தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 04th, 05:35 pm

நமது பாரம்பரியத்தில் ஆசிரியர்களுக்கான மரியாதை இயற்கையாகவே உள்ளது. மேலும் அவர்கள் சமூகத்தின் மகத்தான சக்தியாகவும் உள்ளனர். ஆசீர்வதிப்பதற்கு ஆசிரியர்களை எழுந்து நிற்கச் செய்வது தவறாகும். இத்தகைய பாவத்தை செய்வதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் நான் உங்களுடன் நிச்சயமாக உரையாட விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரை உங்கள் அனைவரையும் சந்திப்பது சிறப்பான அனுபவமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கே உரித்தான ஒரு கதையைக் கொண்டு இருப்பீர்கள். ஏனெனில் அப்படி இல்லாமல் இந்த நிலையை நீங்கள் அடைந்திருக்க மாட்டீர்கள். அந்தக் கதைகள் அனைத்தையும் அறிவதற்கு போதிய நேரத்தைக் கண்டறிவது சிரமமாகும். ஆனால், உங்களிடமிருந்து என்னால் கற்றுக் கொள்ள முடிவது குறைவாக இருந்தாலும் அது உண்மையில் ஊக்கமளிப்பதாக இருக்கும். அதற்காக உங்கள் அனைவரையும் நான் மனமார வாழ்த்துகிறேன். இந்த தேசிய விருதைப் பெற்றிருப்பது முடிவல்ல. இந்த விருதுக்குப் பின் அனைவரின் கவனமும் உங்கள் மீது இருக்கும். இதன் பொருள், உங்களைப் பற்றிய கவனம், குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்திருக்கும். இதற்கு முன்பு, உங்களின் செல்வாக்கு ஒரு வரம்புக்கு உட்பட்டு இருந்திருக்கும். ஆனால், இந்த அங்கீகாரத்திற்குப் பின், அது மேலும் அதிகரிக்கும். வளர்ச்சியடையும். இது தொடக்கம் என்று நான் நம்புகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் இருப்பது எதுவாக இருந்தாலும் சாத்தியமான வரை நீங்கள் மாணவர்களுடன் அதனை பகிர வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யும் போது தான், உங்களின் மனதிருப்தி உணர்வு அதிகரிக்கும். இந்தத் திசையில் நீங்கள் தொடர்ந்து பாடுபடவேண்டும். இந்த விருதுக்கான உங்களின் தெரிவு, உங்களின் கடின உழைப்பிற்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கும் சான்றாகும். அதனால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. ஒரு ஆசிரியர் என்பவர் நிகழ்காலத்திற்கு மட்டுமானவர் அல்ல, அவர் நாட்டின் எதிர்கால தலைமுறையையும் கட்டமைக்கிறார், எதிர்காலத்தை மெருகூட்டுகிறார். நாட்டிற்கான சேவையில் மற்ற எதையும் விட, இது சற்றும் குறைவானதல்ல என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற கோடிக்கணக்கான ஆசிரியர்கள் இதே அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் நாட்டுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வருவதற்கான வாய்ப்பை அனைவரும் பெற்றிருக்கவில்லை. ஒரு வேளை பலர், முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லது சிலர் கவனம் செலுத்தாமல் கூட இருந்திருக்கலாம். இத்தகைய திறன்களுடன் ஏராளமானவர்கள் உள்ளனர். அனைவரின் கூட்டு முயற்சிகளால் தான் நாடு தொடர்ந்து வளர்ச்சியடைவதையும், புதிய தலைமுறைகள் தொடர்ந்து வளர்வதையும் உறுதி செய்ய முடிகிறது. நாட்டுக்காக, நாட்டுக்குள் வாழ்கின்ற அனைவரும் இதற்கு பங்களிக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடையே உரையாற்றினார்

September 04th, 05:33 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடையே உரையாற்றினார். ஆசிரியர்களை கௌரவிப்பது வெறும் சடங்கல்ல என்றும் அவர்கள் தங்களின் வாழ்நாளையே அர்பணித்துள்ளதை அங்கீகரிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார். தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அவர்களுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமே இந்த விருதுக்கான தேர்வு என்று அவர் கூறினார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியாளர்களுக்கு பிரதமர் புகழாரம்

September 05th, 09:51 pm

ஆசிரியர் தினமான இன்று, கனவுகளைத் அடையத் தூண்டும், எதிர்காலத்தை வடிவமைக்கும் மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் அனைத்து கல்வியாளர்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பிரதமர் வாழ்த்து

September 05th, 09:58 am

நமது எதிர்காலம் மற்றும் எழுச்சியூட்டும் கனவுகளைக் கட்டமைப்பதில் ஆசிரியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் மகத்தான தாக்கத்திற்காக ஆசிரியர் தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தேசிய ஆசிரியர் விருது 2023 வெற்றியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

September 04th, 10:33 pm

நாட்டின் இளம் மனங்களை வளர்ப்பதில் ஆசிரியர்களின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். நல்ல ஆசிரியர்களின் முக்கியத்துவத்தையும், நாட்டின் தலைவிதியை வடிவமைப்பதில் அவர்கள் வகிக்கக்கூடிய முக்கியப் பங்கையும் அவர் எடுத்துரைத்தார். அடித்தட்டு சாதனையாளர்களின் வெற்றி குறித்து குழந்தைகளுக்குக் கற்பிப்பதன் மூலம் அவர்களுக்கு ஊக்கமளிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் செப்டம்பர் 5-ஆம் தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்

September 04th, 01:29 pm

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் செப்டம்பர் 5-ஆம் தேதி 7, லோக் கல்யாண் மார்கில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடவிருக்கிறார்.

2018-ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

September 03rd, 06:14 pm

2018-ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருது பெற்றவர்களுடன், லோக் கல்யாண்மார்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.09.2019) கலந்துரையாடினார்.