டாமனில் நமோ மருத்துவமனையைப் பிரதமர் திறந்து வைத்தார்
June 05th, 10:25 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி டாமனில் நமோ மருத்துவமனையைத் திறந்து வைத்தார். மக்களுக்குத் தரமான சிகிச்சையை வழங்குவதற்கான தற்போதைய முயற்சிகளுக்கு இணங்க இது அமைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த மருத்துவமனை நவீன வசதிகளைக் கொண்டுள்ளதுடன், இந்த யூனியன் பிரதேசம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இது பெரும் பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் குஜராத்திலும் மார்ச் 7 - 8 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
March 07th, 07:10 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கும் குஜராத்துக்கும் இன்றும் நாளையும் (மார்ச் 7 - 8 தேதிகளில்) பயணம் மேற்கொள்கிறார். இன்று சில்வாசாவுக்கு செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் நமோ மருத்துவமனையைத் (கட்டம் I) திறந்து வைப்பார். பிற்பகல் 2:45 மணியளவில், சில்வாசாவில் யூனியன் பிரதேசத்திற்கான ரூ.2580 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அதன் பின், அவர் சூரத் செல்கிறார். மாலை 5 மணியளவில், சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தைத் தொடங்கிவைப்பார். மார்ச் 8 ஆம் தேதி, பிரதமர் நவ்சாரிக்குச் செல்கிறார், காலை 11:30 மணியளவில், லட்சாதிபதி சகோதரிகளுடன் உரையாடுகிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பொது நிகழ்வு நடைபெறும்.