'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியின் மூலம், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் இணையுமாறு குடிமக்களுக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
August 30th, 11:30 am
இந்த மாத 'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், தேசிய கைத்தறி தினம், சுதந்திர தினம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற ஆகஸ்ட் மாதத்தின் முக்கிய நிகழ்வுகளையும், ஜன்மாஷ்டமி மற்றும் விஸ்வகர்மா பூஜை போன்ற வரவிருக்கும் பண்டிகைகளையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்; இதன் மூலம் தேசபக்தி மற்றும் 'உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை' (Vocal for Local) அளிப்பதற்கான உறுதிப்பாடு வலுப்படுத்தப்பட்டது. மேலும், காடு பாதுகாப்பு, இந்திய வரலாறு, தூய்மை, பெண்கள் அதிகாரம் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைப்புகள் குறித்தும் அவர் பேசினார்.கேலோ இந்தியா கலந்துரையாடல் - இளைஞர்களிடையே நாளை உரையாற்றுகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி
August 26th, 10:22 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 ஆகஸ்ட் 27) காலை 11 மணிக்கு, காணொலிக் காட்சி மூலம் 'கேலோ இந்தியா கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். இந்தியாவின் விளையாட்டுப் பயணத்தில் இளைஞர்களை ஈடுபடுத்துவதையும், அவர்கள் தங்களது எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளவதையும், வளரச்சியடைந்த இந்தியாவுக்கான யோசனைகளை அவர்கள் வழங்குவதையும் இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.நாட்டின் 80-வது சுதந்திர தின உரையில், வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய இந்தியாவின் அடுத்தகட்ட எழுச்சிக்கான வலுவான அறைகூவலை பிரதமர் விடுத்தார்
August 15th, 12:51 pm
செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ஆற்றிய நாட்டின் 80-வது சுதந்திர தின உரையில், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல முக்கிய அறைகூவல்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்தார்.Through the efforts and hard work of 140 crore citizens, we must achieve the goal of Viksit Bharat: PM Modi on 80th Independence Day at Red Fort
August 15th, 07:00 am
PM Modi, in his address to the nation on the 80th Independence Day from the Red Fort, spoke about the dream of building a Viksit Bharat by 2047, powered by the strength and resolve of 140 crore Indians. He highlighted key initiatives such as the SHANTI Act, Railway electrification, India’s trade deals, the end of Naxalism and more. He called upon the nation to embrace 'Shakti Ki Saptadhara'.நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்தி்லிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
August 15th, 06:50 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.08.2026) நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொருவரின் இதயத் துடிப்பும், இல்லமும் மூவர்ணக் கொடியின் உணர்வாலும் புதிய தீர்மானங்களாலும் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
August 15th, 06:45 am
செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் உறுதியுடன் 2047-க்குள் 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) எனும் இலக்கை அடைவது குறித்த தனது கனவை எடுத்துரைத்தார். 'சாந்தி' (SHANTI) சட்டம், ரயில்வே மின்மயமாக்கல், இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள், நக்சலிசத்தின் முடிவு உள்ளிட்ட முக்கிய முன்னெடுப்புகளை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 'சக்தி கி சப்ததாரா' (சக்தியின் ஏழு நீரோடைகள்) எனும் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான உறுதிமொழி இயக்கம் ஏற்பாடு செய்திருந்த போதை இல்லாத இளைய சமுதாய திட்டத் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 02nd, 11:25 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.08.2026) வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற நாடு தழுவிய மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், 28,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து இணைந்திருந்த ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்குப் பாராட்டுத் தெரிவித்தார். இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்தக் கூட்டத்தை ஒரு ஆழமான தேசிய உறுதிப்பாடாகக் குறிப்பிட்டார். இன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் ஒரு மகத்தான, முக்கியமான தீர்மானத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
August 02nd, 11:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (02.08.2026) வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற நாடு தழுவிய மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், 28,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து இணைந்திருந்த ஒரு கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்குப் பாராட்டுத் தெரிவித்தார். இந்தத் தருணத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்தக் கூட்டத்தை ஒரு ஆழமான தேசிய உறுதிப்பாடாகக் குறிப்பிட்டார். இன்று, நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் ஒரு மகத்தான, முக்கியமான தீர்மானத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தை நாளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்
August 01st, 04:04 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, 'வளர்சசியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தை நாளை (2026 ஆகஸ்ட் 2) காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். போதைப்பொருள் பழக்கத்திலிருந்து இளைஞர்களை விடுவிப்பதையும், நேர்மறையான சமூக மாற்றத்திற்கான தூதுவர்களாக அவர்களை ஊக்குவிப்பதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.