புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற உலக விமானப் போக்குவரத்து உச்சி மாநாட்டின் முழு அமர்வில் பிரதமரின் உரை

June 02nd, 05:34 pm

எனது சகாக்களான மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு மற்றும் முரளிதர் மொஹோல், ஐஏடிஏ ஆளுநர்கள் குழுவின் தலைவர் பீட்டர் எல்பர்ஸ் தலைமை இயக்குநர் வில்லி வால்ஷ், இண்டிகோவின் நிர்வாக இயக்குநர் ராகுல் பாட்டியா, மற்ற அனைத்து பிரமுகர்களே, பெண்களே மற்றும் தாய்மார்களே!

பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஐஏடிஏவின் 81வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாட்டின் அமர்வில் உரையாற்றினார்

June 02nd, 05:00 pm

உலகத்தரம் வாய்ந்த விமான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், இணைப்பை அதிகப்படுத்துவதற்கும், பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (ஐஏடிஏ) 81வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாட்டின் அமர்வில் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர், விருந்தினர்களை வரவேற்று, நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு இந்தியாவில் நடப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை அவர் வலியுறுத்தியதுடன், இன்றைய இந்தியா எப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார். உலகளாவிய விமானப் போக்குவரத்து சூழலியலில் இந்தியாவின் பங்கை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார், இது ஒரு பரந்த சந்தையாக மட்டுமல்லாமல், கொள்கை சார்ந்த தலைமை, புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் அடையாளமாகவும் உள்ளது, என்று கூறினார். கடந்த பத்தாண்டுகளில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாகவும், அவை நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த பிரதமர், இன்று, விண்வெளி-விமான ஒருங்கிணைப்பில் இந்தியா ஒரு உலகளாவிய தலைமையாக வளர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.