தற்சார்பு பாரதம்: வலுவான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளம்
August 15th, 10:20 am
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, விண்வெளி, உற்பத்தி ஆகிய துறைகளில் இந்தியாவின் முன்னேற்றங்களை மேற்கோள் காட்டி, வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான முக்கிய அடித்தளங்களில் ஒன்றாக தற்சார்பு பாரதத்தை சுட்டிக் காட்டினார். ஆபரேஷன் சிந்தூரை எடுத்துரைத்த அவர், இதில் உள்நாட்டு திறன்கள் மூலம் அச்சுறுத்தல்களை தீர்க்கமாக எதிர்கொள்ளப்பட்டதாக கூறினார். தன்னம்பிக்கை, தேசிய வலிமை, கண்ணியம் ஆகியவை, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.