The words of the Gita not only guide individuals but also shape the direction of the nation's policies: PM Modi in Udupi, Karnataka
November 28th, 11:45 am
During his address at the Laksha Kantha Gita Parayana programme at Sri Krishna Matha in Udupi, PM Modi highlighted the special connection between Gujarat and Udupi. He remarked that Jagadguru Shri Madhvacharya, the pioneer of India’s Dvaita philosophy, is a shining light of Vedanta. The PM said that the entire life of Bhagwan Shri Krishna and every chapter of the Gita conveys the message of action, duty and welfare and announced nine resolutions for every citizen to adopt.கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் நடைபெறும் லட்ச காந்த கீதை பாராயண நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 28th, 11:30 am
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக தரிசனத்தின் மூலம் கிடைக்கும் திருப்தி, ஸ்ரீமத் பகவத் கீதையின் மந்திரங்களின் ஆன்மீக அனுபவம், மரியாதைக்குரிய பல துறவிகள் மற்றும் குருக்களின் மத்தியில் இருப்பது ஆகியவை தனக்கு கிடைத்துள்ள பெரும் பாக்கியம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் இன்று (28.11.2025) நடைபெற்ற லட்ச கந்த கீதை பாராயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றியபோது இதை தெரிவித்தார்.இவை அனைத்தும் எண்ணற்ற ஆசிகளைப் பெறுவதற்கு ஒப்பானது என்று அவர் குறிப்பிட்டார்.'வந்தே மாதரம்' என்ற பாடலின் உணர்வு இந்தியாவின் அழியாத உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது: ‘மன் கீ பாத்’தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
October 26th, 11:30 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், அக்டோபர் 31 அன்று சர்தார் படேலின் 150வது பிறந்தநாளில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சத் பூஜை விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இந்திய நாய் இனங்கள், இந்திய காபி, பழங்குடி சமூகத் தலைவர்கள் மற்றும் சமஸ்கிருத மொழியின் முக்கியத்துவம் போன்ற சுவாரஸ்யமான தலைப்புகளையும் அவர் தொட்டார். 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழா குறித்து பிரதமர் சிறப்புரையாற்றினார்.மங்கோலிய அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட செய்தி அறிக்கையின் தமிழாக்கம்
October 14th, 01:15 pm
ஆறு ஆண்டுகளுக்குப் பின் மங்கோலிய அதிபர் இந்தியாவுக்கு வருகை தருவது மிகச் சிறப்பான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-மங்கோலியா தூதரக உறவுகளின் எழுபது ஆண்டுகளையும், பாதுகாப்பு கூட்டாண்மையின் பத்து ஆண்டுகளையும் கொண்டாடும் தருணத்தில் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இதனைக் குறிக்கும் வகையில் எங்களின் பகிரப்பட்ட பாரம்பரிய, பன்முகத்தன்மை கொண்ட, வலுவான நாகரீக உறவுகளை எடுத்துரைக்கும் வகையில் கூட்டாக அஞ்சல் தலையை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் பரிசளித்த கடம்ப மரக்கன்றை பிரதமர் நட்டார்
September 19th, 05:24 pm
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் பரிசளித்த கடம்ப மரக்கன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி, எண் 7, லோக் கல்யாண் மார்கில் இன்று நட்டார். “சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மையில் அவர் அதீத ஆர்வம் கொண்டிருக்கிறார். எங்கள் விவாதங்களிலும் இந்தத் தலைப்பு அடிக்கடி இடம்பெறும்”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.பிரதமர் கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) நாட்டிற்கு அர்ப்பணித்தார்
August 06th, 12:15 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) நாட்டிற்கு அர்ப்பணித்தார். இது பொதுச் சேவைக்கான தொடர் முயற்சிகள் மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம் என்று அவர் குறிப்பிட்டார்.PM chairs 47th Annual General Meeting of Prime Ministers Museum and Library (PMML) Society in New Delhi
June 23rd, 09:35 pm
PM Modi chaired the 47th AGM of the Prime Ministers Museum and Library (PMML) Society. He put forward the vision of a “Museum Map of India” and suggested the development of a comprehensive national database of all museums in the country. He highlighted the need to create committee to bring out fresh ideas on museums. He advised compiling documents related to the Emergency period to aid researchers.தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக, தில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் பிரதமர் மரக்கன்று நட்டார்
June 05th, 01:33 pm
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சியை வலுப்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் மரம் நடும் இயக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஒரு மரக்கன்று நட்டார்.உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தாயின் பெயரால் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சியின் கீழ் சிறப்பு மரக்கன்று நடும் இயக்கத்திற்கு பிரதமர் தலைமை ஏற்பார்
June 04th, 01:20 pm
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், பசுமை போக்குவரத்திற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில், உலக சுற்றுச்சூழல் தினமான 2025 ஜூன் 5 அன்று புதுதில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் நடைபெறும் சிறப்பு மரக்கன்று நடும் முன்முயற்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்குவார்.ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
April 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று உங்களோடு மனதின் குரலில் நான் கலந்து கொள்ளும் வேளையிலே, மனதிலே ஆழமான துக்கம் உறைகிறது. ஏப்ரல் மாதம் 22ஆ ம் தேதியன்று பஹல்காவிலே கட்டவிழ்த்து விடப்பட்ட தீவிரவாதத் தாக்குதல், தேசத்தின் அனைத்துக் குடிமக்களையும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தாரோடு, அனைத்து இந்தியர்களுமே மனங்களில் ஆழமான துயரத்தை அனுபவிக்கிறார்கள். படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். இந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய படங்களைப் பார்க்கும் போது தேசத்தவர் அனைவரின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது. பஹல்காவில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தத் தாக்குதல், தீவிரவாதத்தின் புரவலர்களின் கையறு நிலையைக் காட்டுகிறது, அவர்களின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது. கஷ்மீரத்திலே அமைதி திரும்பிக் கொண்டிருந்த வேளையிலே, பள்ளிகள்-கல்லூரிகளில் ஓர் உயிர்ப்பு துளிர்த்த நேரத்திலே, கட்டமைப்புப் பணிகள் வரலாறுகாணா வேகம் எடுத்த போதினிலே, ஜனநாயகம் வேரூன்றத் தொடங்கிய காலத்திலே, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரைகாணா அதிகரிப்பை காணும் வேளையிலே, மக்களின் வருவாய் பெருகிவந்த நேரத்திலே, இளைஞர்களுக்கு புதிய சந்தர்ப்பங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. தேசத்தின் எதிரிகளுக்கு, ஜம்மு-கஷ்மீரின் எதிரிகளுக்கு, இது முற்றிலும் பிடிக்கவில்லை. மாறாக, தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் காரணகர்த்தர்கள் கஷ்மீரத்தை அழிக்கத் துடித்தார்கள், ஆகையால் தான் இத்தனை பெரிய சூழ்ச்சிவலையைப் பின்னினார்கள். தீவிரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தில், தேசத்தின் ஒற்றுமை, 140 கோடி பாரத நாட்டவரின் ஒருமைப்பாடு ஆகியன தான் நம்முடைய மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. இந்த ஒற்றுமை, தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய தீர்மானமான போரின் ஆதாரம். தேசத்தின் முன்பாக எழுந்திருக்கும் இந்த சவாலை எதிர்கொள்ள, நமது உறுதிப்பாட்டை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் என்ற முறையில் நாம் நமது உளவுறுதியை வெளிப்படுத்த வேண்டும். இந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எவ்வாறு தேசம் முழுவதும் ஒரே குரலெடுத்துப் பேசுகிறது என்பதை உலகனைத்தும் கவனித்துக் கொண்டிருக்கிறது.தாரிபள்ளி ராமையா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
April 12th, 01:09 pm
திரு. தாரிபள்ளி ராமையா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மரங்களை நடவு செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த நிலைத்தன்மையின் சாம்பியன் என்று அவர் அவரைப் பாராட்டியுள்ளார்.மொரீஷியசில் வசிக்கும் இந்தியர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 12th, 06:07 am
இன்று மொரீஷியஸ் மண்ணில் உங்களுடன் இருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.மொரீஷியஸில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
March 11th, 07:30 pm
மொரீஷியஸில் உள்ள டிரையனான் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய சமூகத்தினர் மற்றும் இந்தியாவின் நண்பர்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலம் உடனிருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள், தொழில்முறையாளர்கள், சமூக கலாச்சார அமைப்புகளின் பிரதிநிதிகள், வணிக தலைவர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர். மொரீஷியஸின் பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 28th, 09:36 pm
உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மீத் சிங் அவர்களே, முதல்வர் திரு புஷ்கர் தாமி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திருமிகு ரக்ஷா கட்சே அவர்களே, உத்தராகண்ட் சட்டமன்ற சபாநாயகர் திருமிகு ரிது கந்தூரி அவர்களே, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் திருமிகு ரேகா ஆர்யா அவர்களே, காமன்வெல்த் விளையாட்டுகள் தலைவர் திரு கிறிஸ் ஜென்கின்ஸ் அவர்களே. ஐ.ஓ.ஏ தலைவர் திருமிகு பி.டி. உஷா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திர பட் அவர்களே, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள வீரர்களே, ஏனைய விருந்தினர்களே!டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 28th, 09:02 pm
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர், உத்தராகண்ட் இன்று இளைஞர்களின் சக்தியால் பிரகாசமாக உள்ளது என்றார். பாபா கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அன்னை கங்கையின் ஆசீர்வாதத்துடன் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன என்றும் அவர் கூறினார். உத்தராகண்ட் மாநிலம் உருவான 25-வது ஆண்டு இது என்று குறிப்பிட்ட திரு மோடி, நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் இந்த இளம் மாநிலத்தில் தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார். தேசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்தப் பதிப்பில் பல உள்ளூர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாடு இருப்பதால் 'பசுமை விளையாட்டுகள்' என்ற கருப்பொருளில் இங்கு போட்டிகள் நடப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தக் கருப்பொருளைப் பற்றி மேலும் விவரித்த பிரதமர், கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் கூட மின்னணுக் கழிவுகளால் தயாரிக்கப்பட்டவை என்றும், பதக்கம் வென்ற ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரக்கன்று நடப்படும் என்றும், இது ஒரு சிறந்த முயற்சி என்றும் குறிப்பிட்டார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக உத்தராகண்ட் அரசுக்கும், மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.'மன் கீ பாத்' (மனதின் குரல்) கேட்பவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள்: பிரதமர் மோடி
September 29th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் உங்களோடு இணைய, மீண்டுமொரு சந்தர்ப்பம். இன்றைய பகுதி என்னை உணர்ச்சியிலாழ்த்துவது, பழைய நினைவுகள் என்னைச் சூழ்ந்து விட்டன. ஏன் தெரியுமா? நம்முடைய மனதின் குரலுக்கு பத்து வயதாகி விட்டது; பத்தாண்டுகள் முன்பாக மனதின் குரல் அக்டோபர் 3ஆம் தேதியன்று, விஜயதசமி நன்னாளன்று தொடங்கப்பட்டது. அந்த நாள் எத்தனை புனிதமான நாள்!!! இது இயல்பாக அமைந்த ஒன்று. இதோடு கூடவே, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று நாம் மனதின் குரலின் பத்தாண்டுகளை நிறைவு செய்யும் அதே வேளையிலே, நவராத்திரி புண்ணிய காலத்தின் முதல் நாளுமாகவும் இருக்கும். மனதின் குரலின் இந்த நீண்டநெடிய பயணத்திலே பல கட்டங்களை என்னால் மறக்க இயலாது. மனதின் குரலில் கோடிக்கணக்கான நேயர்கள் நம்முடைய இந்தப் பயணத்தின் போது கூட்டாளிகளாக இருந்தார்கள், தொடர்ந்து எனக்குத் தோள் கொடுத்தும் வந்தார்கள். தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் தகவல்களை எனக்குத் திரட்டித் தந்தார்கள். மனதின் குரலின் நேயர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் உண்மையான சூத்திரதாரிகள். காரசாரமான விஷயம் இல்லையென்று சொன்னால், எதிர்மறை விஷயங்கள் இல்லையென்று சொன்னால், அந்த விஷயமோ, நிகழ்ச்சியோ அதிக கவனத்தைப் பெறாது என்று பொதுவாகவே ஒரு கருத்து உண்டு. ஆனால் ஆக்கப்பூர்வமான தகவல்களுக்காக நாட்டுமக்களிடத்திலே எத்தனை தாகம் இருக்கிறது, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், உத்வேகமளிக்கக்கூடிய எடுத்துக்காட்டுகள், நம்பிக்கையூட்டக்கூடிய சம்பவங்கள் ஆகியவற்றை மக்கள் எத்தனை பேரார்வத்தோடு அரவணைத்துக் கொள்கிறார்கள் என்பதை மனதின் குரலின் வெற்றி நிரூபித்துக் காட்டியிருக்கிறது. சகோரப் பறவை என்று ஒன்று உண்டு, இது மழைநீர்த்துளிகளை மட்டுமே பருகி உயிர் வாழுமாம். மக்களும் கூட இந்த சகோரப் பறவையைப் போலவே, தேசத்தின் சாதனைகளையும், மக்களின் சமூகரீதியான சாதனைகளையும் எந்த அளவுக்கு பெருமிதத்தோடு செவி மடுக்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் மனதின் குரலில் பார்த்தோம். மனதின் குரலின் பத்தாண்டுக்காலப் பயணம் எப்படிப்பட்டதொரு மாலையைத் தயாரித்திருக்கிறது என்று சொன்னால், இதன் ஒவ்வொரு பகுதியிலும் புதிய காதைகள், புதிய உயர்வுகள், புதிய ஆளுமைகள் இணைந்து கொண்டே வருகின்றன. நமது சமூகத்தின் சமூக உணர்வோடு கூட அரங்கேறும் செயல்களுக்கு மனதின் குரல் வாயிலாக கௌரவம் கிடைக்கிறது. அந்த வேளையிலே மனதின் குரலுக்காக வந்திருக்கும் கடிதங்கள் என் நெஞ்சையும் கூட பெருமிதத்தில் விம்மச் செய்கின்றன. நம்முடைய தேசத்திலே தான் எத்தனை திறமைசாலிகள் இருக்கின்றார்கள்!! அவர்களிடம் தேசம் மற்றும் சமூகத்திற்கு சேவை புரிய வேண்டும் என்று எத்தனை தாகம் இருக்கிறது!! சுயநலமற்ற தன்மையோடு சேவை செய்ய இவர்கள் தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்கின்றார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வேளையிலே என்னுள்ளும் ஆற்றல் பொங்குகிறது. மனதின் குரலின் இந்த மொத்தச் செயல்பாடும் என்னைப் பொறுத்த வரையில் எப்படிப்பட்டதென்றால், இது ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதற்கு ஒப்பானது. மனதின் குரலின் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு சம்பவத்தையும், ஒவ்வொரு கடிதத்தையும் நான் நினைத்துப் பார்க்கும் போது, மக்களாகிய மகேசர்கள் எனக்கு இறைவனாரின் வடிவங்கள், அவர்களை நான் தரிசனம் செய்கிறேன் என்றே நான் உணர்கிறேன்.சிஓபி-28-ல் 'பசுமைக் கடன்கள் திட்டம்' குறித்த உயர்நிலை நிகழ்வில் பிரதமர் உரையின் தமிழாக்கம்
December 01st, 07:22 pm
எனது சகோதரரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருமான ஷேக் முகமது பின் சயீத் அவர்களின் ஆதரவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உள்துறை அமைச்சகத்தின் மரம் நடும் பிரச்சாரம் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையைப் பாதுகாக்கும் திசையில் அனைவருக்கும் ஊக்கமளிக்கும்: பிரதமர்
August 19th, 11:19 am
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா ஒரு ட்விட்டர் பதிவில், உள்துறை அமைச்சகத்தின் 'அகில இந்திய மரம் வளர்ப்பு பிரச்சாரத்தின்' கீழ், 40 மில்லியன் மரக்கன்று நடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்தப் பிரச்சாரத்தை ஒரு முக்கியமான பங்களிப்பாக மாற்றியதற்காக அனைத்து சிஏபிஎஃப்களையும் திரு ஷா பாராட்டினார்.Despite hostilities of TMC in Panchayat polls, BJP West Bengal Karyakartas doing exceptional work: PM Modi
August 12th, 11:00 am
Addressing the Kshetriya Panchayati Raj Parishad in West Bengal via video conference, Prime Minister Narendra Modi remarked that the no-confidence motion tabled by the Opposition against the NDA government was defeated in the Lok Sabha. “The situation was such that the people of the opposition left the house in the middle of the discussion and ran away. The truth is that they were scared of voting on the no-confidence motion,” he said.PM Modi addresses at Kshetriya Panchayati Raj Parishad in West Bengal via VC
August 12th, 10:32 am
Addressing the Kshetriya Panchayati Raj Parishad in West Bengal via video conference, Prime Minister Narendra Modi remarked that the no-confidence motion tabled by the Opposition against the NDA government was defeated in the Lok Sabha. “The situation was such that the people of the opposition left the house in the middle of the discussion and ran away. The truth is that they were scared of voting on the no-confidence motion,” he said.