தேசிய பாதுகாப்புப் படை தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 16th, 09:09 pm
தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) தினத்தை முன்னிட்டு வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். “நமது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களைப் பாதுகாத்து, தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காக்கும் அளப்பரிய பணியை தேசிய பாதுகாப்புப் படை மேற்கொண்டுள்ளது”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.தேசிய பாதுகாப்புப் படை உதயமான தினத்தை முன்னிட்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
October 16th, 11:58 am
என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை உதயமான தினத்தை முன்னிட்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர்களது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தைரியம், உறுதிப்பாடு ஆகியவற்றைப் பிரதமர் பாராட்டியுள்ளார்.