GST reforms will accelerate India's growth story: PM Modi
September 21st, 06:09 pm
In his address to the nation, PM Modi announced that from the very first day of Navratri, on 22nd September, the country will implement Next-Generation GST reforms. He noted that this marks the beginning of a ‘GST Bachat Utsav’. Recalling that India had taken its first steps towards GST reform in 2017, the PM emphasized that the reform is a continuous journey. He also urged citizens to proudly reaffirm their commitment to Swadeshi.பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
September 21st, 05:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சக்தியை வழிபடும் பண்டிகையான நவராத்திரியின் தொடக்கத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், நவராத்திரியின் முதல் நாளிலிருந்தே, நாடு தற்சார்பு இயக்கத்தில் குறிப்பிடத்தக்க படியை எடுத்து வைப்பதாகக் குறிப்பிட்டார். 2025 செப்டம்பர் 22 அன்று சூரிய உதயத்தின்போது, நாடு அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துகிறது என்று அவர் கூறினார். இது இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்த விழா சேமிப்பை அதிகரிக்கும் என்றும், மக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதை எளிதாக்கும் என்றும் அவர் கூறினார். இந்த சேமிப்புத் திருவிழாவின் நன்மைகள் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், புதிய நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், கடைக்காரர்கள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் என அனைவரையும் சென்றடையும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த பண்டிகைக் காலத்தில், ஒவ்வொரு வீட்டிலும் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டு இனிமையான சூழல் உருவாகும் என்று அவர் கூறினார். அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்களுக்காகவும் ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா தொடக்கத்திற்காகவும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்குப் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தி, வணிக நடவடிக்கைகளை எளிதாக்கி, முதலீடுகளை மேலும் ஈர்க்கும் என்று அவர் கூறினார். மேலும் ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சிக்கான போட்டியில் சமமான பங்களிப்பை வழங்குவதை அது உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.இந்தியா – ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 29th, 11:20 am
உங்களில் பலரை நான் நன்றாக அறிவேன், குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போதும், பிறகு தில்லியில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும், உங்களில் பலருடன் நான் நெருங்கிய நட்பு கொண்டுள்ளேன். இன்று உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு
August 29th, 11:02 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு. ஷிகெரு இஷிபா ஆகியோர் ஆகஸ்ட் 29, 2025 அன்று டோக்கியோவில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கெய்டன்ரென் [ஜப்பான் வணிக கூட்டமைப்பு] ஏற்பாடு செய்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தியா-ஜப்பான் வணிகத் தலைவர்கள் மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட இந்தியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி தொழில்துறை பிரமுகர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.இந்தியா-சைப்ரஸ் நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமரும் சைப்ரஸ் அதிபரும் கலந்துரையாடினர்
June 16th, 02:17 am
பிரதமர் திரு நரேந்திர மோடியும் சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸும் லிமாசோலில் சைப்ரஸ் – இந்தியா நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் வட்ட மேசை நிகழ்ச்சியில் கலந்துரையாடினர். வங்கிகள், நிதி நிறுவனங்கள், உற்பத்தி, பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.Bharat is recognized globally as one of the fastest-growing emerging economies: PM Modi
June 15th, 11:10 pm
PM Modi and the Cyprus President Christodoulides held a Roundtable interaction with business leaders in Limassol. The two leaders welcomed the signing of an MOU between NSE International Exchange GIFT CITY, Gujarat and Cyprus Stock Exchange. Highlighting India's rapid economic transformation in the last 11 years, the PM noted that India has become the fastest growing major economy in the world.குஜராத்தின் கெவாடியாவில் நடந்த தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 31st, 07:31 am
ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளைப் போலவே, அக்டோபர் 31-ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்வும் ஒட்டுமொத்த தேசத்தையும் புதிய ஆற்றலால் நிரப்புகிறது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தேசிய ஒற்றுமை தினத்தன்று எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பங்கேற்றார்
October 31st, 07:30 am
குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் இன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்படும் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தையொட்டி நடைபெற்ற ஒருமைப்பாட்டு தின அணிவகுப்பையும் திரு மோடி பார்வையிட்டார்.5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜிஎஸ்டிக்கு பிரதமர் பாராட்டு
July 01st, 02:36 pm
5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜிஎஸ்டிக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, ‘வணிகம் செய்வதை எளிதாக்குதல்’ மற்றும் ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற தொலைநோக்கு பார்வையை பூர்த்தி செய்துள்ள மிகப்பெரிய வரி சீர்திருத்தம் இது என்று கூறியுள்ளார்.For us, MSME means- Maximum Support to Micro Small and Medium Enterprises: PM Modi
June 30th, 10:31 am
PM Modi participated in the ‘Udyami Bharat’ programme. To strengthen the MSME sector, in the last eight years, the Prime Minister said, the government has increased the budget allocation by more than 650%. “For us, MSME means - Maximum Support to Micro Small and Medium Enterprises”, the Prime Minister stressed.PM participates in ‘Udyami Bharat’ programme
June 30th, 10:30 am
PM Modi participated in the ‘Udyami Bharat’ programme. To strengthen the MSME sector, in the last eight years, the Prime Minister said, the government has increased the budget allocation by more than 650%. “For us, MSME means - Maximum Support to Micro Small and Medium Enterprises”, the Prime Minister stressed.லக்னோவில் உத்தரப் பிரதேச முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 3.0-ன் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமரின் உரை
June 03rd, 10:35 am
உத்திரப் பிரதேசத்தின் புகழ்பெற்ற முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது மூத்த நண்பர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களே, உத்திரப் பிரதேச துணை முதல்வர் அவர்களே, மாநில அமைச்சர்களே, சட்டமன்ற, சட்ட மேலவை சபாநாயகர்களே, தொழில்துறையைச் சேர்ந்த நண்பர்களே, இதர பிரமுகர்களே!PM attends the Ground Breaking Ceremony @3.0 of the UP Investors Summit at Lucknow
June 03rd, 10:33 am
PM Modi attended Ground Breaking Ceremony @3.0 of UP Investors Summit at Lucknow. “Only our democratic India has the power to meet the parameters of a trustworthy partner that the world is looking for today. Today the world is looking at India's potential as well as appreciating India's performance”, he said.ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் ஜிடோ கனெக்ட் 2022 தொடக்க அமர்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 06th, 02:08 pm
ஜிடோ கனெக்ட் உச்சி மாநாடு சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் நடைபெறுகிறது. இப்போதிலிருந்து சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் நாடு நுழைகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் பொன்னான இந்தியாவை கட்டமைக்க நாடு தீர்மானித்துள்ளது. எனவே, இந்த உச்சிமாநாட்டின் மையப் பொருளாக ஒருங்கிணைதல், முன்னேற்றம், எதிர்காலம் என்பது மிகவும் பொருத்தமாகவே, முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அனைவரின் முயற்சி என்ற உணர்வுடையதாக இருக்கிறது என்று நான் கூறுவேன். இது தான் சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் விரைந்த வளர்ச்சிக்கான மந்திரமாகும். இந்த உச்சிமாநாடு இந்த உணர்வை தொடர்ந்து வலுப்படுத்தட்டும். இந்த உச்சிமாநாட்டின் போது நமது தற்போதைய எதிர்கால முன்னுரிமைகள் சவால்களுக்கு தீர்வு காண முயற்சிகள் இருக்கும். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!‘ஜிட்டோ கனெக்ட்- 2022’ தொடக்கவிழாவில் பிரதமர் உரை “இந்தியா தற்போது ‘வாய்ப்புகள் மற்றும் சாத்தியம்’ என்பதைத் தாண்டி, உலக நலன் என்ற மாபெரும் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது”
May 06th, 10:17 am
ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் ‘ஜிட்டோ கனெக்ட்- 2022’ தொடக்கவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.05.2022) காணொலி வாயிலாக உரையாற்றினார்.தனியார் மயமாக்குதல் மற்றும் சொத்துக்களை விற்று முதலாக்குதல் தொடர்பான வெபினாரில் பிரதம மந்திரி ஆற்றிய உரையின் உத்தேச தமிழ் மொழிபெயர்ப்பு
February 24th, 05:48 pm
பங்குகள் விற்பனை மற்றும் சொத்துகள் பணமாக்கல் குறித்த பட்ஜெட் அறிவிப்புகளை சிறப்பாக அமலாக்குவது குறித்து இன்று காணொலி மூலம் நடந்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.பங்குகள் விற்பனை மற்றும் சொத்துகள் பணமாக்கல் குறித்த பட்ஜெட் அறிவிப்புகளை சிறப்பாக செயல்படுத்துவது குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரை
February 24th, 05:42 pm
பங்குகள் விற்பனை மற்றும் சொத்துகள் பணமாக்கல் குறித்த பட்ஜெட் அறிவிப்புகளை சிறப்பாக அமலாக்குவது குறித்து இன்று காணொலி மூலம் நடந்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.2020 ஆகஸ்ட் 15, 74-வது சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு ஆற்றிய உரையின் மொழியாக்கம்
August 15th, 02:49 pm
எனது நாட்டு மக்களே, இந்தப் புனிதமான சுதந்திர தினத்தில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.74 ஆவது விடுதலை நாள் விழாவில் தில்லி செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
August 15th, 02:38 pm
எனதருமை நாட்டு மக்களே, மகிழ்ச்சியான இந்த நன்னாளில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்India celebrates 74th Independence Day
August 15th, 07:11 am
Prime Minister Narendra Modi addressed the nation on the occasion of 74th Independence Day. PM Modi said that 130 crore countrymen should pledge to become self-reliant. He said that it is not just a word but a mantra for 130 crore Indians. “Like every young adult in an Indian family is asked to be self-dependent, India as nation has embarked on the journey to be Aatmanirbhar”, said the PM.