Together, with everyone’s efforts, we will build a Viksit Bharat and a Viksit Uttar Pradesh: PM Modi in Greater Noida

September 25th, 10:22 am

In his address while inaugurating the Uttar Pradesh International Trade Show 2025, PM Modi emphasized that Antyodaya means ensuring development reaches even the poorest. Underscoring the principle of “Platforms for All, Progress for All”, the PM remarked that the impact of platforms is visible across India. He noted that UP ranks first in heritage tourism, highlighting that investing in India and particularly in UP is a win-win situation.

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார்

September 25th, 10:00 am

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்தக் கண்காட்சியில் பங்கேற்க வந்துள்ள அனைத்து வியாபாரிகள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள், இளம் தலைமுறையினர் ஆகியோரை வரவேற்பதாக பிரதமர் கூறினார். இந்தக் கண்காட்சியில் 2,200-க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் தங்களது தயாரிப்புகளையும், சேவைகளையும் காட்சிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். இந்தக் கண்காட்சியில் ரஷ்யா பங்கேற்றுள்ளது இரு நாடுகளிடையேயான வலுவான நட்புறவை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள அம்மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அரசு அதிகாரிகள் மற்றும் இதர தரப்பினருக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழிகாட்டியாக திகழ்ந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த ஆண்டையொட்டி இந்தக் கண்காட்சி அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரதமரின் அதிகாரப்பூர்வப் பரிசுகளின் ஆன்லைன் ஏலத்தில் பங்கேற்கக் குடிமக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு

September 24th, 01:09 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, பல்வேறு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் சந்திப்புகளிலும் தனக்குக் கிடைத்த பரிசுகளின் தொகுப்பு அடங்கிய ஆன்லைன் ஏலம் தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் ஹர்சிலில் குளிர்கால சுற்றுலா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

March 06th, 02:07 pm

இங்குள்ள ஆற்றல் மிக்க முதலமைச்சர், எனது இளைய சகோதரர் புஷ்கர் சிங் தாமி அவர்களே, மத்திய அமைச்சர் திரு. அஜய் தம்தா அவர்களே, மாநில அமைச்சர் சத்பால் மகராஜ் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாவும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவருமான மகேந்திர பட் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகா மாலா ராஜ்ய லட்சுமி அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் சவுகான் அவர்களே, அனைத்து பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே.

உத்தராகண்ட் மாநிலம் ஹர்சிலில் நடைபெற்ற குளிர்காலச் சுற்றுலா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்

March 06th, 11:17 am

உத்தராகண்ட் மாநிலம் ஹர்சிலில் நடைபெற்ற குளிர்கால சுற்றுலா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, மலையேற்றம் மற்றும் இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலில் அவர் பூஜை நடத்தி, தரிசனத்தையும் மேற்கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மனா கிராமத்தில் நடந்த துயர சம்பவத்திற்கு தமது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதோடு, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது இரங்கல்களையும் தெரிவித்தார். இந்த நெருக்கடியான நேரத்தில் தேசத்தின் மக்கள் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள். இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மகத்தான பலத்தை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

பீகார் மாநிலம் பாகல்பூரில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 24th, 02:35 pm

மேஹி மகரிஷி தவம் செய்த இடமாகவும், உலகப் புகழ்பெற்ற விக்ரமசீலா மகாவிகார் அமைந்துள்ள வசுபூஜ்ய பூமியிலிருந்தும், பாபா புத்தநாதரின் புனித பூமியிலிருந்தும் வந்துள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள்!

பிரதமர் திரு நரேந்திர மோடி பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் 19-வது தவணையை விடுவித்து, பீகார் மாநிலம் பாகல்பூரில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

February 24th, 02:30 pm

இன்று இந்த நிகழ்ச்சியில் பீகார் மண்ணில் 10,000-வது உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில், நாடு முழுவதிலும் உள்ள உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

பிரயாக்ராஜில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

December 13th, 02:10 pm

உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, பிரஜேஷ் பதக் அவர்களே, உத்தரப்பிரதேசத்தின் மதிப்பிற்குரிய அமைச்சர்களே, மதிப்பிற்குரிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, பிரயாக்ராஜ் மேயர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவரே, இதர சிறப்பு விருந்தினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

December 13th, 02:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சங்கமத்தின் புனித பூமியான பிரயாக்ராஜுக்கு பக்தியுடன் தலைவணங்கி, மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட துறவிகள், சாதுக்களுக்கு மரியாதை செலுத்தினார். தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் மகா கும்பமேளாவை மாபெரும் வெற்றியாக்கிய ஊழியர்கள், தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார். மகா கும்பமேளாவின் பிரம்மாண்டம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், 45 நாட்கள் நீடிக்கும் மகா யாகத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்கும் உலகின் மிகப்பெரிய கூட்டங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். இந்த நிகழ்வுக்காக ஒரு புதிய நகரம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். பிரயாக்ராஜ் மண்ணில் புதிய வரலாறு எழுதப்படுகிறது என்று பிரதமர் பெருமிதம் கொண்டார். அடுத்த ஆண்டு மகா கும்பமேளா அமைப்பது நாட்டின் ஆன்மீக மற்றும் கலாச்சார அடையாளத்தை புதிய சிகரங்களுக்கு எடுத்துச் செல்லும் என்று கூறிய பிரதமர், ஒற்றுமையின் இத்தகைய 'மகாயாகம்' உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் என்று கூறினார். மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்த மக்களுக்கு அவர் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 29th, 01:28 pm

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மத்திய அமைச்சரவை நண்பர்கள் திரு ஜகத் பிரகாஷ் நத்தா, திரு மன்சுக் மாண்டவியா, திரு பிரதாப்ராவ் ஜாதவ், திருமதி அனுப்ரியா படேல் மற்றும் திருமதி ஷோபா கரந்த்லாஜே அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம்வீர் சிங் பிதுரி அவர்களே, மாநில ஆளுநர்களே, முதலமைச்சர்களே, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மருத்துவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆயுஷ் மற்றும் சுகாதார வல்லுநர்களே, சுகாதார அமைப்பில் ஈடுபட்டுள்ள சகோதர சகோதரிகளே!

சுகாதாரத் துறை தொடர்பான ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

October 29th, 01:00 pm

தன்வந்தரி ஜெயந்தி, 9-வது ஆயுர்வேத தினம் ஆகியவற்றை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (29.10.2024) புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) சுமார் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதாரத் துறை தொடர்பான பல திட்டங்களை தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தூய்மையே சேவை 2024 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 02nd, 10:15 am

இன்று மகாத்மா காந்தி , லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள். அன்னை பாரதத்தின் இந்த மகத்தான புதல்வர்களுக்கு நான் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன். காந்திஜி மற்றும் நாட்டின் பெரிய மனிதர்கள் பாரதம் குறித்து கண்ட கனவை நிறைவேற்ற, ஒன்றிணைந்து பணியாற்ற இந்த நாள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

தூய்மை இந்தியா தினம் 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்

October 02nd, 10:10 am

தூய்மைக்கான மிக முக்கிய மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2 அன்று) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அம்ருத் மற்றும் அம்ருத் 2.0, தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம், கோபர்தன் திட்டம் உள்ளிட்ட ரூ.9,600 கோடி மதிப்பிலான பல்வேறு துப்புரவு மற்றும் தூய்மைத் திட்டங்களைத் திரு மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தூய்மையே சேவை இயக்கம்-2024-ன் கருப்பொருள் 'தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம்.'

பிரதமர் திரு நரேந்திர மோடி 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' முன்முயற்சியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

September 06th, 01:00 pm

குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்தத் திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் திரு நரேந்திர மோடி 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' முன்முயற்சியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

September 06th, 12:30 pm

குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்தத் திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 02nd, 03:00 pm

உலகப் புகழ்பெற்ற சூரியக் கோயில், உங்கேஸ்வரி மாதா மற்றும் தேவ் குண்ட் ஆகியவற்றின் புனித பூமியை நான் வணங்குகிறேன்! அனைவருக்கும் என் வாழ்த்துகள்! சூரிய பகவானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் ரூ. 21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

March 02nd, 02:30 pm

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் இன்று ரூ. 21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களில் சாலை, ரயில்வே, தூய்மை கங்கை உள்ளிட்ட திட்டப் பணிகள் அடங்கும்.

நினைவுப் பரிசுகளை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க மக்களை பிரதமர் ஊக்குவிக்கிறார்

October 27th, 01:54 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, தமக்குக் கிடைத்த நினைவுப் பரிசுகளை ஏலம் விடும் நடைமுறையின் போது, மக்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் வருமானம் தூய்மை கங்கை இயக்கத்திற்கு வழங்கப்படுவதாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நினைவுப்பரிசுகளைக் காட்சிப்படுத்த தேசிய நவீன கலைக்கூடத்தில் கண்காட்சி

October 02nd, 04:32 pm

தமக்கு வழங்கப்பட்ட பல்வேறு வகையான அன்பளிப்புகள் மற்றும் நினைவுப் பரிசுகளுடன் புதுதில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி குறித்துப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பதிவிட்டுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்ற லோகமான்ய திலகர் விருது வழங்கும் விழா 2023-ல் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

August 01st, 12:00 pm

இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே உற்சாகமாகவும், உணர்ச்சிகரமாகவும் இருக்கிறேன். இன்று, நமது முன்மாதிரியும், இந்தியாவின் பெருமையுமான பாலகங்காதர திலகரின் நினைவு தினம் ஆகும். மேலும், இன்று அன்னா பாவ் சாத்தே அவர்களின் பிறந்த நாளாகும். லோகமான்ய திலகர் அவர்கள் நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றின் நெற்றித் திலகம் போன்றவர். அதேசமயம், சமூக சீர்திருத்தங்களுக்கு அன்னா பாவ் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது, அசாதாரணமானது. இந்த இருபெரும் ஆளுமைகளின் பாதங்களில் மரியாதையுடன் தலைவணங்குகிறேன்.