PM chairs 53rd PRAGATI Meeting
August 25th, 09:31 pm
Prime Minister Shri Narendra Modi chaired the 53rd meeting of PRAGATI, the ICT-enabled, multi-modal platform for Pro-Active Governance and Timely Implementation, at Seva Teerth earlier today.யுபிஐ செயல்முறை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, யுபிஐ பயன்பாட்டு அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொள்ளுமாறு மக்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
August 25th, 11:12 am
இந்தியாவின் மின்னணு பணப்பரிவர்த்தனை பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ள ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (யுபிஐ) அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு தசாப்தம் நிறைவடைந்துள்ள நிலையில், மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள அதன் பயணத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.கர்நாடகா, ஆந்திராவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பன்னோக்கு ரயில் வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
July 24th, 04:05 pm
கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பல்லாரி-குண்டக்கல் பிரிவில் மூன்றாவது, நான்காவது ரயில் வழித்தடங்களை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 1,264 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் மக்களின் பயணம், சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றிக்கு ஊக்கமளிக்கும்.பஞ்சாபின் ஜலந்தரில் ₹5,470 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
July 17th, 03:45 pm
பஞ்சாபின் ஜலந்தரில், அப்பகுதியின் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் நோக்கமாகக் கொண்ட, ₹5,470 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தும், அவற்றுக்கான அடிக்கல் நாட்டியும் வைத்தார்.ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு ஜூலை 17 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
July 15th, 06:40 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 17 அன்று ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது சுமார் 26,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைப் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். ஹரியானா மாநிலம் ஜிந்த்-ல் காலை 11 மணியளவில் நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில் சேவையை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். ஜிந்த் - சோனிபட் இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயில், உலகின் மிக நீளமான, அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில் திட்டங்களில் ஒன்றாகும். முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வைக் கொண்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியும் குறையும்.உத்தரப்பிரதேசத்தில் ரூ.14,447.64 கோடி செலவில் என்எச்-19-வாரணாசி வட்டச்சாலை இடையே உயர்த்தப்பட்ட 6 வழித்தடங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
July 15th, 04:53 pm
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் என்எச்-19 - வாரணாசி வட்டச்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் வழித்தடத்தை அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்வைக்குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. கங்கை நதிக்கரையோரம் போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், 46.039 கிமீ தொலைவிலான இத்திட்டத்தில் 6 வழித்தடங்களைக் கொண்ட உயர்மட்ட முக்கியச் சாலை மேம்பாலம், வளைவுப் பாதைகள், இணைப்புச் சாலைகள், உள்ளிட்டவை இதில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலதனச் செலவு ரூ.14,447.64 கோடியாகும். இதில் கட்டுமானப் பணிகளுக்கான செலவு ரூ.6,037.85 கோடியும் நிலம் கையகப்படுத்துதலுக்கான செலவு ரூ.541.11 கோடியாகும்.ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் நான்கு மாவட்டங்களில் 2 ரயில்வே பல்தடத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
July 15th, 04:35 pm
ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் நான்கு மாவட்டங்களில் ரூ.3,907 கோடி செலவில் 2 ரயில்வே பல்தடத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.India-Indonesia Joint Statement on the State Visit by Prime Minister of India to Indonesia
July 07th, 05:15 pm
At the invitation of Indonesian President Prabowo Subianto, PM Modi is on a State Visit to Indonesia from 6-8 July 2026. PM Modi's visit reflects the shared commitment of the two leaders to achieve a substantial upward trajectory in the India-Indonesia Comprehensive Strategic Partnership. The two leaders held discussions at Istana Merdeka in Jakarta, covering the full spectrum of bilateral relations.ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ராவில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 04th, 12:50 pm
இந்தக் கடும் வெயிலிலும், இத்தனை இடங்களில் இவ்வளவு பிரம்மாண்டமான முறையில் நீங்கள் கூடியிருந்து எங்களுக்கு ஆசி வழங்குவது, பி.ஜே.பி. அரசாங்கத்தின் முயற்சிகளின் மீது நீங்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. ராஜஸ்தான் மண்ணின் இந்த ஆதரவுக்கும், பாசத்திற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டத்தில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
July 04th, 12:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) ராஜஸ்தானின் பலோத்ராவில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கடும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டதற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இந்த மாபெரும் மக்கள் திரளை தற்போதைய ஆட்சிக்குக் கிடைத்த ஒரு மகத்தான அங்கீகாரம் என்று குறிப்பிட்டார். அரசின் முயற்சிகளின் மீது வைத்துள்ள உயர்ந்த நம்பிக்கையைத் தெளிவாக வெளிக்காட்டும் இந்த மகத்தான ஆதரவிற்காக, ராஜஸ்தான் மண்ணிற்கு முற்றிலும் கடமைப்பட்டுள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார்.ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு பிரதமர் நாளை பயணம்: நாட்டின் முதலாவது ஒருங்கிணைந்த பெட்ரோலியம் சுத்திகரிப்பு-பெட்ரோகெமிக்கல் பசுமை வளாகத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்
July 03rd, 11:25 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (04.07.2026) ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை சுமார் 10:45 மணிக்கு ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் அவர், ஜோத்பூரில் மேம்படுத்தப்பட்ட உடான் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக, மதியம் சுமார் 12:15 மணிக்கு பலோத்ரா செல்லும் பிரதமர், அங்கு சுமார் 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தேசத்திற்கு அர்ப்பணித்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து அவர் மக்களிடம் உரையாற்றுகிறார். அதன் பின்னர் குஜராத் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர், மாலை 4:30 மணியளவில் அகமதாபாத் சாணந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி அவுட்சோர்ஸ்டு செமிகண்டக்டர் ஆலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார்.தாரகேஸ்வரில் நடைபெற்ற மேற்கு வங்காள தின விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 20th, 05:13 pm
இன்றைய நிகழ்வு, இந்தப் புதிய திட்டங்களின் தொடக்கம், புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வங்காளத்தின் உறுதிப்பாட்டிற்குச் சான்றாகும். மக்களின் முகத்தில் இருக்கும் இந்த ஒளி, ஒவ்வொரு கிராமத்திலும் காணப்படும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை - உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன். ஒரு வாக்கு, ஒரே தேர்தல், எவ்வளவு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதற்கு வங்காளமே மிகச் சிறந்த சாட்சி.ஹூக்ளியில் நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
June 20th, 05:00 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியுடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான ஹூக்ளி மாவட்டத்தின் தாரகேஸ்வரில் மாநில அளவிலான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேற்கு வங்கம்: பாரம்பரியம், நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி என்பது இந்த ஆண்டுக்கான மேற்கு வங்க தினத்தின் கருப்பொருளாகும். இது மாநிலத்தின் கலாச்சாரச் வளம், சமூக நல்லிணக்கம், வளர்ச்சி சார்ந்த விருப்பங்களை பிரதிபலிப்பதாக உள்ளது.வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான எதிர்கால உள்கட்டமைப்பை அமைப்பதற்கான அர்ப்பணிப்பிற்கு பிரதமர் மீண்டும் உறுதிபூண்டுள்ளார்
June 16th, 12:50 pm
கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு சாதனை அளவில் மேம்படுத்தப்பட்டதை காணமுடிந்ததாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாட்டு மக்களுக்காக எதிர்கால உள்கட்டமைப்பை அமைப்பதற்கான அரசின் அர்ப்பணிப்பிற்கு அவர் மீண்டும் உறுதிபூண்டுள்ளார்.இந்தியா - ஸ்லோவாக்கியா கூட்டறிக்கை
June 15th, 05:32 pm
ஸ்லோவாக் குடியரசின் பிரதமர் திரு ராபர்ட் ஃபிகோவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 15 ஜூன் 2026 அன்று ஸ்லோவாக் குடியரசிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.The trust of 140 crore Indians is our greatest strength and responsibility: PM Modi at the NDA Leaders’ Conclave
June 10th, 06:33 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.PM Modi addresses NDA Leaders' Conclave, reaffirms commitment to Viksit Bharat
June 10th, 06:30 pm
PM Modi addressed the NDA Leaders' Conclave in New Delhi, highlighting the government's commitment to fulfilling the aspirations of 140 crore Indians and accelerating India's journey towards a Viksit Bharat. Speaking at the NDA Conclave at Bharat Mandapam after becoming the longest continuously serving elected Prime Minister of India, he said, To have the opportunity to serve Maa Bharti for such a long time is possible only through God's blessings. For me, 'Janta Janardan' is God.டாமனில் நமோ மருத்துவமனையைப் பிரதமர் திறந்து வைத்தார்
June 05th, 10:25 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி டாமனில் நமோ மருத்துவமனையைத் திறந்து வைத்தார். மக்களுக்குத் தரமான சிகிச்சையை வழங்குவதற்கான தற்போதைய முயற்சிகளுக்கு இணங்க இது அமைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த மருத்துவமனை நவீன வசதிகளைக் கொண்டுள்ளதுடன், இந்த யூனியன் பிரதேசம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இது பெரும் பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.டாமன் நமோ விமான நிலையத்தில் நவீன முனையக் கட்டடத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்
June 05th, 10:18 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி டாமனில் உள்ள நமோ விமான நிலையத்தில் ஒரு நவீன முனையக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.வேலைவாய்ப்புத் திருவிழாவில் பணி நியமனக் கடிதங்கள் வழங்கி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 23rd, 11:15 am
இன்று நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிக முக்கியமான ஒரு நாளாகும். இன்று 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசுப் பணிகளுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். நீங்கள் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் மிக முக்கியமான, பொறுப்புள்ள பங்காளிகளாக மாறுகிறீர்கள். ரயில்வே, வங்கி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் பல துறைகளில் நீங்கள் புதிய பொறுப்புகளை ஏற்கப் போகிறீர்கள். வரும் ஆண்டுகளில், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் நீங்கள் மிக முக்கியப் பங்காற்றுவீர்கள்.