The words of the Gita not only guide individuals but also shape the direction of the nation's policies: PM Modi in Udupi, Karnataka
November 28th, 11:45 am
During his address at the Laksha Kantha Gita Parayana programme at Sri Krishna Matha in Udupi, PM Modi highlighted the special connection between Gujarat and Udupi. He remarked that Jagadguru Shri Madhvacharya, the pioneer of India’s Dvaita philosophy, is a shining light of Vedanta. The PM said that the entire life of Bhagwan Shri Krishna and every chapter of the Gita conveys the message of action, duty and welfare and announced nine resolutions for every citizen to adopt.கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் நடைபெறும் லட்ச காந்த கீதை பாராயண நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 28th, 11:30 am
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக தரிசனத்தின் மூலம் கிடைக்கும் திருப்தி, ஸ்ரீமத் பகவத் கீதையின் மந்திரங்களின் ஆன்மீக அனுபவம், மரியாதைக்குரிய பல துறவிகள் மற்றும் குருக்களின் மத்தியில் இருப்பது ஆகியவை தனக்கு கிடைத்துள்ள பெரும் பாக்கியம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் இன்று (28.11.2025) நடைபெற்ற லட்ச கந்த கீதை பாராயண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றியபோது இதை தெரிவித்தார்.இவை அனைத்தும் எண்ணற்ற ஆசிகளைப் பெறுவதற்கு ஒப்பானது என்று அவர் குறிப்பிட்டார்.Congress kept misleading ex-servicemen with false promises of One Rank One Pension: PM Modi in Aurangabad, Bihar
November 07th, 01:49 pm
Continuing his high-voltage election campaign, PM Modi today addressed a massive public meeting in Aurangabad. He said that Bihar has created history in the very first phase of voting. The PM noted that yesterday’s polling has recorded the highest turnout ever in Bihar, with nearly 65% of voters participating. He remarked that this clearly shows that the people of Bihar themselves have taken the lead in ensuring the return of the NDA government.PM Modi campaigns in Bihar’s Aurangabad and Bhabua
November 07th, 01:45 pm
Continuing his high-voltage election campaign, PM Modi today addressed two massive public meetings in Aurangabad and Bhabua. He said that Bihar has created history in the very first phase of voting. The PM noted that yesterday’s polling recorded the highest turnout ever in the state, with nearly 65% voter participation. He remarked that this clearly shows that the people of Bihar have themselves taken the lead in ensuring the return of the NDA government.மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில் வளர்ச்சிப்பணிகளை தொடங்கிவைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 17th, 11:20 am
அறிவின் கடவுளும், தார் போஜ்சாலாவின் அன்னையுமான வாக்தேவியின் பாதங்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இன்றைய தினம் திறன் மற்றும் கட்டுமானத்தின் கடவுளான பகவான் விஸ்வகர்மாவின் பிறந்த தினமாகும். பகவான் விஸ்வகர்மாவுக்கு நான் தலைவணங்குகிறேன். விஸ்வகர்மா ஜெயந்தி விழாவான இன்று தங்களின் திறன்கள் மூலம் தேசக் கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகளை மிகுந்த மதிப்புடன் நான் வணங்குகிறேன்.மத்தியப் பிரதேசத்தின் தாரில் பிரதமர் திரு நரேந்திர மோடி வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்
September 17th, 11:19 am
பிரதமர் திரு நரேந்திர மோடி மத்தியப்பிரதேசத்தின் தாரில் இன்று வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய பிரதமர், தார் போஜ்சலாவின் மரியாதைக்குரிய அன்னை வக்தேவியின் காலடியில் வணங்குவதாக கூறினார். படைப்பின் தெய்வமான விஸ்வகர்மாவின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட திரு மோடி, விஸ்வகர்மாவுக்கு வணக்கம் செலுத்தினார்.25-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 01st, 10:14 am
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள தமக்கு உற்சாக வரவேற்பு அளித்து சிறப்பாக உபசரித்த சீன அதிபர் திரு ஜி ஜிங்பிங் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25-வது உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.
September 01st, 10:00 am
சீனாவின் தியான்ஜின் நகரில் 2025, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25-வது உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சிக்கான திட்டமிடல், உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிதிசார் ஒத்துழைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக் குறித்து இக்கூட்டத்தில் ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டது.‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்’ – ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சுதேசி பெருமையுடன் பண்டிகைகளைக் கொண்டாட வலியுறுத்துகிறார்.
August 31st, 11:30 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமக்களுக்கு பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு நிகழ்வுகள், சூரிய சக்தி, ‘ஆபரேஷன் போலோ’ மற்றும் இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய பரவல் போன்ற முக்கியமான தலைப்புகளையும் அவர் தொட்டார். பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும், தூய்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் குடிமக்களுக்கு நினைவூட்டினார்.குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்
August 25th, 06:42 pm
இன்று, நீங்கள் அனைவரும் உண்மையிலேயே ஒரு அருமையான சூழலை உருவாக்கியுள்ளீர்கள். இந்த லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனக்கு எவ்வளவு அதிர்ஷ்டம். நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும், அது ஒருபோதும் போதாதுகுஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
August 25th, 06:15 pm
குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விநாயகர் சதுர்த்தியின் உற்சாகத்தில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். விநாயகரின் ஆசிகளுடன், குஜராத்தின் முன்னேற்றம் சார்ந்த பல வளர்ச்சித் திட்டங்களின் மங்களகரமான தொடக்கத்தை குறிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்களின் காலடியில் பல திட்டங்களை அர்ப்பணிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி சார்ந்த முயற்சிகளுக்காக அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.பீகார் மாநிலம் கயாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 22nd, 12:00 pm
மாண்புமிகு பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அவர்களே; பிரபலமான முதல்வர் நிதிஷ் குமார் அவர்களே; மத்திய அமைச்சரவையில் எனது சகாக்கள், ஜிதன் ராம் மஞ்சி அவர்களே, ராஜீவ் ரஞ்சன் சிங் அவர்களே, சிராக் பாஸ்வான் அவர்களே, ராம் நாத் தாக்கூர் அவர்களே, நித்யானந்த் ராய் அவர்களே, சதீஷ் சந்திர துபே அவர்களே, ராஜ் பூஷண் சவுத்ரி அவர்களே; துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி அவர்களே மற்றும் விஜய் குமார் சின்ஹா அவர்களே; பீகார் அரசின் அமைச்சர்களே; என் சக நாடாளுமன்ற உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹா அவர்களே; இதர நாடாளுமன்ற உறுப்பினர்களே மற்றும் பீகாரின் எனது அன்பான சகோதர சகோதரிகளே!பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநிலம் கயாவில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார்
August 22nd, 11:20 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் கயாவில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற திட்டங்களையும் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், விஷ்ணுபாத் கோவில் அமைந்துள்ள மகத்தான இடமாகவும், ஞானம், சுதந்திரம் ஆகியவற்றுக்கான புனிதத் தலமாகவும் திகழும் கயாவிற்கு, வணக்கம் செலுத்துவதுடன் அங்கு வசிக்கும் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். ஆன்மீகம் மற்றும் அமைதிக்கான தலமாக கயா திகழ்கிறது என்று அவர் கூறினார். இந்தப் புனிதமான மண்ணில் புத்தர் ஞானோதயம் பெற்று உன்னத நிலையை அடைந்ததாகக் குறிப்பிட்டார். கயா நகரம் வளமான மற்றும் தொன்மையான ஆன்மீகம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வாழ்த்து தெரிவிக்கும் போது கயாவை மிகுந்த மரியாதையுடன் குறிப்பிடுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இத்தகைய உணர்வுபூர்வமான வகையில் மரியாதை செலுத்துவதற்காக பீகார் மாநில அரசுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். மத்திய அரசும், பீகார் மாநில அரசும், கயாவின் விரைவான வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள்
August 15th, 03:52 pm
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தில்லி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செங்கோட்டையில் 103 நிமிடங்கள் நீடித்த திரு நரேந்திர மோடியின் உரை, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான ஒரு செயல் திட்டத்தை வழங்குவதாக அமைந்தது. மிக நீண்ட மற்றும் தீர்க்கமான உரையாகும். பிரதமரின் உரை, தன்னம்பிக்கை, புதுமை, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. மற்றவர்களைச் சார்ந்திருக்கும் ஒரு தேசத்திலிருந்து உலகளவில் நம்பிக்கையான, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய, பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்ட நாடாக மாறும் இந்தியாவின் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 15th, 07:00 am
இந்த மாபெரும் சுதந்திர தின விழா நமது நாட்டு மக்களின் 140 கோடி தீர்மானங்களின் கொண்டாட்டமாகும். இந்த சுதந்திர தின விழா கூட்டு சாதனைகளின் தருணம், பெருமையின் தருணம். நமது இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன. தேசம் தொடர்ந்து ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்தி வருகிறது. இன்று, 140 கோடி இந்தியர்கள் மூவண்ணக் கொடியின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். பாலைவனங்கள், இமயமலைச் சிகரங்கள், கடற்கரைகள், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரே எதிரொலி, ஒரே ஆரவாரம். நம் தாய்நாட்டின் புகழ், உயிரை விட நமக்கு மிகவும் மேலானது.டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற 79வது சுதந்திர தினத்தின் காட்சிகள்
August 15th, 06:45 am
79வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி தனது உரையில், அரசியலமைப்பு சபை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 2047க்குள் ஒரு விக்ஸித் பாரதத்தை (வளர்ந்த இந்தியா) அடைவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய முயற்சிகளான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனா, தேசிய விளையாட்டுக் கொள்கை மற்றும் சுதர்ஷன் சக்ரா மிஷன் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.பிலிப்பைன்ஸ் அதிபருடனான செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட ஊடக செய்தி
August 05th, 11:06 am
முதலாவதாக, இந்தியாவிற்கு அதிபர் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். இந்த ஆண்டு, இந்தியாவும் பிலிப்பைன்ஸும் தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன. இந்த சூழலில், இந்தப் பயணம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நமது தூதரக உறவுகள் சமீபத்தியவை என்றாலும், நமது நாகரிக தொடர்பு பண்டைய காலத்துடன் தொடர்புடையது. ராமாயணத்தின் பிலிப்பைன்ஸ் பதிப்பு - மஹாராடியா லாவானா நமது ஆழமான வேரூன்றிய கலாச்சார பிணைப்புக்கு உள்ள சான்றாகும்.உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமரின் உரையின் தமிழாக்கம்
August 02nd, 11:30 am
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு கேசவ் பிரசாத் மௌரியா அவர்களே, திரு பிரஜேஷ் பதக் அவர்களே, வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எங்களுடன் இணைந்திருக்கும் ஆளுநர்களே, அமைச்சர்களே, உத்தரப்பிரதேச பாஜக தலைவர் திரு பூபேந்திர சிங் சௌத்ரி அவர்களே, நாடுளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரும் கே, என் அன்பான விவசாய சகோதர சகோதரிகளே, குறிப்பாக எனது எஜமானர்களான காசி மக்களே!உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் ரூ.2,200 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்
August 02nd, 11:00 am
திரு.நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, புனிதமான சாவான் மாதத்தில் வாரணாசியைச் சேர்ந்த குடும்பங்களைச் சந்தித்தது குறித்த மன நிறைவை வெளிப்படுத்தினார். வாரணாசி மக்களுடனான தமது ஆழமான உணர்ச்சிபூர்வமான தொடர்பை எடுத்துரைத்த திரு மோடி, நகரத்தின் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தமது மரியாதைக்குரிய வாழ்த்துகளைத் தெரிவித்தார். புனிதமான சாவான் மாதத்தில் காணொலி மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் இணைவதில் திரு மோடி திருப்தி தெரிவித்தார்.We will reduce terrorists to dust, their handlers will face unimaginable punishment: PM Modi in Lok Sabha
July 29th, 05:32 pm
Prime Minister Narendra Modi, speaking in the Lok Sabha during the special discussion on Operation Sindoor, strongly defended the military action taken in response to the April 22 terror attack in Pahalgam. He took sharp aim at the Congress, accusing it of undermining the morale of the armed forces. “India received support from across the world, but it is unfortunate that the Congress could not stand with the bravery of our soldiers,” the Prime Minister said.