அக்டோபர் 16-ம் தேதி பிரதமர் ஆந்திரப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்
October 14th, 05:48 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, அக்டோபர் 16-ம் தேதி ஆந்திரப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்வார். நந்தையால் மாவட்டத்தின் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரமராம்பிகை மல்லிகார்ஜுன சுவாமி வர்லா தேவஸ்தானத்தில் முற்பகல் 11.15 மணிக்கு பிரதமர் பூஜை மற்றும் ஸ்வாமி தரிசனம் செய்வார். அதன் பிறகு பகல் 12.15 மணி அளவில் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி மையத்தை பிரதமர் நேரில் பார்வையிடுவார்.கர்நாடகா, தெலுங்கானா, பீகார், அசாம் மாநிலங்களுக்கு பயனளிக்கும் நான்கு ரயில்வே திட்டங்கள், குஜராத்தில் கட்ச்-சின் தொலைதூரப் பகுதிகளை இணைக்க ஒரு புதிய ரயில் பாதை ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
August 27th, 04:50 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் நான்கு திட்டங்களுக்கு மொத்தம் 12,328 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டங்களில் பின்வருவன அடங்கும்: -குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்
August 25th, 06:42 pm
இன்று, நீங்கள் அனைவரும் உண்மையிலேயே ஒரு அருமையான சூழலை உருவாக்கியுள்ளீர்கள். இந்த லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனக்கு எவ்வளவு அதிர்ஷ்டம். நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும், அது ஒருபோதும் போதாதுகுஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
August 25th, 06:15 pm
குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விநாயகர் சதுர்த்தியின் உற்சாகத்தில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். விநாயகரின் ஆசிகளுடன், குஜராத்தின் முன்னேற்றம் சார்ந்த பல வளர்ச்சித் திட்டங்களின் மங்களகரமான தொடக்கத்தை குறிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்களின் காலடியில் பல திட்டங்களை அர்ப்பணிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி சார்ந்த முயற்சிகளுக்காக அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.பிரதமர் திரு நரேந்திர மோடி தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடமை மாளிகையை (கர்த்தவ்ய பவன்) இம்மாதம் 6-ம் தேதி திறந்து வைக்கிறார்
August 04th, 05:44 pm
தில்லியில் உள்ள கடமைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள பதிய கடமை மாளிகையை பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 6-ம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு திறந்து வைக்கிறார். இதனையடுத்து கடமைப்பாதையில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் பிரதமர் உரையாற்ற உள்ளார்.எழுச்சிமிகு வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 23rd, 11:00 am
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக அமைச்சர்கள் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, மணிப்பூர் ஆளுநர் திரு அஜய் பல்லா அவர்களே, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு பேமா காண்டு அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சஹா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமங் அவர்களே, நாகாலாந்து முதலமைச்சர் திரு நெய்பியு ரியோ அவர்களே, மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா அவர்களே, அனைத்து தொழில் துறை தலைவர்களே, முதலீட்டாளர்களே, பெண்களே, தாய்மார்களே வணக்கம்!பிரதமர் திரு. நரேந்திர மோடி, எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார்
May 23rd, 10:30 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று புதுதில்லியின் பாரத் மண்டபத்தில் எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு வருகை தந்த அனைத்து பிரமுகர்களையும் அன்புடன் வரவேற்ற பிரதமர், வடகிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பாரத் மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்ற அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை நினைவு கூர்ந்த அவர், இன்றைய நிகழ்வு வடகிழக்கில் முதலீட்டின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார். இந்த உச்சிமாநாட்டிற்கு தொழில்துறை தலைவர்களின் குறிப்பிடத்தக்க வருகையை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள வாய்ப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார். அனைத்து அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஒரு செழிப்பான முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டினார். வடகிழக்குப் பிராந்தியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், செழிப்புக்குமான தமது உறுதிப்பாட்டை மீண்டும் அவர் எடுத்துரைத்தார்.மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமரின் பதிலின் ஆங்கில மொழிபெயர்ப்பு
February 04th, 07:00 pm
மாண்புமிகு குடியரசு தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். நேற்றும் இன்றும் இரவு வெகுநேரம் வரை, அனைத்து மாண்புமிகு எம்.பி.க்களும் இந்த நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தங்கள் கருத்துகளால் வளப்படுத்தினர். பல மாண்புமிகு அனுபவம் வாய்ந்த எம்.பி.க்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர், மேலும், ஜனநாயகத்தின் பாரம்பரியத்தைப் போலவே, தேவை இருந்த இடத்தில், பாராட்டு இருந்தது, ஒரு பிரச்சனை இருந்த இடத்தில், சில எதிர்மறை விஷயங்கள் இருந்தன, ஆனால் இது மிகவும் இயல்பானது! திரு. சபாநாயகர் அவர்களே, நாட்டு மக்கள் 14வது முறையாக இந்த இடத்தில் அமர்ந்து குடியரசு தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிக்க எனக்கு வாய்ப்பளித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம், எனவே, இன்று நான் மக்களுக்கு மிகுந்த மரியாதையுடன் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவையில் விவாதத்தில் பங்கேற்று விவாதத்தை வளப்படுத்திய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதில்
February 04th, 06:55 pm
மக்களவையில் இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்தார். அவையில் உரையாற்றிய பிரதமர், நேற்றும் இன்றும் விவாதங்களில் பங்கேற்ற அனைத்து மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புகளையும் பாராட்டினார். ஜனநாயகத்தின் பாரம்பரியம் என்பது தேவையான இடங்களில் பாராட்டு மற்றும் கூடவே சில எதிர்மறையான கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இது இயற்கையானது என்று பிரதமர் குறிப்பிட்டார். 14 ஆவது தடவையாக குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்க மக்கள் வாய்ப்பு வழங்கியதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், குடிமக்களுக்கு தனது மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவித்ததுடன், கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரையும் தங்கள் எண்ணங்களால் விவாதங்களைச் செழுமைப்படுத்தியதற்காக பாராட்டினார்.எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்வதற்கான வழிமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் –எத்தனால் விநியோக ஆண்டு 2024-25-க்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான எத்தனால் விலையில் திருத்தம்
January 29th, 03:04 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், மத்திய அரசின் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தின் கீழ், எத்தனால் விநியோக ஆண்டு 2024-25-க்காக 2024 நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கான எத்தனால் கொள்முதல் விலையை மாற்றியமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, 2024-25 எத்தனால் விநியோக ஆண்டிற்கான (2024 நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை) அதிக அடர்த்தி கொண்ட சர்க்கரைப்பாகு கழிவிலிருந்து பெறப்பட்ட எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்திற்கான எத்தனால் நிர்வாக விலை லிட்டருக்கு ரூ.56.58 லிருந்து ரூ.57.97 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2025-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 12th, 02:15 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான திருவாளர்கள் மன்சுக் மாண்டவியா அவர்களே, தர்மேந்திர பிரதான் அவர்களே, ஜெயந்த் சவுத்ரி அவர்களே, ரக்ஷா காட்ஸே அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, நாட்டின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வந்துள்ள எனது இளம் நண்பர்களே! இந்த பாரத் மண்டபம் இந்திய இளைஞர்களின் ஆற்றலாலும், சக்தியாலும் நிரம்பியுள்ளது. இன்று நாடு முழுவதும் சுவாமி விவேகானந்தரை நினைவுகூர்கிறது. அவருக்கு மரியாதை செலுத்தி வருகிறது. சுவாமி விவேகானந்தர் நாட்டின் இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இளைய தலைமுறையினர் மீது, புதிய தலைமுறையினர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று சுவாமி விவேகானந்தர் அடிக்கடி கூறுவார். எனது தொண்டர்கள் சிங்கங்களைப் போல், இளம் தலைமுறையிலிருந்து வருவார்கள். அவர்கள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காண்பார்கள் என்று அவர் கூறுவார். விவேகானந்தர் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தது போலவே, விவேகானந்தர் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் சொன்ன எல்லாவற்றிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்திய இளைஞர்களுக்காக அவர் என்ன நினைத்தாரோ, என்ன சொன்னாரோ அதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. உண்மையில், சுவாமி விவேகானந்தர் இன்று நம்மிடையே இருந்திருந்தால், 21-ம் நூற்றாண்டு இளைஞர்களின் விழிப்புணர்வு பெற்ற சக்தியைக் கண்டு, உங்களின் தீவிர முயற்சிகளைப் பார்த்து, பாரதத்தின் புதிய நம்பிக்கை, புதிய சக்தி ஆகியவற்றால் அவர் பூரிப்படைந்திருப்பார். புதிய கனவுகளுக்கான விதைகளை விதைத்திருப்பார்.வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
January 12th, 02:00 pm
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து 3,000 துடிப்பான இளம் தலைவர்களுடன் அவர் உரையாடலில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய இளைஞர்களின் துடிப்பான சக்தி, பாரத் மண்டபத்திற்கு உயிர்ப்பையும் சக்தியையும் கொண்டு வந்திருப்பதை எடுத்துரைத்தார். நாட்டின் இளைஞர்கள் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருந்த சுவாமி விவேகானந்தரை ஒட்டுமொத்த தேசமும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். தமது சீடர்கள் இளைய தலைமுறையிலிருந்து வருவார்கள் என்றும், அவர்கள் சிங்கங்களைப் போல ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்ப்பார்கள் என்றும் சுவாமி விவேகானந்தர் நம்பினார் என்றும் அவர் கூறினார். சுவாமிஜி இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்ததைப் போல, சுவாமிஜி மீதும், அவரது நம்பிக்கைகள் மீதும் தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் கூறினார். குறிப்பாக இளமை குறித்த அவரது பார்வை குறித்து அவரை முழுமையாக நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார். சுவாமி விவேகானந்தர் இன்று நம்மிடையே இருந்தால், 21-ம் நூற்றாண்டின் இளைஞர்களின் விழிப்புற்ற சக்தியையும் துடிப்பான முயற்சிகளையும் காணும் போது அவர் புதிய நம்பிக்கையால் மகிழ்வார் என்று பிரதமர் கூறினார்.இந்தியா - இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு
December 16th, 03:26 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர்.இலங்கை அதிபர் உடனிருந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
December 16th, 01:00 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அதிபர் திசநாயகவை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபராக உங்களின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் திசநாயகவின் வருகை எங்கள் உறவுகளில் புதிய உத்வேகத்தையும் சக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டாண்மைக்கான எதிர்கால தொலைநோக்கை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் பொருளாதார கூட்டணியில் முதலீடு சார்ந்த வளர்ச்சி, இணைப்பு ஆகியவற்றுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எங்கள் கூட்டணியின் முக்கிய தூண்களாக கட்டமைப்பு, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே மின்சாரத் தொகுப்பு இணைப்பு மற்றும் பல்பொருள் பெட்ரோலிய குழாய்கள் அமைப்பதை நோக்கி நாங்கள் பணியாற்றுவோம். சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் துரிதப்படுத்தப்படும். இதற்கும் கூடுதலாக, இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவ இயற்கை எரிவாயு வழங்கப்படும். இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற இரு தரப்பினரும் முயற்சி செய்யப்படும்.இந்தியாவும் சவுதி அரேபியாவும் முதலீடுகளுக்கான உயர்மட்ட பணிக்குழுவின் முதல் கூட்டத்தை நடத்தின
July 28th, 11:37 pm
முதலீடுகளுக்கான இந்திய-சவுதி அரேபிய உயர்மட்ட பணிக்குழுவின் முதல் கூட்டம், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா மற்றும் சவுதி எரிசக்தி அமைச்சர் மேதகு இளவரசர் திரு அப்துல் அஜீஸ் பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது.அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்
March 12th, 10:00 am
குஜராத் ஆளுநர் ஆச்சார்யா திரு. தேவ்ரத் அவர்களே, குஜராத்தின் பிரபலமான முதலமைச்சர் திரு. பூபேந்திரபாய் படேல் அவர்களே, அமைச்சரவையில் எனது சகாவான ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாவும், குஜராத் பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான திரு. சி.ஆர். பாட்டீல் அவர்களே, நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த அனைத்து ஆளுநர்களே, மதிப்பிற்குரிய முதலமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மற்றும் நான் திரையில் காணும் சகாக்களே, இன்று 700 க்கும் மேற்பட்ட இடங்களில் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். அநேகமாக ரயில்வே வரலாற்றில் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய நிகழ்வு நடந்திருக்காது. 100 ஆண்டுகளில் இது முதல் முறை. இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக ரயில்வேயையும் நான் பாராட்டுகிறேன்.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.1,06,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
March 12th, 09:30 am
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடத்தின் இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் ரூ.1,06,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில்வே கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. 10 புதிய வந்தே பாரத் ரயில்களையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.ஒடிசா மாநிலம் ஜஜ்பூரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 05th, 05:30 pm
ஒடிசா ஆளுநர் திரு. ரகுபர் தாஸ் அவர்களே, முதலமைச்சர் திரு. நவீன் பட்நாயக் அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களே, திரு. பிஸ்வேஸ்வர் டுடு அவர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!ஒடிசா மாநிலம் சண்டிகோலில் ரூ.19, 600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
March 05th, 01:44 pm
ஒடிசா மாநிலம் சண்டிகோலில் ரூ. 19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். எண்ணெய், எரிவாயு, ரயில்வே, சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், அணுசக்தி உள்ளிட்ட துறைகளுடன் இந்தத் திட்டங்கள் தொடர்புடையவையாகும்.தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
March 05th, 10:39 am
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகா ஜி.கிஷன் ரெட்டி அவர்களே, தெலங்கானா அரசின் அமைச்சர்களே, கொண்டா சுரேகா அவர்களே, கே.வெங்கட் ரெட்டி அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாவான டாக்டர் கே.லக்ஷ்மன் அவர்களே மற்றும் மதிப்புமிக்க பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!