"வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொழில்நுட்பம், சீர்திருத்தங்கள் மற்றும் நிதி" குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 27th, 01:01 pm

இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் இணையவழிக் கருத்தரங்கிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கடந்த சில ஆண்டுகளில், பட்ஜெட் இணையவழிக் கருத்தரங்கு என்பது ஒரு வலுவான பாரம்பரியமாக மாறியுள்ளது. பெரும்பாலும், பட்ஜெட் என்பது வெவ்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது; சில நேரங்களில் பங்குச் சந்தையின் நகர்வுகள் குறித்தும், சில நேரங்களில் வருமான வரி முன்மொழிவுகள் குறித்தும் விவாதங்கள் மையமாக இருக்கின்றன. உண்மை என்னவென்றால், ஒரு நாட்டின் பட்ஜெட் என்பது குறுகிய கால வர்த்தக ஆவணம் அல்ல; அது ஒரு கொள்கைக்கான வழிகாட்டி. எனவே, பட்ஜெட்டின் செயல்திறனை வலுவான அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும். உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், கடன் வழங்கும் முறையை எளிதாக்குதல், தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் , நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குதல் மற்றும் அவர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் அது அமைய வேண்டும். பட்ஜெட்டில் எடுக்கப்படும் இது போன்ற முடிவுகள் பொருளாதாரத்திற்கு நிரந்தர பலத்தை அளிக்கின்றன. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு பட்ஜெட்டையும் தனிமைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்வாகவோ பார்க்கக்கூடாது.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் மற்றும் நிதி குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

February 27th, 11:30 am

இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர், உள்கட்டமைப்பு விரிவாக்கம், கடன் வழங்குவதை எளிதாக்குதல், எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்துதல், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் போன்ற உறுதியான அளவீடுகள் மூலமும், குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குதல், அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலமும், பட்ஜெட்டின் பயன்பாடு மதிப்பிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்த அம்சங்கள் தொடர்பான பட்ஜெட் முடிவுகள் பொருளாதாரத்திற்கு நிரந்தர வலிமையை அளிப்பதாக அவர் கூறினார்.

தில்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களை பிரதமர் வரவேற்றார்

February 16th, 10:27 am

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழில்துறை தலைவர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்கள் அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வரவேற்றார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை நாளை (07 ஆகஸ்ட் 2025) புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்

August 06th, 12:20 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, எம் எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டை நாளை (07 ஆகஸ்ட் 2025) காலை 9 மணிக்கு புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வளாகத்தில் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.