பிரதமரின் புதிய அலுவலகமான "சேவா தீர்த்" வளாகத்திலிருந்து பிரதமர் மோடியின் முதலாவது முடிவுகள், சேவை உணர்வைப் பிரதிபலிப்பதாவும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் சென்றடையும் வகையிலும் உள்ளது
February 13th, 04:16 pm
சேவா தீர்த் என்று அழைக்கப்படும் பிரதமரின் புதிய அலுவலகக் கட்டிடம் செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் அங்கு மேற்கொள்ளப்படும் முதலாவது முடிவுகளில், சேவை உணர்வைப் பிரதிபலிக்கும் முடிவுகள் தொடர்பான முக்கியக் கோப்புகளில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். இந்த முடிவுகள் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை மக்கள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடைகிறது.