பிரக்ஞானந்தாவின் மகத்தான சாதனைக்கு பிரதமர் வாழ்த்து
June 06th, 02:16 pm
நார்வே செஸ் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பிரக்ஞானந்தாவின் மகத்தான சாதனைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது அவரது தொடர்ச்சியான சிறப்புத் தன்மையை எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த மைல்கல் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.2025 நார்வே சதுரங்கப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்த குகேஷுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
June 02nd, 08:23 pm
2025 நார்வே சதுரங்கப் போட்டியின் 6வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ததற்காக குகேஷுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். 2025 நார்வே சதுரங்கப் போட்டியின் 6வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான அவரது முதல் வெற்றி, அவரது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. என்று திரு மோடி கூறினார்.