குஜராத் மாநிலம் ஹன்சால்பூரில் பசுமை போக்குவரத்து வாகனத் திட்டங்களைத் தொடங்கிவைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 26th, 11:00 am
மக்கள் செல்வாக்குமிக்க குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் திரு கீச்சி ஒனோ சான் அவர்களே, சுசுகி மோட்டார் நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசுகி சான் அவர்களே, மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஹிசாஷி தக்கூச்சி சான் அவர்களே, தலைவர் ஆர் சி பார்கவா அவர்களே, ஹன்சால்பூர் தொழிற்சாலையின் ஊழியர்களே, சிறப்புமிக்க பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,குஜராத்தின் ஹன்சல்பூரில் பசுமை இயக்கம் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
August 26th, 10:30 am
குஜராத்தின் ஹன்சல்பூரில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பசுமை இயக்க முயற்சிகளைத் தொடங்கி வைத்தார். பசுமை எரிசக்தித் துறையில் தன்னிறைவை எட்டும் வகையில், பெரிய முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கு இது உதவும். இந்த நிகழ்வில் திரண்டிருந்தோர் இடையே உரையாற்றிய பிரதமர், கணேஷ் உத்சவத்தின் பண்டிகை உற்சாகத்தின் மத்தியில், 'இந்தியாவில் தயாரிப்போம்' பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இது இந்தியாவில் தயாரிப்போம், உலகத்திற்காக தயாரிப்போம் என்ற பகிரப்பட்ட இலக்கை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்குச் சான்றாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள் இன்று முதல் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று திரு. மோடி தெரிவித்தார். நாட்டில் ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடு உற்பத்தி தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவுக்கும் இது ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவருகிறது என்பதை வலியுறுத்திய பிரதமர், இந்தியாவின் அனைத்து மக்களுக்கும், ஜப்பானுக்கும், சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி 2025-ல் பிரதமர் ஆற்றிய உரை
January 17th, 11:00 am
கடந்த முறை நான் உங்களிடையே வந்தபோது, மக்களவைத் தேர்தல் வெகு தொலைவில் இல்லை. அந்த நேரத்தில், உங்கள் அனைவரின் நம்பிக்கையின் காரணமாக, அடுத்த முறையும் இந்தக் கண்காட்சிக்கு கண்டிப்பாக வருவேன் என்று நான் கூறியிருந்தேன். நாடு மூன்றாவது முறையாக எங்களை ஆசீர்வதித்துள்ளது. நீங்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை என்னை இங்கு அழைத்துள்ளீர்கள், உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பாரத் வாகனத் தொழில் துறையின் சர்வதேச கண்காட்சி 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
January 17th, 10:45 am
நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தித் தொழில்துறை கண்காட்சியான பாரத் வாகனத் தொழில்துறை சர்வதேச கண்காட்சி 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்க பிஜேபி-யைத் தேர்ந்தெடுத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 800 கண்காட்சியாளர்கள், 2.5 லட்சம் பார்வையாளர்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சி தலைநகரில் மேலும் இரண்டு இடங்களில் நடைபெறுவதாக அவர் கூறினார். அடுத்த 5 நாட்களில் ஏராளமான பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் வகையில் பல புதிய வாகனங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். போக்குவரத்துத் துறையில் எதிர்காலத்தில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதை இது எடுத்துக் காட்டுவதாகக் கூறினார். இந்தக் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் வாகன உற்பத்தித் தொழில் சிறந்த நிலையில், எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயாராக உள்ளது என்று கூறிய அவர், இக்கண்காட்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.ஒசாமு சுசூகி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
December 27th, 05:58 pm
உலக வாகனத் தொழில்துறையில் புகழ்பெற்ற ஒசாமு சுசுகி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஒசாமு சுசூகியின் தொலைநோக்குப் பார்வை உலகளாவிய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ், சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் உலகளாவிய அதிகார மையமாக உருவெடுத்தது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு புதுமை, தொழில் விரிவாக்கத்தை மேற்கொண்டது.குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 28th, 08:06 pm
மக்கள் செல்வாக்குமிக்க குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர்லால் அவர்களே, துணை முதலமைச்சர் திரு கிருஷ்ண சௌத்தாலா அவர்களே, நாடாளுமன்றத்தின் எனது சகாவான திரு சி ஆர் பாட்டில் அவர்களே, சுசூகி மோட்டார் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளே, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அவர்களே, மாருதி-சுசூகியின் மூத்த அதிகாரிகளே, மற்ற பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில், இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற்றினார்
August 28th, 05:08 pm
காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் இன்று நடைபெற்ற இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். சுசூகி நிறுவனத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் குடும்பங்களுடனான சுசூகியின் தொடர்பு இப்போது 40 ஆண்டுகளின் வலுவாக உள்ளது என்று அவர் கூறினார். மாருதி-சுசூகியின் வெற்றி வலுவான இந்தியா-ஜப்பான் கூட்டுறவைக் குறிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.சுசூகி மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசூகியுடன் பிரதமர் மோடி சந்திப்பு
May 23rd, 12:37 pm
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் டோக்கியோவில், சுசூகி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசூகியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.பிரதமர் மோடியுடன் டோயோட்டோ நிறுவன தலைவர் திரு. அகியோ டோயோடா மற்றும் சுசூகி நிறுவன தலைவர் திரு. ஒ. சுசுகி சந்திப்பு
March 09th, 05:53 pm
Mr. Akio Toyoda, President Toyota, and Mr. O. Suzuki, Chairman Suzuki met PM Modi. The Toyota-Suzuki business partnership, and future technological developments came up for discussion. The partnership will promote Make in India, and contribute to employment generation.Chairman of Suzuki Motor Corp Mr. Osamu Suzuki meets CM
August 24th, 12:57 pm
Chairman of Suzuki Motor Corp Mr. Osamu Suzuki meets CM