'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற தீர்மானம் நிச்சயமாக நிறைவேறும்: பிரதமர் மோடி மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில்
December 28th, 11:30 am
ஆண்டின் இறுதி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், 2025 ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் உலகளாவிய தளங்களில் இந்தியா தனது முத்திரையைப் பதித்ததாக பிரதமர் மோடி கூறினார். 2026 ஆம் ஆண்டில் புதிய தீர்மானங்களுடன் நாடு முன்னேறத் தயாராக உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல், வினாடி வினா போட்டி, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம் போன்ற இளைஞர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.தேசிய தொழில் பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐ) மேம்பாடு, ஐந்து தேசிய திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்தல் ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
May 07th, 02:07 pm
நாட்டில் தொழிற்கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஒரு முக்கிய படியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தொழில் பயிற்சி நிறுவனங்களின் (ஐடிஐ) மேம்பாடு மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஐந்து தேசிய திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்தல் ஆகியவற்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.