புனித பிரகாஷ் உத்சவத்தையொட்டி ஸ்ரீ குரு கோவிந்த் சிங்குக்கு பிரதமர் மரியாதை

December 27th, 12:06 pm

புனித பிரகாஷ் உத்சவத்தையொட்டி, ஸ்ரீ குரு கோவிந்த் சிங்குக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். ஸ்ரீ குரு கோவிந்த் சிங் தைரியம், கருணை மற்றும் தியாகத்தின் உருவமாகத் திகழ்கிறார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்க்கையும் போதனைகளும் உண்மை, நீதி, நேர்மைக்காக நிற்கவும் மனித மாண்பைப் பாதுகாக்கவும் நம்மை ஊக்குவிக்கின்றன. ஸ்ரீ குரு கோவிந்த் சிங்கின் தொலைநோக்குப் பார்வை பல தலைமுறைகளை சேவை மற்றும் தன்னலமற்ற கடமையை நோக்கித் தொடர்ந்து வழிநடத்துகிறது, என்று திரு மோடி கூறியுள்ளார்.

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை செலுத்தினார்

January 17th, 08:13 am

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியதுடன், அவரது துணிச்சலையும் இரக்க குணத்தையும் நினைவுகூர்ந்துள்ளார். ஸ்ரீ குரு கோவிந்த் சிங் பற்றிய தனது கருத்துகள் அடங்கிய காணொளியையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.