Today, Indian Railways is becoming modern and self-reliant: PM Modi in Malda, West Bengal

January 17th, 02:00 pm

PM Modi launched multiple projects worth ₹3,250 crore in Malda, West Bengal, strengthening connectivity and accelerating development in Bengal and the North-Eastern region. The PM also flagged off India’s first Made-in-India Vande Bharat Sleeper Train, connecting the land of Maa Kali with the land of Maa Kamakhya. He interacted with passengers at Malda station, who described the journey as an extraordinary experience.

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ₹3,250 கோடி மதிப்புள்ள ரயில், சாலை உள்கட்டமைப்பு திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

January 17th, 01:45 pm

மேற்கு வங்காளத்தின் மால்டாவில் ₹3,250 கோடி மதிப்பிலான பல ரயில், சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.01.2026) தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேற்கு வங்கத்திலும் வடகிழக்கு பகுதிகளிலும் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவதையும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான இயக்கம் இன்று மால்டாவிலிருந்து மேலும் வேகம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தின் வளர்ச்சி தொடர்பான பல திட்டங்கள் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டு பல திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். மேற்கு வங்கத்திற்கு புதிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டங்கள் மக்களுக்கு பயணத்தையும் வர்த்தகத்தையும் எளிதாக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்தில் ஜனவரி 17-18 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

January 16th, 01:55 pm

ஜனவரி 17 அன்று, மதியம் சுமார் 12:45 மணியளவில், மால்டாவிற்கு செல்லும் பிரதமர், ஹவுரா - குவஹாத்தி (காமாக்யா) இடையே, தூங்கும் வசதிகொண்ட இந்தியாவின் முதலாவது வந்தே பாரத் ரயிலை மால்டா நகர் ரயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைப்பார். அதன் பின், பிற்பகல் சுமார் 1:45 மணியளவில், மால்டாவில் நடைபெறும் பொது நிகழ்வில், ரூ. 3,250 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்; நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

The North East will lead India's future growth: PM Modi at inauguration of Lokapriya Gopinath Bardoloi International Airport in Guwahati, Assam

December 20th, 03:20 pm

Marking a transformative milestone in Assam’s connectivity, PM Modi inaugurated the new terminal building of Lokapriya Gopinath Bardoloi International Airport in Guwahati. He emphasised that for him, the development of Assam is not only a necessity but also a responsibility and an accountability. The PM highlighted that in the past eleven years, development projects worth lakhs of crores of rupees have been initiated for Assam and the Northeast.

பிரதமர் திரு நரேந்திர மோடி, அசாமின் குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்

December 20th, 03:10 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு மோடி, இன்று அசாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் திருவிழா என்று கூறினார். முன்னேற்றத்தின் ஒளி மக்களைச் சென்றடையும்போது, வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையும் புதிய உயரங்களைத் தொடத் தொடங்குகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மேலும், அசாமின் முதல் முதலமைச்சரும், மாநிலத்தின் பெருமைக்குரியவருமான கோபிநாத் பர்தோலோயின் சிலையைத் திறந்து வைக்கும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததாக பிரதமர் குறிப்பிட்டார். திரு பர்தோலோய் அசாமின் அடையாளம், எதிர்காலம் மற்றும் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவில்லை என்றும், அவரது சிலை எதிர்காலச் சந்ததியினருக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து, அவர்களுக்கு அசாம் மீது ஆழ்ந்த பெருமை உணர்வை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

ஆறு மாநிலங்களில் நான்கு பல்தட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

July 31st, 03:13 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (31.07.2025) நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் 4 பல் தட ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மொத்த செலவு மதிப்பீடு 11,169 கோடி ரூபாய் ஆகும்.

சிலிகுரியில் நடைபெற்ற 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த மேற்கு வங்கம்' நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

March 09th, 04:10 pm

மேற்கு வங்க ஆளுநர் திரு. சி.வி. ஆனந்த போஸ் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, நிசித் பிரமானிக் அவர்களே, ஜான் பர்லா அவர்களே, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்றத்தில் உள்ள எனது சகாக்களே, சுகந்தா மஜும்தார், குமாரி தேபஸ்ரீ சவுத்ரி அவர்களே, காகன் முர்மு அவர்களே, ராஜு பிஸ்தா அவர்களே, டாக்டர் ஜெயந்தகுமார் ராய் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, சிறப்பு விருந்தினர்களே

மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த மேற்கு வங்கம்' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

March 09th, 03:45 pm

மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இன்று நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த மேற்கு வங்கம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். மேற்கு வங்கத்தில் ரூ.4,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான ரயில் மற்றும் சாலைத் துறையின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை அஸ்ஸாமில் மே 29-ம் தேதி பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

May 28th, 05:35 pm

அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும். கவுகாத்தியை நியூ ஜல்பைகுரியுடன் இணைப்பதில், தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இந்த ரயில் சுமார் ஒரு மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும். வந்தே பாரத் ரயில் இந்தப் பயணத்தை 5 மணி 30 நிமிடங்களில் கடந்து செல்லும், அதே நேரத்தில் தற்போதைய அதிவேக ரயில் 6 மணிநேரம் 30 நிமிடங்களில் அதே பயணத்தை மேற்கொள்ளும்.

The people of Bengal possess the spirit of Nation First: PM Modi

December 30th, 11:50 am

PM Modi flagged off the Vande Bharat Express, connecting Howrah to New Jalpaiguri as well as inaugurated other metro and railway projects in West Bengal via video conferencing. The PM linked reforms and development of Indian Railways with the development of the country. He said that the central government was making record investments in the modern railway infrastructure.

PM flags off Vande Bharat Express connecting Howrah to New Jalpaiguri via video conferencing

December 30th, 11:25 am

PM Modi flagged off the Vande Bharat Express, connecting Howrah to New Jalpaiguri as well as inaugurated other metro and railway projects in West Bengal via video conferencing. The PM linked reforms and development of Indian Railways with the development of the country. He said that the central government was making record investments in the modern railway infrastructure.

டிசம்பர் 30-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் செல்கிறார் பிரதமர்

December 29th, 12:35 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:15 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்தை சென்றடையும் பிரதமர், அங்கு ஹவுராவை நியூ ஜல்பைகுரியுடன் இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். கொல்கத்தா மெட்ரோவில் ஜோகா-தரதாலா வரையிலான பர்பிள் லைன் பிரிவின் போக்குவரத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். நண்பகல் 12 மணியளவில், பிரதமர் ஐஎன்எஸ் நேதாஜி சுபாஷ் தளத்தை அடைந்து, அங்கு அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி - தேசிய நீர் மற்றும் சுகாதார நிறுவனத்தை அவர் திறந்து வைக்கிறார். தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின் கீழ் மேற்கு வங்கத்திற்கான பல்வேறு பாதாள சாக்கடை கட்டமைப்பு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டும் அவர் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். மதியம் 12:25 மணியளவில், தேசிய கங்கா கவுன்சிலின் இரண்டாவது கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்குவார்.