Prime Minister congratulates Prof. Gobardhan Das on his Appointment
April 25th, 10:47 pm
The Prime Minister, Shri Narendra Modi has congratulated Prof. Gobardhan Das on his appointment as the member of NITI Aayog and extended his best wishes for a successful tenure. Shri Modi said that Prof. Das’s journey, marked by tireless dedication and humility, is truly inspiring. He highlighted Prof. Das’s invaluable contributions in the fields of public health, science, and innovation, noting that the entire nation takes pride in his achievements.Prime Minister extends best wishes on reconstitution of NITI Aayog
April 25th, 10:46 pm
The Prime Minister, Shri Narendra Modi, expressed his best wishes on reconstitution of NITI Aayog. He noted that NITI Aayog has emerged as a vital pillar in India’s policy-making architecture, fostering cooperative federalism, driving key reforms, and enhancing the ‘Ease of Living’ for citizens. The institution continues to serve as a dynamic platform for innovation and long-term strategic thinking across sectors.Shri Ashok Kumar Lahiri meets the Prime Minister
April 25th, 10:43 pm
Shri Ashok Kumar Lahiri met the Prime Minister, Shri Narendra Modi at New Delhi, today. Shri Modi conveyed his best wishes on his appointment as the Vice Chairman of NITI Aayog. The Prime Minister noted that Shri Lahiri’s rich experience in the fields of economics and public policy will significantly strengthen India’s reform journey and contribute to the nation’s vision of becoming a Viksit Bharat.Cabinet approves India’s Nationally Determined Contribution for 2031 to 2035
March 25th, 05:35 pm
The Union Cabinet, under the chairmanship of PM Modi, has approved India’s Nationally Determined Contribution (NDC) for the period 2031 to 2035, enhancing the country’s ambition under the UNFCCC and the Paris Agreement. This marks a major milestone in India’s journey towards a low-carbon, climate-resilient future, further strengthening its role as a global leader in climate action. India’s climate commitments will generate new opportunities for youth and women.இந்தியா – பிரான்ஸ் கூட்டறிக்கை
February 18th, 08:10 am
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரான் 2026 பிப்ரவரி 17 முதல் 19 வரை இந்தியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு, செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026-ல் பங்கேற்றார். அப்போது பிப்ரவரி 17 அன்று மும்பையில் இந்தியா – பிரான்ஸ் புதிய கண்டுபிடிப்பு ஆண்டு 2026-ஐ இரு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைத்து இருதரப்பு பேச்சு நடத்தினார்கள். இது பிரான்ஸ் அதிபர் மேக்ரோனின் 4-வது இந்திய பயணமாகும். 2025 பிப்ரவரி மாதத்தில் பிரதமர் திரு மோடி, பிரான்சில் பயணம் மேற்கொண்டார்.In this decade of the 21st century, India is riding the Reform Express: PM Modi at ET Now Global Business Summit
February 13th, 08:30 pm
PM Modi addressed the ET Now Global Business Summit 2026 in New Delhi, highlighting the theme ‘A Decade of Disruption, A Century of Change.’ He noted that despite global shocks—from the pandemic to wars and supply chain breakdowns, India’s decade has been defined by strong growth, effective delivery, and a vibrant democracy. Recalling that India was the 11th-largest economy a decade ago, he said the nation is now rapidly moving toward becoming the world’s third-largest economy.எகனாமிக் டைம்ஸ் நவ் சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
February 13th, 08:00 pm
புதுதில்லியில் இன்று நடைபெற்ற எகனாமிக் டைம்ஸ் நவ் சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட அவர், 'பத்தாண்டு கால இடையூறு, ஒரு நூற்றாண்டுக்கான மாற்றம்' என்ற கருப்பொருளில் உரையாற்றினார். 21 - ம் நூற்றாண்டின் கடந்த பத்தாண்டுகளில், உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பெருந்தொற்று, பதற்றமான சூழல், பல்வேறு பிராந்தியங்களில் போர்கள், மற்றும் உலகளவிலான சமநிலையைப் பாதிக்கும் வகையில், விநியோக நடைமுறைகளில் முறிவுகள் உள்ளிட்ட முன்னெப்போதும் இல்லாத அளவிலான இடையூறுகள் ஏற்பட்டுள்ளன என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்தார். நெருக்கடியான சூழல்கள் நாட்டின் உண்மையான வலிமையை வெளிப்படுத்துகின்றன என்றும், இத்தகைய இடையூறுகள் இருந்த போதிலும், இந்தியா கடந்த பத்தாண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, சிறந்த விநியோக செயல்பாடுகள் மற்றும் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்துதல் போன்றவற்றால் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதில் அவர் பெருமிதம் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு, இந்தியா உலகளவில் பதினொன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையில் இருந்தது. கடும் சவால்களுக்கு இடையே நாட்டின் பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும் என்ற அச்சம் இருந்தது. ஆனால், தற்போது இந்தியா விரைவான வளர்ச்சியுடன், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்து வருகிறது என்பதை திரு மோடி நினைவு கூர்ந்தார். இந்த நூற்றாண்டிற்கான மாற்றத்தின் முக்கிய அடித்தளமாக இந்தியா திகழும் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், இந்தியா தற்போது உலக நாடுகளின் முன்னேற்றத்திற்கு பதினாறு சதவீதத்திற்கும் கூடுதலாக பங்களித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த பங்களிப்பு ஆண்டுதோறும் அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா உலகளவில் வளர்ச்சிக்கான உத்வேகத்துடன், உலகப் பொருளாதாரத்தின் புதிய ஊக்கியாக இருக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.No matter how many challenges there are, we have 140 crore solutions: PM Modi in Rajya Sabha
February 05th, 05:35 pm
PM Modi replied to the Motion of Thanks on the President’s Address in the Rajya Sabha. In his address, he highlighted that the President articulated the strength of every section and expressed faith in India’s bright future. Listing the government’s achievements over the past decade, he noted that while Congress viewed people as problems, the present government sees 140 crore Indians as the solution, with a focus on achieving a developed India by 2047.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 05th, 05:00 pm
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பதிலளித்துப் பேசினார். அவையில் உரையாற்றிய பிரதமர், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது தனது பாக்கியம் என்று கூறினார். கடந்த ஆண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவின் பயணத்தில் விரைவான முன்னேற்றத்தைக் கொண்ட ஆண்டாக இருந்ததாகவும், ஒவ்வொரு துறையிலும், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் மாற்றம் காணப்படுவதாகவும், நாடு மிக வேகமாக சரியான திசையில் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். குடியரசுத் தலைவர் இந்த கருப்பொருள்களை தெளிவுடன் முன்வைத்ததாக திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.நிதி ஆயோக்கில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
December 30th, 06:33 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, நிதி ஆயோக்கில் இன்று நடைபெற்ற தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் மற்றும் வல்லுநர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்றார்.இந்தியா- இங்கிலாந்து கூட்டறிக்கை
October 09th, 03:24 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மர் 2025 அக்டோபர் 8,9 ஆகிய தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் திரு ஸ்டார்மருடன் வர்த்தக அமைச்சர் பீட்டர் கைல், ஸ்காட்லாந்து அமைச்சர் திரு டக்லஸ் அலெக்சாண்டர், முதலீட்டுத்துறை அமைச்சர் திரு ஜேசன் ஸ்டாக்வுட், 125 தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில்முனைவோர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கலாச்சார தலைவர்கள் உள்ளிட்ட உயர்நிலை குழு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது.குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்
August 25th, 06:42 pm
இன்று, நீங்கள் அனைவரும் உண்மையிலேயே ஒரு அருமையான சூழலை உருவாக்கியுள்ளீர்கள். இந்த லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனக்கு எவ்வளவு அதிர்ஷ்டம். நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும், அது ஒருபோதும் போதாதுகுஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
August 25th, 06:15 pm
குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விநாயகர் சதுர்த்தியின் உற்சாகத்தில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். விநாயகரின் ஆசிகளுடன், குஜராத்தின் முன்னேற்றம் சார்ந்த பல வளர்ச்சித் திட்டங்களின் மங்களகரமான தொடக்கத்தை குறிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்களின் காலடியில் பல திட்டங்களை அர்ப்பணிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி சார்ந்த முயற்சிகளுக்காக அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
July 16th, 02:51 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (16.07.2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் தன்-தான்ய கிருஷி யோஜனா எனப்படும் பிரதமரின் தன தானிய வேளாண் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடையாளம் காணப்படும் 100 மாவட்டங்களில், நடப்பு நிதியாண்டு முதல் (2025-26) ஆறு ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும். வேளாண் துறையிலும் அது சார்ந்த துறைகளிலும் விரைவான வளர்ச்சியை எட்டுவது தொடர்பாக இத்திட்டம் கவனம் செலுத்தும்.தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
July 01st, 04:31 pm
இந்தப் புதிய கொள்கை, தற்போதுள்ள தேசிய விளையாட்டுக் கொள்கை 2001-க்கு மாற்றாகவும் இந்தியாவை உலகளாவிய விளையாட்டு சக்தி மையமாகவும், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் உட்பட சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் சிறந்து விளங்குவதற்கான வலுவான போட்டியாளராகவும் நிலைநிறுத்துவதற்கான தொலைநோக்கு மற்றும் திட்டமிடலை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.சிக்கிம் @50வது ஆண்டுவிழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் மொழிபெயர்ப்பு
May 29th, 10:00 am
சிக்கிம் ஆளுநர் திரு. ஓ.பி. பிரகாஷ் மாத்தூர் அவர்களே; மாநிலத்தின் முதலமைச்சரும் எனது நண்பருமான பிரேம் சிங் தமாங் அவர்களே; நாடாளுமன்றத்தின் எனது சகாக்களான டோர்ஜி ஷெரிங் லெப்சா அவர்களே மற்றும் டாக்டர் இந்திரா ஹாங் சுப்பா அவர்களே; இதில் கலந்து கொண்டுள்ள மக்கள் பிரதிநிதிகளே; பெண்களே, தாய்மார்களே!சிக்கிம்@50 கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
May 29th, 09:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காங்டாக்கில் நடைபெற்ற ‘சிக்கிம்@50’ என்ற சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வின் கருப்பொருள் ‘முன்னேற்றம் இலக்கைச் சந்திக்கும் இடம் - இயற்கை, வளர்ச்சியை மேம்படுத்தும் இடம்’ என்பதாகும். இந்த நிகழ்வில் பேசிய அவர், சிக்கிம் மாநிலத்தின் 50-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த சிறப்பு நாளில் சிக்கிம் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். மக்களின் உற்சாகம், ஆற்றல் ஆகியவற்றை நேரில் காண விரும்புவதாகவும், ஆனால் மோசமான வானிலை காரணமாக, நேரில் வர முடியவில்லை என்றும் அவர் கூறினார். விரைவில் சிக்கிமுக்கு வருகை தந்து மாநிலத்தின் சாதனைகளிலும் கொண்டாட்டங்களிலும் பங்கேற்க இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். இன்றைய நாள் என்பது மாநிலத்தின் கடந்த 50 ஆண்டுகால சாதனைகளைக் கொண்டாடும் நாள் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த பிரமாண்டமான நிகழ்வை மறக்கமுடியாததாக மாற்றிய சிக்கிம் முதலமைச்சரையும் அவரது குழுவினரின் ஆற்றலையும் பிரதமர் பாராட்டினார். சிக்கிம் மாநிலத்தின் பொன் விழா கொண்டாட்டங்களுக்கு அவர் மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்தார்.நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
May 24th, 07:56 pm
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதில் 24 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டின் கருப்பொருள் 'வளர்ந்த பாரதம் @2047க்கு வளர்ந்த மாநிலங்கள்' என்பதாகும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டம் தொடங்கியது.ஈடி நவ் உலகளாவிய வணிக உச்சிமாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
February 15th, 08:30 pm
கடந்த முறை ஈடி நவ் உச்சிமாநாட்டில் நான் பங்கேற்ற போது, தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில், எங்களின் மூன்றாவது பதவிக்காலத்தில் புதிய வேகத்துடன் பாரதம் செயலாற்றும் என்று நான் பணிவுடன் குறிப்பிட்டிருந்தேன். அந்த வேகம் தற்போது, நடைமுறையாகியிருப்பதில் நான் திருப்தியடைந்துள்ளேன். நாடும் அதற்கு ஆதரவாக இருக்கிறது. புதிய அரசு அமைந்தபின், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில மக்களின் வாழ்த்துகளை பிஜேபி- என்டிஏ தொடர்ந்து பெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா லட்சியத்தை ஒடிசா மக்கள் வேகப்படுத்தினர். பின்னர், ஹரியானா மக்கள் தங்களின் ஆதரவை அளித்தனர். தற்போது, தில்லி மக்கள் அமோக ஆதரவை அளித்துள்ளனர். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு நாட்டுமக்கள் எவ்வாறு தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறார்கள் என்பதற்கு இவை அங்கீகாரமாகும்.எகனாமிக் டைம்ஸ் நவ் உலக வர்த்தக உச்சி மாநாடு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
February 15th, 08:00 pm
புதுதில்லியில் நடைபெற்ற எக்கனாமிக் டைம்ஸ் நவ் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு 2025-ல் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த எக்னாமிக் டைம்ஸ் நவ் உச்சிமாநாட்டின் போது, இந்தியா புதிய வேகத்தில் பணியாற்றி வருவதாக தெரிவித்ததை நினைவு கூர்ந்தார். இந்த வேகம் இப்போது தெளிவாகத் தெரிவது குறித்தும், மக்களிடம் இருந்து ஆதரவு கிடைத்திருப்பது குறித்தும் அவர் திருப்தி தெரிவித்தார். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற உறுதிப்பாட்டிற்கு மகத்தான ஆதரவை அளித்த ஒடிசா, மகாராஷ்டிரா, ஹரியானா, புதுதில்லி மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் மக்கள் எவ்வாறு தோளோடு தோள் நின்று செயல்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று என்று அவர் கூறினார்.