Prime Minister addresses the International Arya Mahasammelan 2025 in New Delhi
October 31st, 06:08 pm
PM Modi attended and addressed the International Arya Mahasammelan 2025 in New Delhi. Speaking on the occasion, the PM expressed his deep reverence for Swami Dayanand Ji’s ideals. He emphasized that Swami Dayanand Ji rejected caste-based discrimination and untouchability. The PM highlighted that the occasion reflects the great legacy of social reform consistently advanced by the Arya Samaj and noted its historical association with the Swadeshi movement.புதுதில்லி கடமைப்பாதையில் கடமை மாளிகை தொடக்க நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 06th, 07:00 pm
மத்திய அமைச்சரவையின் சகாக்களே, மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களே, அரசு ஊழியர்களே, சிறப்பு விருந்தினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெற்ற கடமை மாளிகையின் திறப்பு விழாவில் உரையாற்றினார்
August 06th, 06:30 pm
புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் இன்று நடைபெற்ற கடமை மாளிகை -3-ன் திறப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய அவர், ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்னதாக ,புரட்சி மாதமான ஆகஸ்ட், மற்றொரு வரலாற்று மைல்கல்லைக் கொண்டு வந்துள்ளது என்று குறிப்பிட்டார். நவீன இந்தியாவை உருவாக்குவதில் தொடர்புடைய முக்கிய சாதனைகளை இந்தியா ஒன்றன் பின் ஒன்றாகக் காண்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். புதுதில்லியைப் பற்றி குறிப்பிட்டு, கடமைப் பாதை, புதிய நாடாளுமன்றக் கட்டிடம், புதிய பாதுகாப்பு அலுவலக வளாகம், பாரத மண்டபம், யசோபூமி, தியாகிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தேசிய போர் நினைவுச்சின்னம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை மற்றும் இப்போது கடமை மாளிகை போன்ற சமீபத்திய உள்கட்டமைப்பு அடையாளங்களை திரு மோடி பட்டியலிட்டார். இவை வெறும் புதிய கட்டிடங்கள் அல்லது வழக்கமான உள்கட்டமைப்பு அல்ல என்பதை வலியுறுத்திய பிரதமர், அமிர்த காலத்தில், வளர்ந்த இந்தியாவை வடிவமைக்கும் கொள்கைகள் இந்தக் கட்டமைப்புகளிலேயே வகுக்கப்படும் என்றும், வரும் தசாப்தங்களில், இந்த இடங்களிலிருந்தே நாட்டின் பாதை தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார். கடமை மாளிகையின் திறப்பு விழாவிற்காக அனைத்து குடிமக்களுக்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, அதன் கட்டுமானத்தில் ஈடுபட்ட பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.