The Arya Samaj has fearlessly upheld and promoted the essence of Indianness: PM Modi at International Arya Mahasammelan 2025
October 31st, 07:00 pm
PM Modi attended and addressed the International Arya Mahasammelan 2025 in New Delhi. Speaking on the occasion, the PM expressed his deep reverence for Swami Dayanand Ji’s ideals. He emphasized that Swami Dayanand Ji rejected caste-based discrimination and untouchability. The PM highlighted that the occasion reflects the great legacy of social reform consistently advanced by the Arya Samaj and noted its historical association with the Swadeshi movement.Since 2014, the nation has once again witnessed Sardar Patel’s spirit of iron resolve: PM Modi at Rashtriya Ekta Diwas in Kevadia
October 31st, 09:00 am
While addressing the Rashtriya Ekta Diwas programme, PM Modi extended his heartfelt greetings and best wishes to all citizens on the occasion of Sardar Patel’s birth anniversary. He emphasized that after 2014, the nation once again witnessed a steely resolve inspired by Sardar Patel. He warned that the unity and internal security of the nation face a grave threat from infiltrators and outlined four foundational pillars of India’s unity, strengthening the spirit of ‘Ek Bharat, Shreshtha Bharat’.குஜராத் மாநிலம் கெவாடியாவில் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் இது இரும்பு மனிதர் சர்தார் படேலின் இந்தியா, இது தனது பாதுகாப்பில் அல்லது சுயமரியாதையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது: பிரதமர்
October 31st, 08:44 am
குஜராத் மாநிலம் கெவாடியாவில் இன்று தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் சர்தார் படேலின் 150-வது பிறந்த தினம் வரலாற்று சிறப்புமிக்கது என்றார். நாடு முழுவதும் நடைபெற்ற ஒற்றுமைக்கான ஓட்டம் பற்றி எடுத்துரைத்த அவர், இதில் கோடிக்கணக்கான இந்தியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதாகவும் இதன் மூலம் புதிய இந்தியாவின் தீர்மானம் உறுதியாக உணரப்பட்டது என்றும் கூறினார். சர்தார் படேலின் 150-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் நினைவு நாணயம் ஒன்றும் சிறப்பு அஞ்சல்தலை ஒன்றும் வெளியிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். சர்தார் படேலின் பிறந்தநாள் மற்றும் தேசிய ஒற்றுமை தின நிகழ்வையொட்டி 140 கோடி மக்களுக்கும் பிரதமர் தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் வளர்ச்சிப்பணிகள் தொடக்க நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 26th, 05:00 pm
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகா திரு மனோகர் லால் அவர்களே, அமைச்சரவையின் இதர உறுப்பினர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே, இதர மதிப்பிற்குரிய பிரமுகர்களே, கட்ச் பகுதியின் எனதருமை சகோதர, சகோதரிகளே!குஜராத்தின் புஜ்ஜில் சுமார் ரூ.53,400 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
May 26th, 04:45 pm
குஜராத்தின் புஜ்ஜில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி சுமார் ரூ.53,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், கட்ச் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். புரட்சியாளர்கள் மற்றும் தியாகிகளுக்கு, குறிப்பாக தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் திரு. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்கு மரியாதை செலுத்தினார். கட்ச்சின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு அவர்களின் உறுதிப்பாடு மற்றும் பங்களிப்புகளை பிரதமர் விவரித்தார்.பீகார் மாநிலம் மதுபானியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 24th, 12:00 pm
நான் எனது உரையைத் தொடங்குவதற்கு முன்பு, உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன், நீங்கள் எங்கிருந்தாலும், எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை, உங்கள் இடத்தில் அமர்ந்து, 22 ஆம் தேதி நாம் இழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம், சில நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தி, அந்தந்த தெய்வங்களை நினைவுகூர்வோம். அவர்கள் அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்துவோம், அதன் பிறகு நான் இன்று எனது உரையைத் தொடங்குவேன்.தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு பீகார் மாநிலம் மதுபானியில் ரூ.13,480 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
April 24th, 11:50 am
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு பீகார் மாநிலம் மதுபானியில் இன்று ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஏப்ரல் 22-ம் தேதி அன்று பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் மௌன அஞ்சலி செலுத்தி, பிரார்த்தனை செய்யுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு ஒட்டுமொத்த தேசமும் மிதிலா மற்றும் பீகாருடன் இணைக்கப்பட்டுள்ளது என்றார். பீகார் மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மின்சாரம், ரயில்வே, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள் இம்மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மாபெரும் கவிஞராகவும் தேசிய அடையாளமாகவும் திகழ்ந்த ராம்தாரி சிங் தினகர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.ஏப்ரல் 24-ம் தேதி பிரதமர் பீகார் செல்கிறார்
April 23rd, 06:30 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஏப்ரல் 24-ம் தேதி பீகாருக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:45 மணியளவில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 06th, 02:00 pm
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி அவர்களே, எனது மத்திய அமைச்சரவை சகாக்கள் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, டாக்டர் எல் முருகன் அவர்களே, தமிழ்நாடு அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!ராமேஸ்வரத்தில் ₹8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
April 06th, 01:30 pm
தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் ₹ 8,300 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக, இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்த அவர், சாலை பாலத்திலிருந்து ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து பாலத்தின் செயல்பாட்டைப் பார்வையிட்டார். முன்னதாக, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் சுவாமி தரிசனம் செய்து பூஜை வழிபாட்டை மேற்கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இன்று, ஸ்ரீ ராம நவமியின் புனித தருணமாக அமைந்துள்ளது என்று கூறினார். அயோத்தியில் உள்ள அற்புதமான ராமர் கோவிலில், இன்று, சூரியனின் தெய்வீக கதிர்கள் குழந்தை ராமரை ஒரு பெரிய திலகத்துடன் அலங்கரித்தன என்று அவர் கூறினார். பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையும், அவரது ஆட்சியிலிருந்து நல்லாட்சியின் உத்வேகமும் தேசத்தைக் கட்டமைப்பதற்கான குறிப்பிடத்தக்க அடித்தளமாக செயல்படுகின்றன என்று அவர் கூறினார். தமிழ்நாட்டின் சங்க கால இலக்கியங்களிலும் பகவான் ஸ்ரீ ராமர் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், புனித பூமியான ராமேஸ்வரத்திலிருந்து ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமரின் பதிலின் ஆங்கில மொழிபெயர்ப்பு
February 04th, 07:00 pm
மாண்புமிகு குடியரசு தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். நேற்றும் இன்றும் இரவு வெகுநேரம் வரை, அனைத்து மாண்புமிகு எம்.பி.க்களும் இந்த நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை தங்கள் கருத்துகளால் வளப்படுத்தினர். பல மாண்புமிகு அனுபவம் வாய்ந்த எம்.பி.க்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர், மேலும், ஜனநாயகத்தின் பாரம்பரியத்தைப் போலவே, தேவை இருந்த இடத்தில், பாராட்டு இருந்தது, ஒரு பிரச்சனை இருந்த இடத்தில், சில எதிர்மறை விஷயங்கள் இருந்தன, ஆனால் இது மிகவும் இயல்பானது! திரு. சபாநாயகர் அவர்களே, நாட்டு மக்கள் 14வது முறையாக இந்த இடத்தில் அமர்ந்து குடியரசு தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிக்க எனக்கு வாய்ப்பளித்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம், எனவே, இன்று நான் மக்களுக்கு மிகுந்த மரியாதையுடன் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவையில் விவாதத்தில் பங்கேற்று விவாதத்தை வளப்படுத்திய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதில்
February 04th, 06:55 pm
மக்களவையில் இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்தார். அவையில் உரையாற்றிய பிரதமர், நேற்றும் இன்றும் விவாதங்களில் பங்கேற்ற அனைத்து மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புகளையும் பாராட்டினார். ஜனநாயகத்தின் பாரம்பரியம் என்பது தேவையான இடங்களில் பாராட்டு மற்றும் கூடவே சில எதிர்மறையான கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. இது இயற்கையானது என்று பிரதமர் குறிப்பிட்டார். 14 ஆவது தடவையாக குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்க மக்கள் வாய்ப்பு வழங்கியதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், குடிமக்களுக்கு தனது மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவித்ததுடன், கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவரையும் தங்கள் எண்ணங்களால் விவாதங்களைச் செழுமைப்படுத்தியதற்காக பாராட்டினார்.சாஹிபாபாத் ஆர்.ஆர்.டி.எஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்.ஆர்.டி.எஸ் நிலையத்துக்கு நமோ பாரத் ரயிலில் பயணம் செய்த போது மாணவர்கள் மற்றும் ரயில் லோகோ பைலட்டுகளுடனான பிரதமரின் உரையாடலின் தமிழாக்கம்
January 05th, 08:50 pm
ஆமாம் ஐயா. இன்று, உங்களால் ஒவ்வொரு வீட்டிலும் யு.பி.ஐ பயன்படுத்தப்படுகிறது.நமோ பாரத் ரயிலில் மாணவர்கள், ரயில் ஓட்டுநர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்
January 05th, 08:48 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சாஹிபாபாத் துரித ரயில் போக்குவரத்து நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் துரித ரயில் போக்குவரத்து நிலையம் வரை நமோ பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது இளம் நண்பர்களுடன் அவர் அன்புடன் உரையாடினார். அவர்கள் பிரதமருக்கு ஓவியங்களையும், கலைப் படைப்புகளையும் பரிசளித்தனர்.