
நவ்கார் மகாமந்திர தினத் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
April 09th, 08:15 am
மனம் சாந்தி பெற்றது, மனம் நிலைபெற்றது, அமைதி மட்டுமே, ஒரு அற்புதமான உணர்வு, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது. நவ்கார் மகாமந்திரம் இன்னும் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. நவ்கார் மஹாமந்திரத்தின் ஆன்மீக சக்தியை நான் இன்னும் எனக்குள் உணர்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் இதேபோன்ற வெகுஜன மந்திர உச்சாடனத்தை நான் பார்த்தேன். இன்று அதே உணர்வு, அதே ஆழத்துடன் எனக்கு ஏற்பட்டது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான புண்ணிய ஆத்மாக்கள் ஒரே உணர்வோடு, வார்த்தைகள் ஒன்றாகப் பேசப்பட்டு, ஒன்றாக எழுப்பப்பட்ட சக்தி உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாகும்.
நவ்கார் மகாமந்திர தினத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
April 09th, 07:47 am
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நவ்கார் மகாமந்திர தினத்தைத் தொடங்கி வைத்து அதில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நவ்கார் மந்திரத்தின் ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தை எடுத்துரைத்து, மனதில் அமைதியையும் நிலைத்தன்மையையும் கொண்டுவரும் அதன் திறனை எடுத்துரைத்தார். வார்த்தைகள், எண்ணங்கள் ஆகியவற்றைக் கடந்து, ஆழ்மனதிலும் பிரக்ஞையிலும் ஆழமாக எதிரொலிக்கும் அசாதாரண அமைதி உணர்வு குறித்து அவர் குறிப்பிட்டார். நவ்கார் மந்திரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, அதன் புனித ஸ்லோகங்களைக் கூறியதுடன், இந்த மந்திரம் ஒன்றுபட்ட ஆற்றல், நிலைத்தன்மை, சமநிலை, சிறந்த உணர்வு, உள் ஒளி ஆகியவற்றை உள்ளடக்கியது என்று விவரித்தார். தமது சொந்த அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், நவ்கார் மந்திரத்தின் ஆன்மீக சக்தியை அவர் எவ்வாறு தொடர்ந்து உணர்கிறார் என்பதைப் பகிர்ந்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் இதேபோன்ற கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வில் தான் பங்கேற்று இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். அது அவர் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள லட்சக்கணக்கான நல்லொழுக்கமுள்ள ஆத்மாக்கள் ஒன்றுபட்ட உணர்வுடன் ஒன்றிணைந்த இணையற்ற அனுபவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். கூட்டு ஆற்றல், ஒருங்கிணைந்த சொற்கள் ஆகியவை குறித்தும் அவர் குறிப்பிட்டார். இது உண்மையிலேயே அசாதாரணமானது எனவும் ஈடு இணையில்லாதது என்றும் அவர் விவரித்தார்.
புதுதில்லியில் ஏப்ரல் 9 அன்று நவ்கார் மகாமந்திர தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
April 07th, 05:23 pm
புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஏப்ரல் 9 அன்று காலை 8 மணியளவில் நவ்கார் மகாமந்திர தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.