PM Modi expresses gratitude to world leaders for birthday wishes

September 17th, 03:03 pm

The Prime Minister Shri Narendra Modi expressed his gratitude to the world leaders for greetings on his 75th birthday, today.

மொரீஷியஸ் பிரதமரின் இந்தியப் பயணத்தின் பலன்கள்

September 11th, 02:10 pm

அரசு முறைப் பயணமாக மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலம் இந்தியா வந்துள்ளார். அவரது இந்தப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

இந்தியா-மொரீஷியஸ் நாடுகளின் கூட்டறிக்கை- சிறப்பு பொருளாதார தொகுப்பு

September 11th, 01:53 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திரா ராம்கூலம் இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இருதலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளது என்றும், இருதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-மொரீஷியஸ் நாடுகள் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி புதிய சர் சிவூசாகூர் ராம்கூலம் தேசிய மருத்துவமனை, ஆயுஷ் சீர்மிகு மையம், கால்நடை பள்ளி மற்றும் விலங்குகளுக்கான மருத்துவமனை, ஹெலிகாப்டர் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் மானிய உதவியுடன் இருநாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. இத்திட்டங்களுக்காக 215 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (1.80 பில்லியன் மொரீஷியஸ் ரூபாய்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மானிய உதவியுடன் கூடிய வங்கிக்கடன்கள் மூலம் எஸ்எஸ்ஆர் சர்வதேச விமான நிலையத்தில் புதிய தானியங்கி தட்பவெப்பநிலையை கட்டுப்படுத்தும் உபகரணங்களுடன் கூடிய வளாகம், சாலை கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுப்புறச்சாலையில் 2-ம் கட்டப்பணிகள் மற்றும் துறைமுகங்களுக்கான உபகரணங்களை கொள்முதல் செய்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இதற்கென 440 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மொரீஷியஸ் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 11th, 12:30 pm

எனது மக்களவைத் தொகுதிக்கு உங்களை வரவேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். காசி என்பது எப்போதும் இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு செப்டம்பர் 11 - ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்

September 10th, 01:01 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்குச் செல்கிறார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி மொரீஷியஸ் பிரதமருடன் இருநாட்டு நட்புறவை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்

June 24th, 09:54 pm

மொரீஷியஸ் குடியரசின் பிரதமர் டாக்டர் நவின்சந்திர ராம்கூலத்துடன், பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உலகம் கடுமையாகக் கண்டிக்கிறது

April 24th, 03:29 pm

ஏப்ரல் 22, 2025 அன்று அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், உலகத் தலைவர்களிடமிருந்து வலுவான ஒற்றுமை அலையை எழுப்பியுள்ளது. உலகளாவிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பூமியின் கடைசி வரை துரத்தும் என்று சபதம் செய்தார்.

மொரீஷியஸில் அடல் பிஹாரி வாஜ்பாய் பொதுச் சேவை மற்றும் புத்தாக்க நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலமும் இணைந்து தொடங்கி வைத்தனர்

March 12th, 03:13 pm

மொரீஷியஸ் நாட்டின் ரிடூட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் பொதுச் சேவை மற்றும் புத்தாக்க நிறுவனத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலமும் இன்று கூட்டாகத் தொடங்கி வைத்தனர். இந்தியா-மொரீஷியஸ் மேம்பாட்டு கூட்டாண்மையின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த முக்கிய திட்டம், மொரீஷியஸில் திறன் மேம்பாட்டுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது.

இரண்டு நாள் பயணமாக மொரீஷியஸ் வந்தடைந்தார் பிரதமர் மோடி

March 11th, 08:33 am

பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு மொரீஷியஸுக்கு வந்தார். இரண்டு நாள் பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார். மொரீஷியஸின் 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக அவர் பங்கேற்பார், மேலும் மொரீஷியஸ் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களைச் சந்திப்பார்.

மொரீஷியஸ் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை

March 10th, 06:18 pm

எனது நண்பர் பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களின் அழைப்பை ஏற்று, மொரீஷியஸின் 57வதுதேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நான் மொரீஷியஸுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறேன்.

மார்ச் 11-12, 2025 அன்று பிரதமர் மோடி மொரீஷியஸுக்கு பயணம் மேற்கொள்கிறார்

March 07th, 06:17 pm

பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலமின் அழைப்பின் பேரில், மார்ச் 11-12 அன்று பிரதமர் மோடி மொரீஷியஸுக்குச் சென்று தேசிய தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வார். இந்தப் பயணத்தின் போது, ​​அவர் முக்கியத் தலைவர்களைச் சந்திப்பார், இந்திய வம்சாவளி சமூகத்தினரிடம் பேசுவார், மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பார். பகிரப்பட்ட வரலாறு மற்றும் முன்னேற்றத்தில் வேரூன்றிய வலுவான இந்தியா-மொரீஷியஸ் கூட்டாண்மையை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.