மேகாலய மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரு. எம். எம். ஜேக்கப் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
July 08th, 02:15 pm
மேகாலய மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரு. எம். எம். ஜேக்கப் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.“மேகாலய மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரு. எம். எம். ஜேக்கப்பின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக மற்றும் ஆளுநராக நம் நாட்டிற்கு அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். முக்கியமாக கேரள மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவர் வெகுவாக பங்காற்றியுள்ளார். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் எனது இரங்கல்கள்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.