Prime Minister reflects on the success of PM Mudra Yojana on its 11th anniversary
April 08th, 01:18 pm
On the 11th anniversary of PM Mudra Yojana, PM Modi reflected on the success of the scheme and shared glimpses of how it has empowered millions with the confidence to dream and the means to fulfill them. He pointed out that it has positively impacted Yuva Shakti and Nari Shakti, ensuring every dream is given the support to grow.பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் மாற்றம் தரும் 11 ஆண்டுகள் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
August 28th, 01:20 pm
இந்தியா முழுவதும் நிதி உள்ளடக்க சூழலை மாற்றியமைத்த மாற்றம் தரும் முன்முயற்சியான பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் 11-வது ஆண்டு இது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் ஜன் தன் திட்டம் கண்ணியத்தை அதிகரித்துள்ளது என்பதை உறுதிபட தெரிவித்த திரு மோடி, கடைகோடி மக்களுக்கும் நிதி உள்ளடக்கத்தை தந்து தங்களின் வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் அதிகாரத்தையும் வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.விண்வெளியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது; சீர்திருத்தங்கள், இளைஞர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஊக்குவிக்கின்றன- பிரதமர் பெருமிதம்
August 23rd, 01:03 pm
140 கோடி இந்தியர்களின் திறமை மற்றும் செயல்திறன்களால் இந்தியா விண்வெளி துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.2047ல் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை தன்னம்பிக்கையின் மூலம் செல்கிறது: மன் கீ பாத்தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி
July 27th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை, தேசத்தின் வெற்றிகள், நாட்டுமக்களின் சாதனைகள் பற்றி பேச இருக்கிறோம். கடந்த சில வாரங்களில், அது விளையாட்டுக்களாகட்டும், அறிவியலாகட்டும், கலாச்சாரமாகட்டும்…… நடைபெற்றிருக்கின்ற பல விஷயங்கள் பாரதநாட்டவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தற்போது தான் சுபான்ஷு சுக்லா அவர்கள் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து திரும்பியிருப்பது குறித்து நாடெங்கும் பேசப்பட்டு வருகிறது. சுபான்ஷு அவர்கள் தரையைத் தொட்ட போது, மக்கள் உற்சாகமடைந்தார்கள், அனைவர் இதயங்களிலும் சந்தோஷத்தின் திவலைகள் தாண்டவமாடின. தேசமே பெருமிதத்தில் பொங்கியது. ஆகஸ்ட் மாதம் 2023ஆம் தேதியன்று சந்திரயான் – 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய வேளையில் தேசத்தில் ஒரு புதிய, அலாதியான சூழல் நிலவியது எனக்கு நினைவிருக்கிறது. அறிவியல் பற்றியும், விண்வெளி குறித்தும் சிறார்கள் மனதிலே புதியதொரு ஆர்வம் துளிர்த்தது. நாங்களும் விண்வெளிக்குப் பயணிப்போம், நாங்களும் நிலவில் கால் பதிப்போம்-விண்வெளி விஞ்ஞானியாக ஆவோம் என்று இப்போதெல்லாம் சின்னச்சின்ன பிள்ளைகளும் கூறி வருகிறார்கள்.கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வளர்ச்சியையும் அதன் மூலம் தற்சார்பு மற்றும் நவீனமயமாக்கல் வலுப்படுத்தப்பட்டுள்ளதையும் பிரதமர் பாராட்டியுள்ளார்
June 10th, 09:47 am
கடந்த 11 ஆண்டுகளில், இந்தியா தனது பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது என்றும், நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தன்னிறைவு ஆகியவற்றில் உரிய கவனம் செலுத்துவதன் மூலம் இது ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறினார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 120-வது அத்தியாயத்தில், 30.03.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 30th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மிகவும் புனிதமான தினம், இன்றைய தினத்தன்று மனதின் குரலை ஒலிக்கச் செய்யும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. இன்று சைத்ர மாத சுக்ல பக்ஷத்தின் பிரதிபதா திதியாகும். இன்றிலிருந்து சைத்ர நவராத்திரி தொடங்குகிறது. இன்றிலிருந்து பாரதிய நவவருஷமும் தொடங்குகிறது. இந்த முறை விக்ரம் சம்வந்த் 2082 தொடங்குகிறது. பிஹாரிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும், குஜராத்திலிருந்தும் என, இந்த வேளையிலே என் முன்பாக உங்களுடைய ஏராளமான கடிதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிலே பல கடிதங்கள் சுவாரசியமான முறையிலே மக்களுக்குத் தங்களுடைய மனதின் குரலைப் பதிவு செய்கின்றன. பல கடிதங்களில் நல்வாழ்த்துக்களும் உண்டு, பாராட்டுச் செய்திகளும் உண்டு. ஆனால் இன்று சில செய்திகளை உங்களுக்கு ஒலிக்கச் செய்யவேண்டும் என்று என் மனம் ஆசைப்படுகிறது.நமது விவசாயிகள் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர்
February 24th, 10:01 am
இந்தியாவின் விவசாயிகள் குறித்து அரசு பெருமிதம் கொள்வதாகவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.புலம்பெயர்ந்த இந்தியர்கள் வெவ்வேறு நாடுகளில் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர்: பிரதமர் மோடி 'மன் கீ பாத்'தின் போது (மனதின் குரல்)
November 24th, 11:30 am
'மன் கீ பாத்'-ன் (மனதின் குரல்) 116வது பதிப்பில், என்சிசி கேடட்களின் வளர்ச்சி மற்றும் பேரிடர் நிவாரணத்தில் அவர்களின் பங்கை எடுத்துரைத்து, என்சிசி தினத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். அவர் வளர்ந்த இந்தியாவுக்கான இளைஞர் அதிகாரத்தை வலியுறுத்தினார் மற்றும் விக்சித் பாரத் (வளர்ந்த பாரதம்) இளம் தலைவர்கள் உரையாடல் பற்றி பேசினார். டிஜிட்டல் தளங்களில் செல்ல மூத்த குடிமக்களுக்கு இளைஞர்கள் உதவுவது மற்றும் 'ஏக் பேட் மா கே நாம்' (தாயின் பெயரில் ஒரு மரம்) பிரச்சாரத்தின் வெற்றி ஆகியவற்றையும் அவர் உற்சாகமூட்டும் கதைகள் மூலம் பகிர்ந்து கொண்டார்.'ஹர் கர் திரங்கா அபியான்' (வீடுதோறும் தேசியக் கொடி) மூவர்ணக் கொடியின் மகிமையை நிலைநிறுத்துவதில் ஒரு தனித்துவமான திருவிழாவாக மாறியுள்ளது: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி
July 28th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இந்த வேளையில், உலகம் முழுவதும் பேரீஸ் ஒலிம்பிக்ஸின் நிழல் படர்ந்திருக்கிறது. ஒலிம்பிக்ஸ் என்பது உலக அரங்கிலே நமது மூவண்ணக் கொடியைப் பெருமையோடு பறக்க விடும் ஒரு சந்தர்ப்பத்தை, தேசத்தின் பொருட்டு சாதிக்க வேண்டும் என்பதற்கான ஒரு வாய்ப்பை, நமது விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கிறது. நீங்கள் அனைவரும் நமது விளையாட்டு வீரர்களுக்குத் தெம்பை அளியுங்கள், சியர் ஃபார் பாரத்!!மைகவ் தளத்தின் 10 ஆண்டுகள்: பிரதமர் பாராட்டு
July 26th, 06:50 pm
மைகவ் தளம் பங்கேற்பிற்கும், நல்லாட்சிக்கும் துடிப்புமிக்க அமைப்பு என்று பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.மன் கீ பாத் (மனதின் குரல்): ‘மேரா பெஹ்லா வோட் – தேஷ் கே லியே’...(எனது முதல் வாக்கு, தேசத்துக்காக) பிரதமர் மோடி முதல்முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.
February 25th, 11:00 am
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலின் 110ஆவது பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன். எப்போதும் போலவே, இந்த முறையும் உங்களுடைய பல்வேறு ஆலோசனைகள், உள்ளீடுகள், விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் எப்போதும் போலவே இந்த முறையும் கூட என்ன சவால் என்றால், இந்தப் பகுதியில் எவற்றையெல்லாம் இடம் பெறச் செய்வது என்பது தான். ஆக்கப்பூர்வமான உணர்வில் ஒன்றை ஒன்று விஞ்சிய உள்ளீடுகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றில் பல, மற்றவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதோடு கூடவே, தங்களுடைய வாழ்க்கையையும் மேலும் சிறப்பானதாக ஆக்குவதில் ஈடுபட்டிருக்கும் நாட்டுமக்களைப் பற்றியவை.NCC highlights the idea of Ek Bharat Shreshtha Bharat: PM Modi
January 27th, 05:00 pm
Prime Minister Narendra Modi addressed the annual NCC PM rally at the Cariappa Parade Ground in Delhi. PM Modi witnessed a cultural program and presented the Best Cadet Awards. He also flagged in Mega Cyclothon by NCC Girls and Nari Shakti Vandan Run (NSRV) from Jhansi to Delhi. “Being present among NCC cadets highlights the idea of Ek Bharat Shreshtha Bharat, the Prime Minister said as he observed the presence of cadets from different parts of the country.டெல்லி கரியப்பா மைதானத்தில் நடந்த என்சிசி பேரணியில் பிரதமர் உரையாற்றினார்.
January 27th, 04:30 pm
டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் என்சிசி பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.வீரப்புதல்வர் தின நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 26th, 12:03 pm
இன்று, தைரியமான சாஹிப்சாதாக்களின் தியாகத்தை தேசம் நினைவுகூர்கிறது. அவர்களின் அசைக்க முடியாத உணர்விலிருந்து உத்வேகம் பெறுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி வீரப் புதல்வர் தினத்தின் தொடக்க விழா கொண்டாடப்பட்டது. அப்போது முழு தேசமும் சாஹிப்சாதாக்களின் வீரக் கதைகளால் உத்வேகம் பெற்றது.'வீரப் புதல்வர்கள் தின' நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
December 26th, 11:00 am
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற 'வீரப் புதல்வர்கள் தினம்' நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். குழந்தைகள் நிகழ்த்திய மூன்று தற்காப்புக் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் திரு மோடி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், தில்லியில் இளைஞர்களின் அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.காசி விஸ்வநாதர் ஆலய நடைபாதையின் 2 ஆண்டுகளைப் பிரதமர் கொண்டாடினார்
December 14th, 03:00 pm
காசி விஸ்வநாதர் ஆலய நடைபாதையின் 2 ஆண்டுகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி கொண்டாடினார்.வளர்ச்சியடைந்த பாரதம் 2047 தொடக்க விழாவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 11th, 10:35 am
மத்திய அமைச்சரவையில் எனது சகாவான தர்மேந்திர பிரதான் அவர்களே, நாடு முழுவதிலுமிருந்து பங்கேற்றுள்ள ஆளுநர்கள், கல்வித் துறையில் சிறந்த ஆளுமைகள் மற்றும் பெண்களே!'வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047: இளைஞர்களின் குரல்' திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
December 11th, 10:30 am
'வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047: இளைஞர்களின் குரல்' என்ற திட்டத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த முயற்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகளில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிலரங்குகளில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வி நிறுவனத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.140 கோடி மக்கள் பல மாற்றங்களைச் செய்து வருகின்றனர்: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
November 26th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலுக்கு உங்களை வரவேற்கிறேன். ஆனால் இன்று நவம்பர் மாதம் 26ஆம் தேதியை நம்மால் எப்படி மறக்க முடியும்!! இன்றைய நாளன்று தான் நாடெங்கிலும் மிகவும் கொடுமையான தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது. தீவிரவாதிகள் மும்பை நகரையும், நாடு முழுவதையும், உலுக்கிப் போட்டார்கள். ஆனால் நமது பாரத நாட்டின் வல்லமை எத்தகையது என்றால், அந்தத் தாக்குதலிலிருந்து மீண்டு, இப்போது முழுத் தன்னம்பிக்கையோடு, தீவிரவாதத்தைக் காலில் போட்டு மிதித்து இருக்கிறோம். மும்பைத் தாக்குதலில் தனது இன்னுயிர்களை இழந்த அனைவருக்கும் நான் எனது சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். இந்தத் தாக்குதலில் நமது வீரர்கள் வீரகதியை அடைந்தார்கள், தேசம் அவர்களை இன்று நினைவில் வைத்துப் போற்றுகிறது.கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
October 31st, 10:00 am
அனைத்து இளைஞர்கள் மற்றும் உங்களைப் போன்ற தைரியமான இதயங்களின் இந்த உற்சாகம் தேசிய ஒற்றுமை தினத்தின் பெரும் பலமாகும். ஒரு வகையில், ஒரு சிறிய இந்தியாவை என் முன் என்னால் பார்க்க முடிகிறது. வெவ்வேறு மாநிலங்கள், வெவ்வேறு மொழிகள் மற்றும் வெவ்வேறு பாரம்பரியங்கள் உள்ளன, ஆனால் இங்கே இருக்கும் ஒவ்வொரு நபரும் ஒற்றுமையின் வலுவான நூலால் இணைக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 15, நமது சுதந்திர தினக் கொண்டாட்ட நாளாகவும், ஜனவரி 26 நமது குடியரசு தினத்தைக் கொண்டாடும் நாளாகவும் இருப்பதைப் போலவே, அக்டோபர் 31-ஆம் தேதி நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தேசியவாதத்தைப் பரப்பும் திருவிழாவாக மாறியுள்ளது.