AI முன்னேற்றங்கள் முதல் T20 உலகக் கோப்பை வரை, பிரதமர் மோடி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) மூலம் இந்தியாவின் எழுச்சியைக் காட்டுகிறார்

February 22nd, 11:30 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்)-தில், டெல்லியில் நடைபெற்ற இந்திய AI தாக்க உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தனது அனுபவங்களைப் பற்றிப் பேசினார். இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர்கள், உறுப்பு தானம், நதி விழாக்கள், டிஜிட்டல் பாதுகாப்பு, பரிக்ஷா பே சர்ச்சா (தேர்வுகள் பற்றிய விவாதம்) மற்றும் பல முக்கிய தலைப்புகளைத் தொட்டார். பிப்ரவரி 23 ஆம் தேதி, ராஷ்டிரபதி பவனில் 'ராஜாஜி உத்சவ்' கொண்டாடப்படும் என்பதை அவர் எடுத்துரைத்தார். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார், நாரி சக்தியுடன் (பெண் சக்தி) அவரது ஆழமான தொடர்பைக் குறிப்பிட்டார்.

அனைவரின் இதயத்திலும் ராமர் இருக்கிறார்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

January 28th, 11:30 am

நண்பர்களே, அயோத்தியிலே பிராண பிரதிஷ்டை சந்தர்ப்பமானது, தேசத்தின் கோடிக்கணக்கான மக்களை ஓரிழையில் இணைத்து வைத்தது. அனைவரின் இறையும் ஒன்றே, அனைவரின் பக்தியும் ஒன்றே, அனைவரின் சொல்லிலும் இராமன், அனைவரின் இதயங்களிலும் இராமன். தேசத்தின் பலர் இந்த வேளையில் இராம பஜனைகளைப் பாடி, அவற்றை இராமனின் பாதாரவிந்தங்களிலே சமர்ப்பணம் செய்தார்கள். ஜனவரி மாதம் 22ஆம் தேதியன்று மாலையிலே, நாடெங்கிலும் இராமஜோதி ஏற்றப்பட்டு, தீபாவளி கொண்டாடப்பட்டது. இந்த வேளையிலே, தேசத்தின் சமூகத்தன்மையின் சக்தி பார்க்கப்பட்டது, இதுவே வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது உளவுறுதிப்பாட்டின் மிகப் பெரிய ஆதாரமும் ஆகும். மகரசங்கராந்தி முதல் ஜனவரி மாதம் 22ஆம் தேதி வரை தூய்மை இயக்கத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். இலட்சக்கணக்க்கானோர் மிகுந்த சிரத்தையோடு கூட, தங்களது பகுதிகளில் உள்ள புனிதத்தலங்களிலே தூய்மைப் பணியை மேற்கொண்டார்கள். பலர் இந்தப் பணியோடு தொடர்புடைய படங்களை, காணொளிகளை அனுப்பியிருக்கிறார்கள் – இந்த உணர்வு தடைப்படக்கூடாது, இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வர வேண்டும். சமூக இயல்பின் இந்தச் சக்தி, நமது தேசத்தை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும்.

ஆயுஷ்மான் பாவ் இயக்கத்திற்கு நல்ல வரவேற்பு: பிரதமர் பாராட்டு

October 16th, 09:22 pm

ஆயுஷ்மான் பாவ் திட்டத்தின் கீழ் 80,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி எடுத்துள்ள நிலையில், உடல் உறுப்பு தான இயக்கத்தின் வெற்றியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

'ஏக் பாரத், ஷ்ரேஷ்ட் பாரத்' (ஒரே இந்தியா, வலிமையான இந்தியா) என்ற எண்ணம் நமது தேசத்தை பலப்படுத்துகிறது: 'மன் கீ பாத்' தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

March 26th, 11:00 am

எனக்கு மிகவும் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம், பிறருக்கு சேவையாற்றவே தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த ஆயிரக்கணக்கான மனிதர்களைப் பற்றி உரையாடியிருக்கிறோம். பலர் எப்படிப்பட்டவர்கள் என்றால், பெண்களின் கல்விக்காகவே தங்களின் மொத்த ஓய்வூதியத்தையும் அளித்தவர்கள், சிலர் தங்களுடைய வாழ்க்கை முழுவதின் சம்பாத்தியத்தையும் சுற்றுச்சூழல் மற்றும் பிராணிகளின் சேவைக்காகவே அர்ப்பணம் செய்தவர்கள். நமது தேசத்திலே பொது நலனுக்கு மிக உயரிய இடம் அளிக்கப்பட்டிருக்கிறது, பிறர் நலன் பொருட்டு, தங்களுடைய அனைத்தையும் எந்த மறு சிந்தனையும் இல்லாமல் தானமளிப்பார்கள். ஆகையால் தானே நமக்கெல்லாம் சிறுவயதிலேயே சிபிச்சக்கரவர்த்தி, ததீசி போன்ற உறுப்பு தானம் புரிந்தவர்களின் கதைகள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.