அகமதாபாத் மலர்க் கண்காட்சி, படைப்பாற்றல், நிலைத்தன்மை மற்றும் சமூக உணர்வின் கொண்டாட்டமாகத் திகழ்வதாக பிரதமர் பாராட்டு
January 02nd, 03:45 pm
அகமதாபாத் மலர்க் கண்காட்சி, படைப்பாற்றல், நிலைத்தன்மை, சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை ஒன்றிணைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்த நிகழ்வு, நகரத்தின் துடிப்பான உணர்வையும் இயற்கையின் மீதான நீடித்த அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது.Critical minerals are a shared resource of humanity: PM Modi at G20 Johannesburg Summit Session - 2
November 22nd, 09:57 pm
In his statement during the G20 Summit Session - 2 in Johannesburg, South Africa, PM Modi touched upon important topics like critical minerals, natural disasters, space technology and clean energy. The PM highlighted that India is promoting millets. He also said that the G20 must promote comprehensive strategies that link nutrition, public health, sustainable agriculture and disaster preparedness to build a strong global security framework.Prime Minister participates in G20 Summit in Johannesburg
November 22nd, 09:35 pm
Prime Minister participated today in the G20 Leaders’ Summit hosted by the President of South Africa, H.E. Mr. Cyril Ramaphosa in Johannesburg. This was Prime Minister’s 12th participation in G20 Summits. Prime Minister addressed both the sessions of the opening day of the Summit. He thanked President Ramaphosa for his warm hospitality and for successfully hosting the Summit.உத்தராகண்டின் 25-ம் ஆண்டு நிறுவன தினம் - அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
November 09th, 09:05 am
உத்தராகண்ட் மாநிலம் நிறுவப்பட்டதன் 25-ம் ஆண்டு நிறைவையொட்டி, அந்த மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இயற்கையின் மடியில் அமைந்திருக்கும் இந்த தெய்வீக பூமி, சுற்றுலாவோடு அனைத்துத் துறைகளிலும் புதிய முன்னேற்றத்தைப் பெற்று வருகிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.சத்தீஸ்கர் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
November 01st, 09:24 am
சத்தீஸ்கர் மாநிலத்தின் 25-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.வேலை வாய்ப்புத் திருவிழாவின் கீழ் 51,000- க்கும் மேற்பட்டோருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 12th, 11:30 am
மத்திய அரசில் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் இயக்கம் சீராகத் தொடர்கிறது. பரிந்துரை இல்லை, ஊழல் இல்லை. இன்று, 51,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கெனவே மத்திய அரசுத் துறைகளில் நிரந்தர வேலைகளைப் பெற்றுள்ளனர். இந்த இளைஞர்கள் இப்போது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார்கள். இன்று, உங்களில் பலர் இந்திய ரயில்வேயில் உங்கள் பொறுப்புகளைத் தொடங்கியுள்ளீர்கள். சிலர் இப்போது பாதுகாப்பு துறையில் இணைந்து நாட்டின் பாதுகாவலர்களாக மாறுகிறீர்கள். அஞ்சல் துறையில் நியமிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் அரசு சேவைகளை வழங்க உதவுவார்கள். சிலர் அனைவருக்கும் சுகாதாரம் என்ற திட்டத்தில் பங்களிப்பை வழங்குவார்கள். பல இளம் தொழில் வல்லுநர்கள் நிதி சேர்க்கையை விரைவுபடுத்த உதவுவார்கள். மற்றவர்கள் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்துவார்கள். உங்கள் துறைகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் இலக்கு ஒன்றுதான். அந்த இலக்கு என்ன? நாம் அதை மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். துறை, பணி, பதவி அல்லது பிராந்தியம் எதுவாக இருந்தாலும் ஒரே குறிக்கோள் தேசத்திற்கு சேவை செய்வதே. வழிகாட்டும் கொள்கை என்பது மக்களே முதன்மையானவர்கள் என்பதாகும். நாட்டு மக்களுக்கு சேவை செய்ய உங்களுக்கு ஒரு சிறந்த தளம் வழங்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் ஒரு முக்கியமான கட்டத்தில் இந்த பெரிய வெற்றியை அடைந்ததற்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்கள் வாழ்க்கையில் இந்த புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் திரு. நரேந்திர மோடி வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார்
July 12th, 11:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வேலைவாய்ப்பு திருவிழாவில் உரையாற்றினார். மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு இன்று காணொலி மூலம் 51,000க்கும் மேற்பட்ட பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த இளைஞர்களுக்கு புதிய பொறுப்புகள் இன்று தொடங்குகின்றன என்று கூறினார். பல்வேறு துறைகளில் தங்கள் சேவையைத் தொடங்கிய இளைஞர்களை அவர் வாழ்த்தினார். இளைஞர்களுக்கு வெவ்வேறு பொறுப்புகள் இருந்தபோதிலும், அவர்களின் பொதுவான குறிக்கோள் முதலில் குடிமகன் என்ற கொள்கையால் வழிநடத்தப்படும் தேசிய சேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமரின் உரை
June 21st, 07:06 am
ஆந்திரப் பிரதேச ஆளுநர் சையத் அப்துல் நசீர் அவர்களே, இந்த மாநிலத்தின் முதலமைச்சர், எனது அன்பு நண்பர் சந்திரபாபு நாயுடு அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், கே. ராம்மோகன் நாயுடு அவர்களே, பிரதாப்ராவ் ஜாதவ் அவர்களே, சந்திரசேகர், பூபதி ராஜு ஸ்ரீனிவாஸ் வர்மா, மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவர்களே, பிற பிரமுகர்கள் மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
June 21st, 06:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின நிகழ்வில் உரையாற்றினார். சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கி யோகா அமர்வில் பங்கேற்றார்.மேற்குவங்க மாநிலம் அலிப்பூர்துவாரில் நகர்ப்புற எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பிரதமர் ஆற்றிய உரை
May 29th, 01:30 pm
அலிப்பூர்துவாரின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பூமியிலிருந்து மேற்குவங்க மாநில மக்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்!பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கு வங்கம், அலிப்பூர்துவாரில் ரூ.1010 கோடிக்கும் அதிக மதிப்பிலான நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்குப் அடிக்கல் நாட்டினார்
May 29th, 01:20 pm
இந்தியாவில் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மேற்கு வங்காளத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், வரலாற்று சிறப்புமிக்க அலிப்பூர்துவாரில் இருந்து மேற்கு வங்க மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்வதாகக் கூறினார். இந்தப் பிராந்தியத்தின் வளமான கலாச்சார முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இது அதன் எல்லைகளால் மட்டுமல்ல, அதன் ஆழமான வேரூன்றிய மரபுகள் மற்றும் தொடர்புகளாலும் வரையறுக்கப்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அலிப்பூர்துவார் பூட்டானுடன் அதன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது என்றும், மறுபுறம் அசாம் அதை வரவேற்கிறது என்றும், ஜல்பைகுரியின் இயற்கை அழகு மற்றும் கூச் பெஹாரின் பெருமை ஆகியவை பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக உள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த வளமான நிலத்தைப் பார்வையிடுவதற்கான தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார். இது வங்காளத்தின் பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையில் அதன் பங்கை சுட்டுக் காட்டுகிறது.சிக்கிம் @50வது ஆண்டுவிழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் மொழிபெயர்ப்பு
May 29th, 10:00 am
சிக்கிம் ஆளுநர் திரு. ஓ.பி. பிரகாஷ் மாத்தூர் அவர்களே; மாநிலத்தின் முதலமைச்சரும் எனது நண்பருமான பிரேம் சிங் தமாங் அவர்களே; நாடாளுமன்றத்தின் எனது சகாக்களான டோர்ஜி ஷெரிங் லெப்சா அவர்களே மற்றும் டாக்டர் இந்திரா ஹாங் சுப்பா அவர்களே; இதில் கலந்து கொண்டுள்ள மக்கள் பிரதிநிதிகளே; பெண்களே, தாய்மார்களே!சிக்கிம்@50 கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
May 29th, 09:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காங்டாக்கில் நடைபெற்ற ‘சிக்கிம்@50’ என்ற சிக்கிம் மாநிலம் உருவான 50-வது ஆண்டு நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்வின் கருப்பொருள் ‘முன்னேற்றம் இலக்கைச் சந்திக்கும் இடம் - இயற்கை, வளர்ச்சியை மேம்படுத்தும் இடம்’ என்பதாகும். இந்த நிகழ்வில் பேசிய அவர், சிக்கிம் மாநிலத்தின் 50-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த சிறப்பு நாளில் சிக்கிம் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். மக்களின் உற்சாகம், ஆற்றல் ஆகியவற்றை நேரில் காண விரும்புவதாகவும், ஆனால் மோசமான வானிலை காரணமாக, நேரில் வர முடியவில்லை என்றும் அவர் கூறினார். விரைவில் சிக்கிமுக்கு வருகை தந்து மாநிலத்தின் சாதனைகளிலும் கொண்டாட்டங்களிலும் பங்கேற்க இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். இன்றைய நாள் என்பது மாநிலத்தின் கடந்த 50 ஆண்டுகால சாதனைகளைக் கொண்டாடும் நாள் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த பிரமாண்டமான நிகழ்வை மறக்கமுடியாததாக மாற்றிய சிக்கிம் முதலமைச்சரையும் அவரது குழுவினரின் ஆற்றலையும் பிரதமர் பாராட்டினார். சிக்கிம் மாநிலத்தின் பொன் விழா கொண்டாட்டங்களுக்கு அவர் மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்தார்.எழுச்சிமிகு வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 23rd, 11:00 am
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக அமைச்சர்கள் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, மணிப்பூர் ஆளுநர் திரு அஜய் பல்லா அவர்களே, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு பேமா காண்டு அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சஹா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமங் அவர்களே, நாகாலாந்து முதலமைச்சர் திரு நெய்பியு ரியோ அவர்களே, மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா அவர்களே, அனைத்து தொழில் துறை தலைவர்களே, முதலீட்டாளர்களே, பெண்களே, தாய்மார்களே வணக்கம்!பிரதமர் திரு. நரேந்திர மோடி, எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார்
May 23rd, 10:30 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று புதுதில்லியின் பாரத் மண்டபத்தில் எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு வருகை தந்த அனைத்து பிரமுகர்களையும் அன்புடன் வரவேற்ற பிரதமர், வடகிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பாரத் மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்ற அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை நினைவு கூர்ந்த அவர், இன்றைய நிகழ்வு வடகிழக்கில் முதலீட்டின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார். இந்த உச்சிமாநாட்டிற்கு தொழில்துறை தலைவர்களின் குறிப்பிடத்தக்க வருகையை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள வாய்ப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார். அனைத்து அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஒரு செழிப்பான முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டினார். வடகிழக்குப் பிராந்தியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், செழிப்புக்குமான தமது உறுதிப்பாட்டை மீண்டும் அவர் எடுத்துரைத்தார்.பவாலியாலி தாம் நிகழ்ச்சியின் போது பிரதமர் தெரிவித்த கருத்துகள்
March 20th, 04:35 pm
மஹந்த் ஸ்ரீ ராம் பாபு அவர்களே, சமூகத்தின் மதிப்பிற்குரியவர்களே மற்றும் இங்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தியுள்ள சகோதர சகோதரிகளே – வணக்கம். ஜெய் தக்கர்!பவலியாலி தாம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
March 20th, 04:30 pm
குஜராத் பர்வாட் சமாஜ் தொடர்பான பவலியாலி தாம் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு மோடி, மஹந்த் ஸ்ரீ ராம் பாபு அவர்களுக்கும், சமூகத் தலைவர்கள் மற்றும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். பர்வாட் சமூகத்தின் பாரம்பரியங்கள் மற்றும் இந்த பாரம்பரியங்களை நிலைநிறுத்துவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த வணக்கத்திற்குரிய துறவிகள் மற்றும் மஹந்த்களுக்கு மரியாதை செலுத்தி அவர் தனது உரையைத் தொடங்கினார். வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பமேளாவுடன் தொடர்புடைய அளவற்ற மகிழ்ச்சி மற்றும் பெருமிதத்தை எடுத்துரைத்த திரு மோடி, இந்தப் புனிதமான நிகழ்வின் போது மஹந்த் ஸ்ரீ ராம் பாபு அவர்களுக்கு மகாமண்டலேஷ்வர் என்ற பட்டம் வழங்கப்பட்ட குறிப்பிடத்தக்க தருணத்தை குறிப்பிட்டு, இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றும், அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார். மஹந்த் ஸ்ரீ ராம் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், அவர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை எடுத்துரைத்தார்.For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast
March 16th, 11:47 pm
PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.பிரதமர் திரு நரேந்திர மோடி லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பாட்காஸ்ட் கலந்துரையாடலில் ஈடுபட்டார்
March 16th, 05:30 pm
லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்திய பாட்காஸ்ட் உரையாடலின் முக்கிய அம்சங்கள்தாய்லாந்தில் நடைபெற்ற சம்வாத் நிகழ்ச்சியின் போது பிரதமர் ஆற்றிய உரை
February 14th, 08:30 am
தாய்லாந்தில் நடைபெறும் இந்த சம்வாத் (விவாத உரையாடல்) பதிப்பில் உங்கள் அனைவருடனும் இணைவது பெரும் கௌரவமாகும். இந்தியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த பல புகழ்பெற்ற நிறுவனங்கள், தனிநபர்கள் இந்த நிகழ்வை சாத்தியமாக்க பாடுபடுகின்றனர். அவர்கள் அனைவரையும், அவர்களின் முயற்சிகளுக்காக நான் பாராட்டுகிறேன், மேலும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.