பீகார் மாநிலம் காராக்கட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

May 30th, 11:29 am

பீகார் ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான் அவர்களே, முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாக்களான திரு ஜித்தன் ராம் மாஞ்சி அவர்களே, திரு லாலன் சிங் அவர்களே, திரு கிரிராஜ் சிங் அவர்களே, திரு சிராக் பாஸ்வான் அவர்களே, நித்யானந்த ராய் அவர்களே, சதீஷ் சந்திர துபே அவர்களே, மாநில துணை முதலமைச்சர் திரு சாம்ராட் சவுத்ரி அவர்களே, விஜயகுமார் சின்ஹா அவர்களே, இதர அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே, பீகாரின் எனது அருமை சகோதர சகோதரிகளே!

பீகாரின் காராகட்டில் ரூ.48,520 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

May 30th, 10:53 am

பீகாரின் காராகட்டில் இன்று ரூ.48,520 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்தப் புனிதபூமியில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் கடமையை தாம் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். ரூ.48,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதையும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்ததையும் அவர் எடுத்துரைத்தார். தம்மை அசீர்வதிப்பதற்கு வந்துள்ள பெருந்திரளான பீகார் மக்களுக்கு தமது நன்றியை தெரிவித்த பிரதமர், மிக உயர்ந்த அளவில் அவர்களின் ஆதரவை தாம் எப்போதும் பெற்றிருப்பதாக கூறினார். பீகாரின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் தமது பாராட்டுகளையும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி சிக்கிம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்

May 28th, 12:10 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சிக்கிம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்.