The whole country is proud of you and watching you with admiration: PM Modi says to Women’s World Cup Champions
November 06th, 10:15 am
During his interaction with Women’s World Cup 2025 champions, PM Modi said they had truly accomplished something remarkable. The PM acknowledged the recurring challenges they faced and praised their courage and ability to instill confidence in others despite adversity. He encouraged them to advocate for Fit India and expressed his joy at having had the opportunity to interact with them.ஐசிசி மகளிர் உலக கோப்பை 2025-ஐ வென்ற இந்திய அணியினருடன் பிரதமர் உரையாடினார்
November 06th, 10:00 am
புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் ஐசிசி மகளிர் உலக கோப்பை 2025-ல் கோப்பையை வென்ற இந்திய அணியினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று உரையாடினார். 2025 நவம்பர் 02 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நாள் தேவ் தீபாவளி, குர்புரப் ஆகியவற்றை குறிப்பிடும் மிக மகத்துவமான நாள் என்று பிரதமர் குறிப்பிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பிரதமருக்கு நன்றி தெரிவித்த அணி பயிற்சியாளர் திரு அமோல் மஜூம்தார் அவரை சந்தித்தது கௌரவமிக்கது என்று கூறினார்.தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 04th, 05:35 pm
நமது பாரம்பரியத்தில் ஆசிரியர்களுக்கான மரியாதை இயற்கையாகவே உள்ளது. மேலும் அவர்கள் சமூகத்தின் மகத்தான சக்தியாகவும் உள்ளனர். ஆசீர்வதிப்பதற்கு ஆசிரியர்களை எழுந்து நிற்கச் செய்வது தவறாகும். இத்தகைய பாவத்தை செய்வதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் நான் உங்களுடன் நிச்சயமாக உரையாட விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரை உங்கள் அனைவரையும் சந்திப்பது சிறப்பான அனுபவமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கே உரித்தான ஒரு கதையைக் கொண்டு இருப்பீர்கள். ஏனெனில் அப்படி இல்லாமல் இந்த நிலையை நீங்கள் அடைந்திருக்க மாட்டீர்கள். அந்தக் கதைகள் அனைத்தையும் அறிவதற்கு போதிய நேரத்தைக் கண்டறிவது சிரமமாகும். ஆனால், உங்களிடமிருந்து என்னால் கற்றுக் கொள்ள முடிவது குறைவாக இருந்தாலும் அது உண்மையில் ஊக்கமளிப்பதாக இருக்கும். அதற்காக உங்கள் அனைவரையும் நான் மனமார வாழ்த்துகிறேன். இந்த தேசிய விருதைப் பெற்றிருப்பது முடிவல்ல. இந்த விருதுக்குப் பின் அனைவரின் கவனமும் உங்கள் மீது இருக்கும். இதன் பொருள், உங்களைப் பற்றிய கவனம், குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்திருக்கும். இதற்கு முன்பு, உங்களின் செல்வாக்கு ஒரு வரம்புக்கு உட்பட்டு இருந்திருக்கும். ஆனால், இந்த அங்கீகாரத்திற்குப் பின், அது மேலும் அதிகரிக்கும். வளர்ச்சியடையும். இது தொடக்கம் என்று நான் நம்புகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் இருப்பது எதுவாக இருந்தாலும் சாத்தியமான வரை நீங்கள் மாணவர்களுடன் அதனை பகிர வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யும் போது தான், உங்களின் மனதிருப்தி உணர்வு அதிகரிக்கும். இந்தத் திசையில் நீங்கள் தொடர்ந்து பாடுபடவேண்டும். இந்த விருதுக்கான உங்களின் தெரிவு, உங்களின் கடின உழைப்பிற்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கும் சான்றாகும். அதனால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. ஒரு ஆசிரியர் என்பவர் நிகழ்காலத்திற்கு மட்டுமானவர் அல்ல, அவர் நாட்டின் எதிர்கால தலைமுறையையும் கட்டமைக்கிறார், எதிர்காலத்தை மெருகூட்டுகிறார். நாட்டிற்கான சேவையில் மற்ற எதையும் விட, இது சற்றும் குறைவானதல்ல என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற கோடிக்கணக்கான ஆசிரியர்கள் இதே அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் நாட்டுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வருவதற்கான வாய்ப்பை அனைவரும் பெற்றிருக்கவில்லை. ஒரு வேளை பலர், முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லது சிலர் கவனம் செலுத்தாமல் கூட இருந்திருக்கலாம். இத்தகைய திறன்களுடன் ஏராளமானவர்கள் உள்ளனர். அனைவரின் கூட்டு முயற்சிகளால் தான் நாடு தொடர்ந்து வளர்ச்சியடைவதையும், புதிய தலைமுறைகள் தொடர்ந்து வளர்வதையும் உறுதி செய்ய முடிகிறது. நாட்டுக்காக, நாட்டுக்குள் வாழ்கின்ற அனைவரும் இதற்கு பங்களிக்கின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடையே உரையாற்றினார்
September 04th, 05:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடையே உரையாற்றினார். ஆசிரியர்களை கௌரவிப்பது வெறும் சடங்கல்ல என்றும் அவர்கள் தங்களின் வாழ்நாளையே அர்பணித்துள்ளதை அங்கீகரிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார். தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அவர்களுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமே இந்த விருதுக்கான தேர்வு என்று அவர் கூறினார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையின் சிறப்பம்சங்கள்
August 15th, 03:52 pm
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தில்லி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செங்கோட்டையில் 103 நிமிடங்கள் நீடித்த திரு நரேந்திர மோடியின் உரை, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான ஒரு செயல் திட்டத்தை வழங்குவதாக அமைந்தது. மிக நீண்ட மற்றும் தீர்க்கமான உரையாகும். பிரதமரின் உரை, தன்னம்பிக்கை, புதுமை, மக்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. மற்றவர்களைச் சார்ந்திருக்கும் ஒரு தேசத்திலிருந்து உலகளவில் நம்பிக்கையான, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய, பொருளாதார ரீதியாக மீள்தன்மை கொண்ட நாடாக மாறும் இந்தியாவின் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 15th, 07:00 am
இந்த மாபெரும் சுதந்திர தின விழா நமது நாட்டு மக்களின் 140 கோடி தீர்மானங்களின் கொண்டாட்டமாகும். இந்த சுதந்திர தின விழா கூட்டு சாதனைகளின் தருணம், பெருமையின் தருணம். நமது இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன. தேசம் தொடர்ந்து ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்தி வருகிறது. இன்று, 140 கோடி இந்தியர்கள் மூவண்ணக் கொடியின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர். பாலைவனங்கள், இமயமலைச் சிகரங்கள், கடற்கரைகள், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரே எதிரொலி, ஒரே ஆரவாரம். நம் தாய்நாட்டின் புகழ், உயிரை விட நமக்கு மிகவும் மேலானது.டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற 79வது சுதந்திர தினத்தின் காட்சிகள்
August 15th, 06:45 am
79வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் மோடி தனது உரையில், அரசியலமைப்பு சபை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 2047க்குள் ஒரு விக்ஸித் பாரதத்தை (வளர்ந்த இந்தியா) அடைவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய முயற்சிகளான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனா, தேசிய விளையாட்டுக் கொள்கை மற்றும் சுதர்ஷன் சக்ரா மிஷன் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில், 29.06.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 29th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, ஒருவர் புனித யாத்திரையாகப் புறப்படும் போது, ஒரே உணர்வு முதன்மையாக மனதில் எழும் – அது என்னவென்றால், ஒருவழியாக கடவுள் அழைத்துவிட்டார் என்பது தான். இந்த உணர்வுதான் நம்முடைய சமயப் பயணங்களின் ஆன்மாவாக விளங்குகிறது. இந்தப் பயணங்கள் உடலின் ஒழுங்குமுறைக்கும், மனதைச் சுத்தப்படுத்துவதற்கும், பரஸ்பர அன்பு, சகோதரத்துவம், இறைவனோடு ஒன்றிணையவுமான ஊடகமாக இருக்கின்றன. இவை தவிர, இந்த யாத்திரைகளின் ஒரு மிகப்பெரிய கோணம் இருக்கிறது. இந்த சமயப்பயணங்கள், சேவைக்கான சந்தர்ப்பங்களின் மாபெரும் நெறியாகவும் ஆகின்றது. எந்தவொரு பயணம் என்றாலும், எத்தனை நபர்கள் யாத்திரையை மேற்கொள்கிறார்களோ, அதைவிட அதிகமானவர்கள் இந்த தீர்த்தயாத்திரீகர்களுக்கு சேவைபுரியும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். பல இடங்களில் உணவிடங்களும், அன்னதானக் கூடங்களும் அமைக்கப்படுகின்றன. குடிநீர்ப் பந்தல்களை தெருவோரங்களில் மக்கள் அமைக்கிறார்கள். சேவை உணர்வோடு மருத்துவ முகாம்களும், இன்னபிற வசதிகளும் அமைக்கப்படுகின்றன. ஏராளமானவர்கள் தங்கள் பணத்தில் தீர்த்தயாத்திரை மேற்கொள்வோருக்கு தர்ம சத்திரங்களையும், அவர்கள் தங்கி இளைப்பாற அமைப்புகளையும் ஏற்படுத்துகிறார்கள்.புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஆச்சார்யா ஸ்ரீ வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 28th, 11:15 am
பரம் ஷ்ரத்தேய ஆச்சார்யா ஸ்ரீ பிரக்யா சாகர் மகாராஜ் ஜி அவர்களே, ஷ்ரவணபெலகோலா சுவாமி சாருகீர்த்தி ஜியின் தலைவர் அவர்களே, என் சக நண்பர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, என் சக நாடாளுமன்ற உறுப்பினர் திரு நவீன் ஜெயின் அவர்களே, பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளையின் தலைவர் திரு பிரியங்க் ஜெயின் அவர்களே, செயலாளர் திருமிகு மம்தா ஜெயின் அவர்களே, அறங்காவலர் திரு பியூஷ் ஜெயின் அவர்களேஇதர பிரமுகர்களே, மதிப்பிற்குரிய துறவிகளே, தாய்மார்களே, ஜெய் ஜினேந்திரா!ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
June 28th, 11:01 am
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று (28.06.2025) நடைபெற்ற ஆச்சார்யா வித்யானந்த் மஹாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை நாடு காண்கிறது என்றும், ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டு விழாவின் புனிதத்தை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார். மதிப்பிற்குரிய ஆச்சார்யாவின் அழியாத உத்வேகத்தால் நிறைந்த இந்த நிகழ்வு, ஒரு அசாதாரணமான மற்றும் எழுச்சியூட்டும் சூழலை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார். அனைவருக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமரின் உரை
June 21st, 07:06 am
ஆந்திரப் பிரதேச ஆளுநர் சையத் அப்துல் நசீர் அவர்களே, இந்த மாநிலத்தின் முதலமைச்சர், எனது அன்பு நண்பர் சந்திரபாபு நாயுடு அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், கே. ராம்மோகன் நாயுடு அவர்களே, பிரதாப்ராவ் ஜாதவ் அவர்களே, சந்திரசேகர், பூபதி ராஜு ஸ்ரீனிவாஸ் வர்மா, மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவர்களே, பிற பிரமுகர்கள் மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
June 21st, 06:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின நிகழ்வில் உரையாற்றினார். சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கி யோகா அமர்வில் பங்கேற்றார்.உலக கல்லீரல் தினத்தன்று குடிமக்கள் கவனத்துடன் சாப்பிடுவதைக் கடைப்பிடித்து, உடல் பருமனை எதிர்த்துப் போராட பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
April 19th, 01:13 pm
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு, அனைத்து குடிமக்களும் கவனத்துடன் உணவுப் பழக்கங்களை கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். சிறிய ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், எண்ணெய் உட்கொள்ளலைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்க முடியும் என்பதை எடுத்துரைத்தார்.சில்வசாவில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
March 07th, 03:00 pm
நீங்கள் அனைவரும் ரும் நலமாக இருக்கிறீர்களா? இன்று இங்கு மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்கு இங்கு வரும் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள். யூனியன் பிரதேசத்தின் அனைத்து தொழிலாளர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பல பழைய நண்பர்களுக்கும் வணக்கம் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.பிரதமர் திரு நரேந்திர மோடி, தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசம் சில்வாசாவில் ரூ.2580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்
March 07th, 02:45 pm
யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவில் ரூ.2580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சில்வாசாவில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக சில்வாசாவில் நமோ மருத்துவமனையையும் அவர் தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்தப் பிராந்தியத்துடன் தொடர்பு கொள்ள, வாய்ப்பளித்த தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அர்ப்பணிப்பு உணர்வுள்ள தொழிலாளர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார். மக்களுடன் அவர் கொண்டிருந்த அரவணைப்பு மற்றும் நீண்டகாலத் தொடர்பை சுட்டிக் காட்டிய அவர், பிராந்தியத்துடனான தமது பிணைப்பு பல தசாப்தங்கள் பழமையானது என்று பகிர்ந்து கொண்டார். 2014-ல் தமது அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் எடுத்துரைத்தார்.சமீபத்திய மனதின் குரல் நிகழ்வில் உடல் பருமனுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
February 24th, 09:11 am
உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்து வருவதை முறியடிப்பதன் அவசரத் தேவை பற்றி எடுத்துரைத்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது பற்றி அறிவுறுத்த பிரமுகர்களை அவர் பரிந்துரைத்துள்ளார். இந்த இயக்கத்தை மேலும் விரிவுபடுத்த அவர்கள் மேலும் 10 பேரை பரிந்துரைக்கவும் வலியுறுத்தி உள்ளார்.