Assam has picked up a new momentum of development: PM Modi at the foundation stone laying of Ammonia-Urea Fertilizer Project in Namrup
December 21st, 04:25 pm
In a major boost to the agricultural sector, PM Modi laid the foundation stone of Ammonia-Urea Fertilizer Project at Namrup in Assam. He highlighted the start of new industries, the creation of modern infrastructure, semiconductor manufacturing, new opportunities in agriculture, the advancement of tea gardens and their workers as well as the growing potential of tourism in Assam. The PM reiterated his commitment to preserving Assam’s identity and culture.அசாம் மாநிலம் நம்ரூப்பில் உரத் தொழிற்சாலைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
December 21st, 12:00 pm
அசாம் மாநிலம் திப்ரூகரில் உள்ள நம்ரூப்பில், அசாம் பள்ளத்தாக்கு உர- வேதியியல் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் அமோனியா-யூரியா உரத் தொழிற்சாலைத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.12.2025) அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இது சாவோலுங் சுகபா, மகாவீர் லச்சித் போர்புகான் போன்ற சிறந்த வீரர்களின் பூமி என்று குறிப்பிட்டார். பீம்பர் டியூரி, ஷாஹீத் குஷால் குன்வர், மோரன் மன்னர் போடோசா, மாலதி மேம், இந்திரா மிரி, ஸ்வர்கதேவ் சர்பானந்த சிங் மற்றும் வீரம் மிக்க சதி சாதனி ஆகியோரின் பங்களிப்புகளையும் அவர் எடுத்துரைத்தார். அசாம் புனித மண்ணுக்கு தலைவணங்குவதாக பிரதமர் கூறினார்.Our goal must be to make natural farming a fully science-backed movement: PM Modi in Coimbatore, Tamil Nadu
November 19th, 07:01 pm
During the inauguration of the South India Natural Farming Summit 2025 in Coimbatore, Tamil Nadu, PM Modi hailed the city as a power centre of South India’s entrepreneurial strength. He said India is steadily emerging as a global hub for natural farming. Highlighting that farmers have received assistance of over ₹10 lakh crore this year through the Kisan Credit Card (KCC) scheme alone, the PM urged farmers to adopt “one acre, one season” of natural farming.கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றினார்
November 19th, 02:30 pm
கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.11.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கோயம்புத்தூரை கலாச்சாரம், கனிவு மற்றும் படைப்பாற்றலின் நகரம் என்று குறிப்பிட்டு, தென்னிந்தியாவின் தொழில்முனைவோரின் ஆற்றல் சக்தியாக விளங்குகிறது என்று கூறினார். இந்த நகரத்தின் ஜவுளித்துறை, தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். கோயம்புத்தூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது குடியரசு துணைத்தலைவராகப் பொறுப்பு வகிப்பது, இந்த நகருக்குக் கூடுதல் சிறப்பைத் தருவதாக அவர் கூறினார்.புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அக்டோபர் 11 அன்று சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
October 10th, 06:10 pm
புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அக்டோபர் 11 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுடன் கலந்துரையாடும் பிரதமர் பின்னர் பொதுநிகழ்ச்சியில் பங்கேற்று அங்கு திரண்டிருப்போரிடையே உரையாற்றுவார்.இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் துவக்கம்
November 25th, 08:39 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் ஒரு முழுமையான மத்திய நிதியுதவித் திட்டமாக இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தை தொடங்க ஒப்புதல் அளித்தது.