பொது விநியோக முறையில் தன்னியக்கத்துடன் கூடிய ரேஷன் போக்குவரத்து மற்றும் வருவாய் கையாளுதலுக்கான உதவித் திட்டத்தின் கீழ், இரண்டு அம்சங்களை ஒருங்கிணைத்துத் தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
May 27th, 02:53 pm
பொது விநியோக அமைப்பில் தன்னியக்கத்துடன் கூடிய ரேஷன் போக்குவரத்து மற்றும் வருமானத்தைக் கையாள்வதற்கான உதவி (சர்தாக்-பிடிஎஸ்) திட்டத்தை ஒருங்கிணைந்தத் திட்டமாகத் தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு 16வது நிதி ஆணையத்தின் சுழற்சி காலகட்டத்தில், மத்திய அரசின் பங்காக ரூ. 25,530 கோடி நிதி ஒதுக்கப்படும்.2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவுவிலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
June 07th, 05:35 pm
2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு (அக்டோபர் 2022-டிசம்பர்2022) மத்திய அரசு நீடித்துள்ளது
September 28th, 04:06 pm
2021-ல் பிரதமரால் அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டமான பிரதமரின் ஏழைகள் நல உணவுத்திட்டத்தின் கீழ் கூடுதல் உணவுப் பாதுகாப்பு வெற்றிகரமாக அமலாவதை அடுத்து இந்த திட்டத்தின் 7-வது கட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு அதாவது அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரை நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அரசின் பல்வேறு திட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்க அமைச்சரவை ஒப்புதல்
April 08th, 03:58 pm
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் மற்றும் இந்திய அரசின் இதர நலத்திட்டங்களின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2024-க்குள் படிப்படியாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.ஆகஸ்ட் 3 ஆம் தேதி குஜராத்தில் பிரமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் உரையாடல்
August 01st, 09:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத்தில் பிரமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளுடன் 2021 ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று பிற்பகல் 12:30 மணிக்கு காணொலி மூலம் உரையாடுகிறார். இத்திட்டம் குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக. பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய நிகழ்வு இந்த மாநிலத்தில் துவக்கப்படுகிறது.