Prime Minister extends greetings to everyone on Lohri
January 13th, 05:53 pm
Prime Minister Shri Narendra Modi today greeted everyone on occasion of Lohri.பிரதமர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
January 01st, 11:22 am
2026 புத்தாண்டையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.2025 ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கொனேரு ஹம்பிக்கு பிரதமர் வாழ்த்து
December 29th, 03:35 pm
தோஹாவில் நடைபெற்ற 2025 ஃபிடே உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கொனேரு ஹம்பிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். போட்டியில் அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்றும், எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற தாம் வாழ்த்துவதாகவும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.புனித பிரகாஷ் உத்சவத்தையொட்டி ஸ்ரீ குரு கோவிந்த் சிங்குக்கு பிரதமர் மரியாதை
December 27th, 12:06 pm
புனித பிரகாஷ் உத்சவத்தையொட்டி, ஸ்ரீ குரு கோவிந்த் சிங்குக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். ஸ்ரீ குரு கோவிந்த் சிங் தைரியம், கருணை மற்றும் தியாகத்தின் உருவமாகத் திகழ்கிறார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்க்கையும் போதனைகளும் உண்மை, நீதி, நேர்மைக்காக நிற்கவும் மனித மாண்பைப் பாதுகாக்கவும் நம்மை ஊக்குவிக்கின்றன. ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கின் தொலைநோக்குப் பார்வை பல தலைமுறைகளை சேவை மற்றும் தன்னலமற்ற கடமையை நோக்கித் தொடர்ந்து வழிநடத்துகிறது, என்று திரு மோடி கூறியுள்ளார்.பிரதமர் அனைவருக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்
December 25th, 09:10 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, அனைவருக்கும் அமைதி, கருணை மற்றும் நம்பிக்கை நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நமது சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும் என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார்.சஷஸ்திர சீமா பல் வீரர்களுக்கு நிறுவன தின வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர்
December 20th, 11:29 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, சஷஸ்திர சீமா பல் படையுடன் தொடர்புடைய அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் நிறுவன தினத்தை முன்னிட்டு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கண்ணியம், அணுகல், வாய்ப்புக்கான உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
December 03rd, 04:09 pm
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு கண்ணியம், அணுகல், வாய்ப்புக்கான உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். படைப்பாற்றல், உறுதிப்பாடு ஆகியவற்றால் பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அதனால் நமது நாட்டின் வளர்ச்சி மகத்துவமிக்க வகையில் மேம்பட்டுள்ளதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். உதவி தொழில்நுட்பங்களில் புதிய கண்டுபிடிப்புகள், உள்ளடக்கிய கல்விக் கொள்கைகள், அணுகக்கூடிய உள்கட்டமைப்பு, சட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் நலனையொட்டி, பல ஆண்டுகளாக இந்தியா முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். எதிர் வரும் காலங்களில் நாங்கள் இதை தொடர்ந்து அதிகரிக்கச் செய்வோம் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
December 03rd, 09:11 am
டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் செயல்மிக்க வீரராகவும், அரசியல் சாசன சபைக்கு தலைமை வகித்தவராகவும் இருந்தது முதல் நமது நாட்டின் முதலாவது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றது வரை இணையற்ற கண்ணியம், அர்ப்பணிப்பு மற்றும் தெளிவான நோக்கத்துடன் அவர் நமது நாட்டிற்கு சேவையாற்றியுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். அவரது நீண்ட கால பொது வாழ்க்கை எளிமை, துணிச்சல் மற்றும் நாட்டின் ஒற்றுமைக்கான அர்ப்பணிப்புடன் இருந்தது என்றும் அவரது சிறப்பான சேவை மற்றும் தொலைநோக்குப் பார்வை எதிர்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
December 02nd, 07:02 pm
இன்று தொடங்கிய காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பான நிகழ்ச்சி 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஆழப்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார். காசியில் மகிழ்ச்சியோடும், பசுமையான நினைவுகளோடும் சங்கமம் நிகழ்ச்சிக்கு வருகை தருகின்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்! என்று திரு மோடி குறிப்பிட்டார்.அசாம் தினத்தையொட்டி அசாம் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
December 02nd, 03:56 pm
அசாம் தினத்தையொட்டி அசாம் மாநில சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஸ்வர்கதேயோ சாவோலுங் சுகபா-வின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் நாள் இது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அசாம் மாநில வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மத்திய மற்றும் அசாம் மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.Prime Minister Congratulates Australian Prime Minister H.E. Mr. Anthony Albanese and Ms. Jodie Haydon on their Wedding
November 29th, 09:05 pm
Prime Minister Shri Narendra Modi today extended his heartfelt congratulations to his good friend, Prime Minister of Australia, H.E. Mr. Anthony Albanese and Ms. Jodie Haydon on the occasion of their wedding.The whole country will take inspiration from you: PM Modi during interaction with Indian Blind Women’s Cricket Team
November 28th, 10:15 am
PM Modi interacted warmly with the Indian Blind Women’s T20 World Cup Champions at his residence in 7, LKM, New Delhi. During the interaction, the PM acknowledged the team’s determination and resilience, appreciated the musical talent of one of the players and also highlighted the significance of 150 years of Vande Mataram. He remarked that their success is an inspiration not only for the differently-abled but for all citizens of India.பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கான மகளிர் உலகக் கோப்பை டுவெண்ட்டி - டுவெண்ட்டி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணியினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
November 28th, 10:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (27.11.2025) புதுதில்லியில் உள்ள 7, லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள தனது இல்லத்தில், பார்வைக் குறைபாடு கொண்டவர்களுக்கான மகளிர் உலகக்கோப்பை டுவெண்ட்டி - டுவெண்ட்டி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணியினருடன் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது அன்புடன் அவர்களுடன் உரையாடிய திரு மோடி, அவர்களின் மனஉறுதியை அங்கீகரித்து, தன்னம்பிக்கை மற்றும் ஸ்த்ரத்தன்மையுடன் தங்களது பயணத்தைத் தொடர வேண்டும் என்று அவர்களுக்கு உத்வேகம் அளித்தார். கடின உழைப்பின் மூலம் முன்னேறுபவர்கள் விளையாட்டுத் துறையில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். வீராங்கனைகள் தங்களுக்கென சொந்த அடையாளத்தை உருவாக்கியுள்ளதுடன், இது அவர்களின் தன்னம்பிக்கைக்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.பார்வையற்றோர் மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்ற இந்தியப் பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் வரவேற்பளித்தார்.
November 27th, 10:03 pm
அண்மையில் பார்வையற்றோர் மகளிர் டி 20 உலகக் கோப்பையை வென்ற இந்தியப் பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வரவேற்பளித்தார். அந்த வீராங்கனைகளுடன் திரு மோடி அன்புடன் உரையாடிய போது போட்டித்தொடர் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.Prime Minister Congratulates Indian Deaflympians on extraordinary performance at 25th Summer Deaflympics 2025 in Tokyo
November 27th, 05:10 pm
The Prime Minister, Shri Narendra Modi, extended his heartiest congratulations to India’s Deaflympians, today, for their extraordinary performance at the 25th Summer Deaflympics 2025 held in Tokyo.பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் வாழ்த்து
November 24th, 12:23 pm
பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கான முதலாவது மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்ய காந்த் பதவியேற்கும் விழாவில் பிரதமர் பங்கேற்றார்
November 24th, 11:37 am
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று, நீதிபதி சூர்ய காந்த் பதவியேற்றுக் கொண்ட விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.காசி எம்பி விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் பிரதமர் வாழ்த்து
November 21st, 03:46 pm
காசி எம்பி விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.சத் பூஜையின் புனித கர்ணா சடங்குக்கு பிரதமர் வாழ்த்து
October 26th, 10:44 am
சத் பண்டிகை சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒரு குறிப்பிடத்தக்க சடங்கான ‘கர்ணா’வின் புனித நிகழ்வை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அனைத்து பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தப் புனித பண்டிகையுடன் தொடர்புடைய கடுமையான விரதங்கள் மற்றும் சடங்குகளைக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும் அவர் மரியாதை செலுத்தியுள்ளார்.பொலிவியா நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு திரு ரோபொலிவியா நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு திரு ரோட்ரிகோ பாஸ் பெரேராவிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்ட்ரிகோ பாஸ் பெரேராவிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 21st, 06:37 pm
பொலிவியா நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு திரு ரோட்ரிகோ பாஸ் பெரேராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.