உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 28th, 09:36 pm

உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மீத் சிங் அவர்களே, முதல்வர் திரு புஷ்கர் தாமி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திருமிகு ரக்ஷா கட்சே அவர்களே, உத்தராகண்ட் சட்டமன்ற சபாநாயகர் திருமிகு ரிது கந்தூரி அவர்களே, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் திருமிகு ரேகா ஆர்யா அவர்களே, காமன்வெல்த் விளையாட்டுகள் தலைவர் திரு கிறிஸ் ஜென்கின்ஸ் அவர்களே. ஐ.ஓ.ஏ தலைவர் திருமிகு பி.டி. உஷா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திர பட் அவர்களே, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள வீரர்களே, ஏனைய விருந்தினர்களே!

டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

January 28th, 09:02 pm

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர், உத்தராகண்ட் இன்று இளைஞர்களின் சக்தியால் பிரகாசமாக உள்ளது என்றார். பாபா கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அன்னை கங்கையின் ஆசீர்வாதத்துடன் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன என்றும் அவர் கூறினார். உத்தராகண்ட் மாநிலம் உருவான 25-வது ஆண்டு இது என்று குறிப்பிட்ட திரு மோடி, நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் இந்த இளம் மாநிலத்தில் தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார். தேசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்தப் பதிப்பில் பல உள்ளூர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாடு இருப்பதால் 'பசுமை விளையாட்டுகள்' என்ற கருப்பொருளில் இங்கு போட்டிகள் நடப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தக் கருப்பொருளைப் பற்றி மேலும் விவரித்த பிரதமர், கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் கூட மின்னணுக் கழிவுகளால் தயாரிக்கப்பட்டவை என்றும், பதக்கம் வென்ற ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரக்கன்று நடப்படும் என்றும், இது ஒரு சிறந்த முயற்சி என்றும் குறிப்பிட்டார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக உத்தராகண்ட் அரசுக்கும், மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

பாராலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் நவ்தீப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

September 08th, 08:33 am

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 41 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் நவ்தீப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக்கில் மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை சிம்ரன் சர்மாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

September 08th, 08:31 am

பாலிஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 200 மீட்டர் டி12 பிரிவு ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை சிம்ரன் சர்மாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக் ஆடவர் குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹொகடோ ஹோடோஷே சேமாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

September 07th, 09:04 am

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் குண்டு எறிதல் எஃப்57 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் ஹொகடோ ஹோடோஷே சேமாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தடகள வீரர் பிரவீன் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

September 06th, 05:22 pm

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதலில் டி64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் பிரவீன் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெண்கலப் பதக்கம் வென்ற ஜூடோ வீரர் கபில் பார்மருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து

September 05th, 10:26 pm

தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக்கில் ஆடவர் 60 கிலோ ஜூடோ போட்டியின் ஜே1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கபில் பார்மருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் கிளப் எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரணவ் சூர்மாவுக்கு பிரதமர் வாழ்த்து

September 05th, 08:05 am

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் கிளப் எறிதல் எஃப் 51 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் பிரணவ் சூர்மாவின் விடாமுயற்சி மற்றும் மன உறுதியைப் பாராட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில்ஆடவர் கிளப் எறிதல் பிரிவில் தங்கம் வென்ற தரம்பீருக்கு பிரதமர் வாழ்த்து

September 05th, 07:59 am

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆண்கள் கிளப் எறிதல் எஃப் 51 பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் தரம்பீருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்திருப்பது குறித்து பிரதமர் பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்

September 04th, 04:33 pm

பாராலிம்பிக் போட்டிகளில் நமது நாட்டிற்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று இந்திய பாராலிம்பிக் அணி சாதனை படைத்திருப்பது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி பெருமிதமும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தை பாராட்டியுள்ள திரு மோடி, ஒவ்வொரு வீரரையும் அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக புகழ்ந்துரைத்துள்ளார்.

ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சச்சின் கிலாரிக்கு பிரதமர் வாழ்த்து

September 04th, 03:30 pm

பாரிஸ் பாராலிம்பிக் 2024-ல் ஆடவர் குண்டு எறிதல் F46 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சச்சின் கிலாரிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து

September 04th, 10:31 am

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சரத் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து

September 04th, 10:27 am

பாரிஸ் பாராலிம்பிக் 2024-ல் உயரம் தாண்டுதல் T63 பிரிவுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சரத் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெண்கலப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து

September 04th, 10:25 am

பாரிஸ் பாராலிம்பிக் 2024-ல் ஆடவர் ஈட்டி எறிதல் F46 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெள்ளிப் பதக்கம் வென்ற அஜீத் சிங்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து

September 04th, 10:22 am

பாரீஸ் பாராலிம்பிக் 2024-ல் வெள்ளிப் பதக்கம் வென்ற அஜீத் சிங்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்46 பிரிவில் அஜீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு பிரதமர் வாழ்த்து

September 04th, 06:40 am

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை நித்யா ஸ்ரீ சிவனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து

September 03rd, 10:53 am

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் எஸ்.எச்.6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் ஆன்டிலுக்கு பிரதமர் வாழ்த்து

September 03rd, 12:01 am

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் சுமித் ஆன்டில் என்பவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, ராகேஷ் குமார் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

September 02nd, 11:40 pm

தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகளில் கலப்பு அணி சுற்று வில்வித்தை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார் ஆகியோர் வெளிப்படுத்திய குழு உணர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

பாரீஸ் பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீரர் சுஹாஸ் யதிராஜுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

September 02nd, 11:35 pm

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்.4 பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யதிராஜுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.