மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக மூன்று சதவீத அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
October 01st, 03:06 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றின் கூடுதல் தவணைத் தொகையை 01.07.2025 முதல் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை ஊதியம் / ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 55% விகிதத்தை விட 3% அதிகமாகும்.நியூஸ் 18 தொலைக்காட்சி ஏற்பாடு செய்த எழுச்சிமிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
April 08th, 08:30 pm
இந்த உச்சிமாநாட்டின் மூலம் நம் நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பளித்ததற்காக நியூஸ் 18 நிறுவனத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் நாட்டில் உள்ள இளைஞர்களின் விருப்பங்களுடன் இணைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில், விவேகானந்தர் பிறந்த தினத்தன்று, வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த இளம் தலைவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இங்குள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர்களின் கனவுகளை மனவுறுதியின் வலிமையையும், வளர்ந்த நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கான அவர்களது ஆர்வத்தையும் காண முடிவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த அமிர்த காலம் இளம் தலைமுறையினருக்கு உத்வேகத்தையும், மன வலிமையையும் அளிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சிமிகு இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
April 08th, 08:15 pm
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சி மிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டின் மூலம் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தற்காக அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் விருப்பங்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் இந்த உச்சிமாநாடு நடத்தப்படுவதற்குப் பாராட்டு தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தன்று பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 'வளர்ச்சியடைந்த இந்தியாவின் தலைவர்கள் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை சுட்டிகாட்டிய அவர், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அனைத்து நிலைகளிலும் அது குறித்த தொடர் விவாதங்கள் சிறந்த சிந்தனைகளை வளர்க்க உதவும் என்று கூறினார். இது அமிர்த கால தலைமுறையினருக்கு உற்சாகமூட்டும் வகையிலும், வழிகாட்டியாகவும், திகழும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த உச்சி மாநாட்டின் வெற்றிக்கு தனது நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.Cabinet approves additional Dearness Allowance for Central Govt employees & Dearness Relief for pensioners from 01.01.2025
March 28th, 04:15 pm
The Union Cabinet chaired by PM Modi approved additional instalment of Dearness Allowance to Central Government employees and Dearness Relief to pensioners w.e.f. 01.01.2025. This will benefit about 48.66 lakh Central Government employees and 66.55 lakhs pensioners.