்கள் ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியா-நெதர்லாந்து இருதரப்பு உறவை ஒரு உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டனர். இதன் பொருட்டு, இந்தியாவும் நெதர்லாந்தும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2026-2030) இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டன.Prime Minister urges MPs to vote in favour of Nari Shakti Vandan Adhiniyam Amendment, Calls it Historic Opportunity
April 17th, 02:13 pm
The Prime Minister, Shri Narendra Modi, has highlighted that a discussion is currently underway in Parliament on the amendment to the Nari Shakti Vandan Adhiniyam, noting that deliberations continued till 1 AM last night.புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 01st, 12:00 pm
புதுச்சேரி முதலமைச்சர் திரு என். ரங்கசாமி அவர்களே, எனது மத்திய அமைச்சரவை சகா திரு மன்சுக் மண்டவியா அவர்களே, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் அவர்களே, சட்டப்பேரவைத் தலைவர் திரு ஆர். செல்வம் அவர்களே, உள்துறை அமைச்சர் திரு ஏ. நமசிவாயம் அவர்களே, பிற தலைவர்களே, புதுச்சேரியின் எனது அன்பான சகோதரிகளே, சகோதரர்களே, வணக்கம்!புதுச்சேரியில் ₹2,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
March 01st, 11:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.03.2026) புதுச்சேரியில் ₹2,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தத் திட்டங்கள் அடங்கியுள்ளன.அபுதாபியின் பட்டத்து இளவரசர் மேன்மைதங்கிய ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்
February 19th, 05:45 pm
2026 பிப்ரவரி 18, 19 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அபுதாபியின் பட்டத்து இளவரசர் மேன்மைதங்கிய ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 2026 பிப்ரவரி 19 அன்று புதுதில்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில் பங்கேற்றார். ஏற்கனவே, செப்டம்பர் 2024-ல் இந்தியாவில் பயணம் மேற்கொண்டதையடுத்து, இந்தப் பயணம் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும்.The greatest pride of my life is that I am a karyakarta of the Bharatiya Janata Party: PM Modi at BJP HQ
January 20th, 11:16 am
Prime Minister Narendra Modi today addressed party leaders and karyakartas during the felicitation ceremony of the newly elected BJP President, Nitin Nabin, at the party headquarters in New Delhi. Congratulating Nitin Nabin, the Prime Minister said, “The organisational election process reflects the BJP’s commitment to internal democracy, discipline and a karyakarta-centric culture. I congratulate karyakartas across the country for strengthening this democratic exercise.”PM Modi addresses BJP karyakartas at felicitation of New Party President
January 20th, 11:15 am
Prime Minister Narendra Modi today addressed party leaders and karyakartas during the felicitation ceremony of the newly elected BJP President, Nitin Nabin, at the party headquarters in New Delhi. Congratulating Nitin Nabin, the Prime Minister said, “The organisational election process reflects the BJP’s commitment to internal democracy, discipline and a karyakarta-centric culture. I congratulate karyakartas across the country for strengthening this democratic exercise.”மிசோரமில் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நிறைவடைந்த திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய முழுஉரையின் தமிழாக்கம்
September 13th, 10:30 am
மிசோரம் ஆளுநர் வி கே சிங் அவர்களே, முதலமைச்சர் திரு லால்துஹோமா அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மிசோரம் அரசின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே, மிசோரமின் அற்புதமான மக்களுக்கு வாழ்த்துகள்.மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
September 13th, 10:00 am
மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.ஆச்சார்யா வினோபா பாவே-ன் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மரியாதை
September 11th, 08:51 am
ஆச்சார்யா வினோபா பாவே-ன் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியாவின் ஆன்மிகம், சமூகம் மற்றும் அரசியலுக்கு அவர் அளித்த பங்களிப்புகள் குறித்து அவர் நினைவு கூர்ந்துள்ளார்.2025 ஏப்ரல் 03-06 வரை தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு பிரதமரின் பயணம்
April 02nd, 02:00 pm
பாங்காக்கில் நடைபெறும் 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி (ஏப்ரல் 3-4, 2025) தாய்லாந்துக்குச் செல்கிறார். அதன் பிறகு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார் (ஏப்ரல் 4-6, 2025).For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast
March 16th, 11:47 pm
PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.பிரதமர் திரு நரேந்திர மோடி லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பாட்காஸ்ட் கலந்துரையாடலில் ஈடுபட்டார்
March 16th, 05:30 pm
லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்திய பாட்காஸ்ட் உரையாடலின் முக்கிய அம்சங்கள்இந்தியா-மொரீஷியஸ் இடையே மேம்பட்ட உத்திசார் கூட்டாண்மைக்கான கூட்டுத் தொலைநோக்கு பார்வை
March 12th, 02:13 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மொரீஷியஸூக்கு 2025 மார்ச் 11 முதல் 12 வரை மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, மொரீஷியஸ் பிரதமர் டாக்டர் நவீன் சந்திர ராம்கூலமும், திரு நரேந்திர மோடியும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான, ஆரோக்கியமான பேச்சு வார்த்தைகளை நடத்தினார்கள்ஸ்பெயின் அதிபரின் இந்திய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா-ஸ்பெயின் கூட்டறிக்கை (அக்டோபர் 28-29, 2024)
October 28th, 06:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஸ்பெயின் அதிபர் திரு பெட்ரோ சான்செஸ் 2024 அக்டோபர் 28-29 ஆகிய நாட்களில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அதிபர் திரு சான்சேஸ் இந்தியாவில் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். அவருடன் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் வர்த்தக தூதுக்குழுவும் வருகை தந்துள்ளனர்.சன்சத் தொலைக்காட்சியின் கூட்டு வெளியீட்டு விழாவில் பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம்
September 15th, 06:32 pm
மாண்புமிகு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத்தலைவருமான திரு. வெங்கையா நாயுடு அவர்களே, மாண்புமிகு மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா அவர்களே, மாண்புமிகு மாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் அவர்களே, மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்களே, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இதர முக்கியஸ்தர்களே, சீமாட்டிகளே, கனவான்களே!குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோர் இணைந்து சன்சத் தொலைக்காட்சியை தொடங்கி வைத்தனர்
September 15th, 06:24 pm
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா ஆகியோர் இணைந்து சன்சத் தொலைக்காட்சியை இன்று தொடங்கி வைத்தனர்.