குடிமை விருதுகள் விழா-II-ல் பிரதமர் கலந்து கொண்டார்

May 28th, 09:27 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, பத்ம விருதுகள் வழங்கப்பட்ட குடிமை விருதுகள் விழா-II கலந்து கொண்டார். பத்ம விருது பெற்றவர்கள் நமது சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர் என்றும், பத்ம விருது பெற்றவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் மிகவும் ஊக்கமளிக்கின்றன என்றும் திரு மோடி கூறினார்.

சிவானந்த பாபாவின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

May 04th, 10:58 am

காசியைச் சேர்ந்தவரும் பிரபல யோகா பயிற்சியாளருமான சிவானந்த பாபாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

This is the right time to Create In India, Create For The World: PM Modi at WAVES Summit

May 01st, 03:35 pm

At the inaugural address of WAVES 2025, PM Modi called it a landmark moment for the global creative community. He emphasized that the summit unites over 100 nations through storytelling, music, gaming, and innovation, showcasing India's leadership in culture and creativity.

பிரதமர் திரு நரேந்திர மோடி வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்

May 01st, 11:15 am

மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் இந்தியாவின் முதலாவது உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் மாநில தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். அனைத்து சர்வதேச பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் படைப்பாற்றல் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் வந்திருப்பதை குறிப்பிட்ட பிரதமர், இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கலைஞர்கள், புதுமைப் படைப்பாளர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் திறமையையும், படைப்பாற்றலையும் கொண்ட உலகளாவிய அமைப்புக்கு அடித்தளம் அமைக்க ஒன்றிணைந்துள்ளனர் என்று அவர் கூறினார். வேவ்ஸ் என்பது ஒரு சுருக்கப்பெயர் மட்டுமே அல்ல என்றும், இது கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொடர்பைக் குறிக்கும் ஒரு அலை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த உச்சிமாநாடு திரைப்படங்கள், இசை, கேமிங், அனிமேஷன், கதைசொல்லல் ஆகியவற்றின் விரிவான உலகத்தை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களை ஒருங்கிணைக்கவும் ஒத்துழைத்து செயல்படவும் உலகளாவிய தளத்தை இது வழங்குகிறது என அவர் கூறினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவரையும் பாராட்டிய பிரதமர், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார்.

குடிமை விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்றார்

April 28th, 09:46 pm

பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் உள்ள தலைசிறந்த நபர்கள் அவர்களின் சேவை மற்றும் சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டதாக திரு மோடி கூறினார்.

2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

January 25th, 09:27 pm

2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விருது பெறும் ஒவ்வொருவரும் கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் புதுமை ஆகியவற்றிற்கு இணையாக இருப்பதாகவும், இது எண்ணற்றவர்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பத்ம விருது பெற்றவரும், புகழ்பெற்ற தாவரவியலாளருமான டாக்டர் கே.எஸ். மணிலால் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

January 01st, 10:29 pm

பத்ம விருது பெற்றவரும் புகழ்பெற்ற தாவரவியலாளருமான டாக்டர் கே.எஸ். மணிலால் மறைவிற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.