நெதர்லாந்து நாட்டின் அரசி பிரதமரைச் சந்தித்தார்
June 25th, 10:40 pm
நெதர்லாந்து நாட்டின் அரசியும் நிதி ஆரோக்கியத்திற்கான ஐநா பொதுச்செயலாளரின் சிறப்பு ஆலோசகராகவும் இருக்கும் மாக்சிமா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், கோடை வெப்பத்தைத் தணிப்பதற்கான ஆலோசனைகளைப் பிரதமர் மோடி பகிர்ந்துகொள்கிறார், மேலும் குடிமக்களை நீரேற்றத்துடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.
May 31st, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசத்தின் பல்வேறு பாகங்களில் நமது நாட்டுமக்கள், தேசத்தின் நலனுக்காக, சமூகநலனுக்காக செயல்படுத்திவரும் அற்புதமான விஷயங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, நமக்குள் ஒரு புதிய உத்வேகம் பிறக்கிறது. இன்று நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தடகளப் போட்டிகளில் தேசம் செய்திருக்கும் சாதனையைப் பற்றியே நான் பகிர இருக்கிறேன். சில நாட்கள் முன்பாக, ஜார்க்கண்டின் ராஞ்சியிலே, தேசிய முதுநிலைத் தடகளக் கூட்டமைப்புப் போட்டிகள் நடைபெற்றன. இதிலே நாடெங்கிலுமிருந்தும் சுமார் 800 தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். நான்கு தனித்தனிப் போட்டிகளில் முந்தைய தேசியப் பதிவுகள் முறியடிக்கப்பட்டன. குரிந்தர்வீர் சிங், விஷால் டீகே, தேஜஸ்வின் ஷங்கர், தேவ்மீனா, குல்தீப் குமார் ஆகிய நண்பர்கள் பல்வேறு பிரிவுகளில் புதிய சாதனைகளைப் படைத்தார்கள். நான் முதன்மையாக இவர்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வேலைவாய்ப்புத் திருவிழாவில் பணி நியமனக் கடிதங்கள் வழங்கி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
May 23rd, 11:15 am
இன்று நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிக முக்கியமான ஒரு நாளாகும். இன்று 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசுப் பணிகளுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். நீங்கள் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் மிக முக்கியமான, பொறுப்புள்ள பங்காளிகளாக மாறுகிறீர்கள். ரயில்வே, வங்கி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் பல துறைகளில் நீங்கள் புதிய பொறுப்புகளை ஏற்கப் போகிறீர்கள். வரும் ஆண்டுகளில், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் நீங்கள் மிக முக்கியப் பங்காற்றுவீர்கள்.வேலைவாய்ப்பு முகாமின் கீழ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000 இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நியமனக் கடிதங்களை வழங்கினார்
May 23rd, 11:00 am
பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000 இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நியமனக் கடிதங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த நிகழ்வு நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் என்று விவரித்தார். அரசு சேவையில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்ற அவர், ரயில்வே, வங்கி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்களின் உடனடி பங்களிப்பை வலியுறுத்தினார். வரவிருக்கும் ஆண்டுகளில், வளர்ந்த பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நீங்கள் அனைவரும் முக்கிய பங்கு வகிப்பீர்கள் என்று திரு மோடி கூறினார்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்
May 17th, 02:47 am
பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது கீழ்க்கண்ட ஒப்பந்தங்கள்/ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ கையெழுத்திடப்பட்டு, பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
May 17th, 02:35 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹேக்கில் உள்ள நெதர்லாந்துப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நெதர்லாந்து பிரதமர் திரு. ராப் ஜெட்டனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.நெதர்லாந்து பிரதமருடனான தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 16th, 11:58 pm
எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏறத்தாழ ஒரு தசாப்தத்திற்குப் பிறகு நெதர்லாந்திற்கு வருகை தருவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா - நெதர்லாந்து இடையேயான கூட்டு செயல்பாடுகள் வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.செமிகண்டக்டர் உற்பத்தி தொடர்பாக ஏஎஸ்எம்எல், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதைப் பிரதமர் பார்வையிட்டார்
May 16th, 10:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனுடன் இணைந்து, குஜராத்தின் தோலேராவில் உள்ள குறைக்கடத்தி (செமி கண்டக்டர்) உற்பத்தி ஆலைக்கு ஆதரவளிப்பதற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ், ஏஎஸ்எம்எல் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை பார்வையிட்டார்.சோழர் கால செப்பேடுகள் மீட்பு
May 16th, 10:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டன் ஆகியோர் முன்னிலையில், லைடன் பல்கலைக்கழக நூலகம், 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகளை இந்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தது.இந்திய-நெதர்லாந்து தலைமை நிர்வாக அதிகாரிகள் வட்டமேஜை கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 16th, 10:00 pm
உலகின் மிகச்சிறந்த மற்றும் புதுமையான நிறுவனங்களின் தலைவர்கள் மத்தியில் இன்று இங்கு இருப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இன்று 300க்கும் மேற்பட்ட நெதர்லாந்து நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் மீது நீங்கள் வைத்துள்ள தொலைநோக்கு பார்வையின் காரணமாகவும், நம்பிக்கையின் காரணமாகவும், ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குள் முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும் நெதர்லாந்து திகழ்கிறது.பிரதமர், நெதர்லாந்தின் மாண்புமிகு மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்சிமா ஆகியோரைச் சந்தித்தார்
May 16th, 08:13 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹேக்கில் உள்ள ஹுயிஸ் டென் போஷ் அரண்மனையில், நெதர்லாந்தின் மாண்புமிகு மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்சிமா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.பிரதமர் மோடி நெதர்லாந்துக்கு வருகை
May 15th, 11:35 pm
தனது ஐந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக பிரதமர் மோடி நெதர்லாந்துக்கு வருகை தந்தார். அவர் வந்தடைந்ததும் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.Prime Minister’s Departure Statement ahead of his visit to the UAE, Netherlands, Sweden, Norway, and Italy
May 15th, 07:56 am
PM Modi is embarking on a five-nation visit to the UAE, the Netherlands, Sweden, Norway and Italy from 15-20 May 2026. During the visit, he will meet various Heads of State and hold discussions to further strengthen partnerships across key sectors. Highlights of the visit include his participation in the European Round Table for Industry in Sweden and the 3rd India-Nordic Summit in Oslo.ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலிக்கு பிரதமரின் பயணம் (மே 15 - 20, 2026)
May 11th, 09:00 pm
பிரதமர் மோடி, மே 15 முதல் மே 20, 2026 வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, அவர் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து, பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார். நெதர்லாந்தில், பிரதமர் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டரைச் சந்தித்து, பிரதமர் ராப் ஜெட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். சுவீடனில், அவர் பிரதமர் கிறிஸ்டர்சனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். நார்வேயில், அவர் மன்னர் ஹரால்ட் V-ஐ சந்தித்து, பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார். பின்னர், அவர் இத்தாலிக்குச் சென்று பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.Prime Minister speaks with Prime Minister of Netherlands
March 30th, 09:34 pm
PM Modi spoke with the Netherlands PM Rob Jetten. The two leaders discussed ways to further strengthen India-Netherlands ties. The PM highlighted the potential of their partnership in multiple areas and reiterated the need for early restoration of peace and stability in the West Asia region.நெதர்லாந்து பிரதமராக பதவியேற்றுள்ள திரு ராப் ஜெட்டனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
February 24th, 02:33 pm
நெதர்லாந்து பிரதமராக பதவியேற்றுள்ள திரு ராப் ஜெட்டனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.Visit of H.E. Mr. Dick Schoof, Prime Minister of the Netherlands, to India
February 19th, 08:47 pm
PM Modi held a bilateral meeting with H.E. Mr. Dick Schoof, Prime Minister of the Netherlands. Prime Minister Schoof underscored the importance of the Summit and expressed confidence that the Summit Declaration will steer future policy discussions. Reviewing the bilateral relationship, both leaders welcomed the steady progress in the India-Netherlands partnership.இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கக் கண்காட்சி 2026-ஐ பிப்ரவரி 16 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
February 15th, 02:21 pm
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கக் கண்காட்சி 2026-ஐ 2026, பிப்ரவரி 16 அன்று மாலை 5 மணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். இது பிப்ரவரி 20 வரை நடைபெறும்.நெதர்லாந்து பிரதமர் திரு டிக் ஷூஃப், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேச்சு நடத்தினார்
December 18th, 06:51 pm
நெதர்லாந்து பிரதமர் திரு டிக் ஸ்கூஃப், பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார்.பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நெதர்லாந்து பிரதமருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
July 02nd, 08:22 pm
நெதர்லாந்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள டிக் ஷூஃபுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்