'மன் கீ பாத்' (மனதின் குரல்) என்பது மக்களின் கூட்டு முயற்சிகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒரு சிறந்த தளமாகும்: பிரதமர் மோடி
November 30th, 11:30 am
இந்த மாத 'மன் கீ பாத்'தில் (மனதின் குரல்), அரசியலமைப்பு தின கொண்டாட்டங்கள், வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவு, அயோத்தியில் தர்ம த்வஜ் ஏற்றுதல், ஐஎன்எஸ் 'மஹே' கப்பல் அறிமுகம் மற்றும் குருக்ஷேத்திராவில் சர்வதேச கீத மஹோத்சவம் உள்ளிட்ட நவம்பர் மாதத்தின் முக்கிய நிகழ்வுகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். உணவு தானியங்கள் மற்றும் தேன் உற்பத்தியில் சாதனை, இந்தியாவின் விளையாட்டு வெற்றிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் இயற்கை விவசாயம் போன்ற பல முக்கிய கருப்பொருள்களையும் அவர் தொட்டார். காசி-தமிழ் சங்கமத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.இந்தோனேசியா அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமரின் அறிக்கை
January 25th, 01:00 pm
இந்தியாவின் முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேஷியா எங்கள் தலைமை விருந்தினராக இருந்தது. மேலும், நமது 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், இந்தோனேஷியா மீண்டும் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதை மனதார ஏற்றுக்கொண்டது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்தச் சந்தர்ப்பத்தில் அதிபர் பிரபோவோவை நான் இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் போர் கப்பல்களை அர்ப்பணித்த போது பிரதமர் ஆற்றிய உரை
January 15th, 11:08 am
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, மகாராஷ்டிரத்தின் பிரபலமான முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது மூத்த சகாக்களே, திரு ராஜ்நாத் சிங் அவர்களே, மகாராஷ்டிர முதலமைச்சர் சஞ்சய் சேத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, அஜித் பவார் அவர்களே, ராணுவ தளபதி அவர்களே, கடற்படை தளபதி அவரகளே, அனைத்து கடற்படை சகாக்களே, மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து சக ஊழியர்களே, விருந்தினர்களே, பெண்கள் மற்றும் தாய்மார்களே.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்ஷீர் ஆகிய முன்னணி கடற்படை போர் கப்பல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
January 15th, 10:30 am
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது உரையாற்றிய திரு மோடி, ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கடைபிடிக்கப்படுவதாகவும், நாட்டின் பாதுகாப்புக்காக தனது உயிரைத் தியாகம் செய்யும் ஒவ்வொரு துணிச்சலான போர்வீரருக்கும் மரியாதை செலுத்துவதாகவும் கூறினார். இந்த தருணத்தில் அனைத்து துணிச்சலான வீரர்களையும் அவர் வாழ்த்துவதாக தெரிவித்தார்.இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-ஆவது நிறுவன தினத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 14th, 10:45 am
மத்திய அமைச்சர்கள் குழுவின் எனது சக நண்பர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, டபிள்யூ.எம்.ஓவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் செலஸ்டி சவுலோ அவர்களே, வெளிநாட்டிலிருந்து வந்துள்ள எங்கள் விருந்தினர்களே, புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். எம் ரவிச்சந்திரன் அவர்களே, ஐ.எம்.டியின் தலைமை இயக்குநர் டாக்டர். மிருத்யுஞ்சய் மொஹபத்ரா அவர்களே, பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் விஞ்ஞானிகளே, அதிகாரிகளே, தாய்மார்களே, அன்பர்களே!இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
January 14th, 10:30 am
புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று (14.01.2024) நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆண்டுகள் ஆனது இத்துறையின் பயணத்தை மட்டுமல்ல என்றும் இந்தியாவின் நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க பயணத்தையும் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார். இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்துள்ளது என்றும் இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளமாக மாறியுள்ளது என்றும் அவர் பாராட்டினார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சாதனைகள் குறித்த நினைவு அஞ்சல் தலையையும் நாணயத்தையும் இன்று பிரதமர் வெளியிடப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ம் ஆண்டில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எதிர்காலத்தை கோடிட்டுக் காட்டும் தொலைநோக்கு ஆவணத்தையும் அவர் வெளியிட்டார். ஐஎம்டி எனப்படும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது ஆண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.அரசியலமைப்புச் சட்டம் எங்களின் வழிகாட்டி வெளிச்சம்: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
December 29th, 11:30 am
நண்பர்களே, அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா நடைபெற இருக்கிறது. இந்த வேளையில், அங்கே சங்கமத்தின் கரையில் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன. சில நாட்கள் முன்பாக நான் பிரயாக்ராஜ் சென்றிருந்த வேளையில், ஹெலிகாப்டர் மூலமாக மொத்த கும்பமேளாவும் நடைபெறவுள்ள இடத்தையும் பார்வையிட்ட போது மனதில் பெரும் நிறைவு உண்டானது. என்னவொரு விசாலம்!! என்னவொரு அழகு!! எத்தனை பிரும்மாண்டம்!! அடேயப்பா!!