Tribal pride has been an integral part of India's consciousness for thousands of years: PM Modi in Dediapada, Gujarat

November 15th, 03:15 pm

In his address at the Janjatiya Gaurav Diwas programme marking the 150th Birth Anniversary of Bhagwan Birsa Munda in Dediapada, PM Modi paid homage to him. Launching development projects worth over ₹9,700 crore, the PM said tribal pride has been an integral part of India’s consciousness for thousands of years. Highlighting that Vajpayee Ji’s government created a separate Tribal Affairs Ministry, he added that his government has significantly increased the ministry’s budget.

குஜராத்தின் தெடியாபாடாவில் தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

November 15th, 03:00 pm

குஜராத்தின் தெடியாபாடாவில் இன்று நடைபெற்ற தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில், ரூ 9,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நர்மதாவின் புனித பூமி இன்று மற்றொரு வரலாற்று நிகழ்வைக் காண்கிறது என்று கூறிய திரு மோடி, அக்டோபர் 31 -ம் தேதி, சர்தார் படேலின் 150-வது பிறந்தநாளில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் அதே இடத்தில் கொண்டாடப்பட்ட பாரத் விழா தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். இன்று பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளின் பிரமாண்டமான கொண்டாட்டத்துடன்,அந்த விழாவின் உச்சக்கட்டத்தை நாம் காண்கிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில் பகவான் பிர்சா முண்டாவுக்கு அவர் மரியாதை செலுத்தினார். குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் முழு பழங்குடிப் பகுதியிலும் சுதந்திர உணர்வை எழுப்பிய கோவிந்த் குருவின் ஆசீர்வாதங்களும் இந்த நிகழ்வோடு தொடர்புடையவை என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். சிறிது நேரத்திற்கு முன்பு தேவமோக்ரா அன்னை கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

Our government at Centre and State is committed to accelerating the pace of development in Odisha: PM Modi in Jharsuguda

September 27th, 11:45 am

PM Modi launched projects worth over ₹50,000 crore in Jharsuguda, Odisha, bringing a boost in housing, education, skill development, and connectivity. He flagged off the Amrit Bharat train, unveiled BSNL’s 4G services, and announced semiconductor and shipbuilding initiatives. With homes for thousands of families and new opportunities for youth, the projects aim to empower Odisha and strengthen India’s self-reliance.

ஒடிசாவின் ஜார்சுகுடாவில் ரூ.60,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கிவைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

September 27th, 11:30 am

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, ஒடிசா மக்கள் ஒரு புதிய உறுதிப்பாட்டுடன், வளர்ந்த ஒடிசாவை நோக்கி முன்னேறத் தீர்மானித்ததை நினைவு கூர்ந்த பிரதமர், இன்று, மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசுகளின் உத்வேகத்துடன் ஒடிசா வேகமாக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார். பிஎஸ்என்எல்-லின் உள்நாட்டு 4ஜி சேவைகளை அவர் அறிமுகப்படுத்தினார். பல்வேறு மாநிலங்களில் ஐஐடிகளின் விரிவாக்கமும் இன்று தொடங்குகிறது என்று அவர் கூறினார்.

செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் ஒடிசாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்

September 26th, 09:05 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, செப்டம்பர் 27-ம் தேதி ஒடிசாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:30 மணியளவில், ஜார்சுகுடாவில் ஏறத்தாழ ரூ.60,000 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வின்போது அவர் ஒரு பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுவார். இந்தத் திட்டங்கள் தொலைத்தொடர்பு, ரயில்வே, உயர்கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, கிராமப்புற வீட்டுவசதித் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைந்துள்ளன.

இந்தியா-சிங்கப்பூர் கூட்டறிக்கை

September 04th, 08:04 pm

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் மாண்புமிகு திரு லாரன்ஸ் வோங்-ன் பயணத்தின் போது, இந்தியா மற்றும் சிங்கப்பூரிடையே விரிவான உத்திசார் கூட்டண்மைக்கான செயல்திட்டம் குறித்த கூட்டறிக்கை

சிங்கப்பூர் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்

September 04th, 12:45 pm

சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு தமது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அந்நாட்டு பிரதமர் வோங்கை வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு நமது தூதரக உறவுகள் ஏற்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்’ – ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சுதேசி பெருமையுடன் பண்டிகைகளைக் கொண்டாட வலியுறுத்துகிறார்.

August 31st, 11:30 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமக்களுக்கு பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு நிகழ்வுகள், சூரிய சக்தி, ‘ஆபரேஷன் போலோ’ மற்றும் இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய பரவல் போன்ற முக்கியமான தலைப்புகளையும் அவர் தொட்டார். பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும், தூய்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் குடிமக்களுக்கு நினைவூட்டினார்.

ஜப்பான் மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம்

August 30th, 08:00 am

உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் ஜப்பானின் ஆற்றல், பன்முகத்தன்மை ஆகியவற்றின் உருவகம்.

Cabinet approves 6-Lane Ring Road project in Odisha worth Rs.8307.74 crore

August 19th, 03:17 pm

The Cabinet Committee on Economic Affairs chaired by PM Modi has approved construction of 6-Lane Access-Controlled Capital Region Ring Road project in Odisha worth Rs.8307.74 crore. It will play a pivotal role in regional economic growth, strengthening connectivity between major religious and economic centers and opening new avenues for trade and industrial development.

Cabinet approves semiconductor manufacturing units in ODISHA, PUNJAB and ANDHRA PRADESH worth Rs.4600 crore

August 12th, 03:18 pm

The Union Cabinet, chaired by PM Modi, has approved four semiconductor projects worth ₹4,600 crore under the India Semiconductor Mission (ISM). These projects will give a major boost to India’s semiconductor ecosystem, including the country’s first commercial compound fab and an advanced glass-based substrate packaging unit, and are expected to create jobs for 2,034 skilled professionals.

ஆறு மாநிலங்களில் நான்கு பல்தட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

July 31st, 03:13 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (31.07.2025) நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் 4 பல் தட ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மொத்த செலவு மதிப்பீடு 11,169 கோடி ரூபாய் ஆகும்.

2047ல் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை தன்னம்பிக்கையின் மூலம் செல்கிறது: மன் கீ பாத்தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி

July 27th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் திவலைகள் தாண்டவமாடின. தேசமே பெருமிதத்தில் பொங்கியது. ஆகஸ்ட் மாதம் 2023ஆம் தேதியன்று சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் தேசத்தில் ஒரு புதிய, அலாதியான சூழல் நிலவியது எனக்கு நினைவிருக்கிறது. அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறார்கள் மனதிலே புதியதொரு ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம்-விண்வெளி விஞ்ஞானியாக ஆவோம் என்று இப்போதெல்லாம் சின்னச்சின்ன பிள்ளைகளும் கூறி வருகிறார்கள்.

TMC hatao, Bangla bachao: PM Modi in Durgapur, West Bengal

July 18th, 05:00 pm

In a stirring address to an enthusiastic crowd in Durgapur, West Bengal, PM Modi reignited the dream of a Viksit Bengal and assured the people that change is not just possible but inevitable. From invoking Bengal’s proud industrial and cultural legacy to exposing TMC’s failures, PM Modi presented a clear roadmap for restoring the state’s glory and integrating it into the journey of Viksit Bharat. He reaffirmed his unwavering commitment with a resounding assurance: “Viksit Bangla, Modi ki Guarantee!”

PM Modi calls for a Viksit Bengal at Durgapur rally!

July 18th, 04:58 pm

In a stirring address to an enthusiastic crowd in Durgapur, West Bengal, PM Modi reignited the dream of a Viksit Bengal and assured the people that change is not just possible but inevitable. From invoking Bengal’s proud industrial and cultural legacy to exposing TMC’s failures, PM Modi presented a clear roadmap for restoring the state’s glory and integrating it into the journey of Viksit Bharat. He reaffirmed his unwavering commitment with a resounding assurance: “Viksit Bangla, Modi ki Guarantee!”

ஒடிசா முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

July 12th, 02:31 pm

ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி இன்று (12.07.2025) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

கட்ச் பகுதியில் வசிக்கும் சமூகத்தினருக்கு பிரதமர் ‘ஆஷாதி பிஜ்’ புத்தாண்டு வாழ்த்து

June 27th, 09:10 am

கட்ச் சமூகத்தினர் கொண்டாடும் புத்தாண்டு தினமான ஆஷாதி பிஜ் பண்டிகையை முன்னிட்டு, உலகம் முழுவதிலும் உள்ள கட்ச் சமூகத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநில அரசின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

June 20th, 04:16 pm

ஒடிசாவில் பிஜேபி அரசு பொறுப்பேற்று வெற்றிகரமாக இன்றுடன் (ஜூன் 20) ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதனையொட்டி நடைபெறும் இந்த விழா பொதுச் சேவைக்கும், மக்கள் நம்பிக்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். மாநிலத்தில் உள்ள கோடிக்கணக்கான வாக்காளர்களின் நம்பிக்கையை நிறைவேற்ற நேர்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு இதுவொரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார். ஒடிசாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் தீரு மோகன் மஜ்ஹி மற்றும் அவரது சகாக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் பாராட்டத்தக்க பணிகளைச் செய்து, ஒடிசா மாநில வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளீர்கள்.

ஒடிசா அரசின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ரூ.18,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

June 20th, 04:15 pm

ஒடிசா அரசின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புவனேஸ்வரில் நடைபெற்ற மாநில அளவிலான விழாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார். ஒடிசாவின் முழுமையான வளர்ச்சிக்கான தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, குடிநீர், நீர்ப்பாசனம், விவசாய உள்கட்டமைப்பு, சுகாதார உள்கட்டமைப்பு, கிராமப்புற சாலைகள், பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், புதிய ரயில் பாதை உள்ளிட்ட முக்கியமான திட்டங்களை உள்ளடக்கிய ரூ.18,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தும் பதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20, 21 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

June 19th, 05:48 pm

பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20,21 தேதிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்வார். ஜூன் 20 அன்று பீகார் மாநிலம் சிவானுக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், நண்பகல் 12 மணி வாக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.