ஒடிசா பர்பாவில் பிரதமர் ஆற்றிய உரை
November 24th, 08:48 pm
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், திரு தர்மேந்திர பிரதான் அவர்களே, திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, ஒடியா சமாஜத்தின் தலைவர் திரு சித்தார்த் பிரதான் அவர்களே, ஒடியா சமாஜத்தின் இதர பிரதிநிதிகளே, ஒடிசாவைச் சேர்ந்த அனைத்து கலைஞர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே!'ஒடிசா பர்பா 2024' கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு
November 24th, 08:30 pm
புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 'ஒடிசா பர்பா 2024' கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒடிசாவின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்த ஆண்டு ஸ்வபவ் கவி கங்காதர் மெஹரின் நூற்றாண்டு நினைவு தினம் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பக்த தாசியா பவுரி, பக்த சாலபேகா மற்றும் ஒரிய பாகவத எழுத்தாளர் திரு. ஜகந்நாத் தாஸ் ஆகியோருக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார்.நவம்பர் 24 அன்று ‘ஒடிசா பர்பா 2024’-ல் பிரதமர் பங்கேற்கிறார்
November 24th, 12:02 am
நவம்பர் 24 ஆம் தேதி மாலை சுமார் 5:30 மணிக்கு புது தில்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் ‘’ ஒடிசா பர்பா 2024’’ (‘ஒடிசாவை நோக்குங்கள்) நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்நிகழ்வில் அவர் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.