'2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு' என்ற இலக்கை வலியுறுத்தி, நிதிப் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதியை ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதி செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்
September 04th, 08:55 pm
அனைவருக்கும் நிதிப் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதி கிடைப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டில் ஒரு பெரிய முன்னேற்றத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி (#NextGenGST) சீர்திருத்தங்களின் சமீபத்திய கட்டம், ஆயுள் மற்றும் சுகாதார காப்பீடுகளுக்கு குறிப்பிடத்தக்க வரிச்சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் அவை ஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவானதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மாறியுள்ளன.