நாகாலாந்து மாநிலம் உருவான தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
December 01st, 06:09 pm
நாகாலாந்து மாநிலம் உதயமான தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், புகழ் பெற்ற நாகா மக்களின் நாகரீகம், சேவை மனப்பான்மை, துணிச்சல் மற்றும் கனிவு போன்ற பண்புகள் பெரிதும் ஈர்க்கும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பல்வேறு துறைகளில் அம்மாநில மக்கள் தனித்துவ திறமை கொண்டவர்களாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இனி வரும் ஆண்டுகள் அம்மாநில மக்களின் வாழ்வில் வளர்ச்சி மற்றும் வளமையைக் கொண்டு வரட்டும் என்று பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
December 05th, 11:10 am
ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கழிவு மேலாண்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் திருவிழா கவனம் செலுத்துவது குறித்து அவர் மகிழ்ச்சியையும், தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விழாவிற்கு வருகை தந்தபோது ஏற்பட்ட இனிய நினைவுகளை நினைவுகூர்ந்த திரு மோடி, மற்றவர்களும் இங்கு வந்து நாகா கலாச்சாரத்தின் துடிப்பை அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.நாகாலாந்து மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
December 01st, 12:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாகாலாந்து மக்களுக்கு அவர்களின் மாநில தினத்தையொட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாகா கலாச்சாரம் அதன் கடமை மற்றும் இரக்க உணர்வுக்கு பெயர் பெற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.