இந்தியா-தாய்லாந்து உத்திசார் கூட்டாண்மையை நிறுவுவதற்கான கூட்டுப் பிரகடனம்

April 04th, 07:29 pm

2025 ஏப்ரல் 03-04 தேதிகளில், இந்திய பிரதமர் மேதகு திரு. நரேந்திர மோடி தாய்லாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, தாய்லாந்து பிரதமர் மேதகு திருமிகு பெடோங்டார்ன் ஷினவத்ரா அவர்களின் அழைப்பின் பேரில் பாங்காக்கில் நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்றார். பாங்காக்கில் உள்ள அரசு இல்லத்தில் பிரதமர் திரு மோடிக்கு திருமிகு ஷினவத்ரா பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார்.

Prime Minister’s visit to Wat Pho

April 04th, 03:36 pm

PM Modi with Thai PM Paetongtarn Shinawatra, visited Wat Pho, paying homage to the Reclining Buddha. He offered ‘Sanghadana’ to senior monks and presented a replica of the Ashokan Lion Capital. He emphasized the deep-rooted civilizational ties between India and Thailand, strengthening cultural bonds.

தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு

April 03rd, 08:42 pm

இந்தியா மற்றும் தாய்லாந்து இடையேயான ஒட்டுமொத்த இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். அரசியல் பரிமாற்றங்கள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மை, உத்திசார் ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். அவ்வாறு செய்யும்போது, இணைப்பு, சுகாதாரம், அறிவியல் & தொழில்நுட்பம், புதிய தொழில்கள், கண்டுபிடிப்புகள், டிஜிட்டல், கல்வி, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ஒத்துழைப்புகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர். ஆள்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சைபர் மோசடிகள் உள்ளிட்ட நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். பிம்ஸ்டெக், ஆசியான் மற்றும் மேகாங் கங்கா ஒத்துழைப்பு உள்ளிட்ட துணை பிராந்திய, பிராந்திய மற்றும் பலதரப்பு அமைப்புகளில் நெருக்கமான ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வழிகள் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு பிரதமர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பிரதமர் தாய்லாந்து பிரதமருடன் கூட்டாக வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

April 03rd, 03:01 pm

எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காகப் பிரதமர் ஷினவத்ராவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்லாந்து, பாங்காக் சென்றடைந்தார் பிரதமர் மோடி

April 03rd, 11:01 am

பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தின் பாங்காக்கிற்கு வந்தார். அவர் BIMSTEC உச்சி மாநாட்டில் பங்கேற்பார். இந்த பயணத்தின் போது பிரதமர் பீடோங்டார்ன் ஷினவத்ராவுடனும் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார்.

தாய்லாந்து, இலங்கை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கை

April 03rd, 06:00 am

பிரதமர் திரு பெடோங்டாரன் ஷினவத்ராவின் அழைப்பை ஏற்று, அரசுமுறைப் பயணமாகவும், 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும் நான் இன்று தாய்லாந்து புறப்படுகிறேன்.

2025 ஏப்ரல் 03-06 வரை தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு பிரதமரின் பயணம்

April 02nd, 02:00 pm

பாங்காக்கில் நடைபெறும் 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி (ஏப்ரல் 3-4, 2025) தாய்லாந்துக்குச் செல்கிறார். அதன் பிறகு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார் (ஏப்ரல் 4-6, 2025).

இந்தியாவின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த தாய்லாந்து பிரதமருக்கு,பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார்

January 26th, 10:20 pm

இந்தியாவின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த தாய்லாந்து பிரதமர் திருமதி படோங்டார்ன் ஷினவத்ராவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து பிரதமர் பெடோங்டர்ன் ஷினவத்ராவின் செயலுக்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

October 30th, 09:39 pm

தாய்லாந்து பிரதமர் பெடோங்டர்ன் ஷினவத்ராவின் செயலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேதகு பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா, பாங்காக்கில் குட்டி இந்தியாவில் உள்ள பஹுரத்தில் அற்புதமான தாய்லாந்து தீபாவளி விழா 2024-ஐ இன்று தொடங்கி வைத்தார். அற்புதமான தாய்லாந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான கலாச்சார பிணைப்பை ஆழப்படுத்தும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு

October 11th, 12:41 pm

2024, அக்டோபர் 11 அன்று, வியன்டியானில், கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் இடையே, தாய்லாந்து பிரதமர் திருமதி பெடோங்டார்ன் ஷினவத்ராவைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். இரு பிரதமர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

தாய்லாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி பெடோங்டர்ன் ஷினவத்ராவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

August 18th, 11:53 am

தாய்லாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி பெடோங்டர்ன் ஷினவத்ராவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாகரிகம், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பு என்ற வலுவான அடித்தளத்தின் மீதான, இந்தியா- தாய்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.