நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு - பிரதமர் வாழ்த்து
September 20th, 07:42 pm
தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் மோகன்லாருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திரு மோகன்லால் திரைத் துறையில் சிறப்பாக செயல்பட்டு, பல கதாபாத்திரங்களில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்துவதில் தனித்திறன் வாய்ந்தவர் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். பல ஆண்டுகளாக ஏராளமான படைப்புகளுடன், மலையாள சினிமாவிலும், நாடகத்துறையிலும் முன்னணி நட்சத்திரமாக அவர் திகழ்கிறார் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கேரள கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் அவர் என்றும் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி படங்களிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். அனைத்து தளங்களிலும் அவரது திரைப்பட, நாடக நடிப்புத் திறமைகள் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.சமீபத்திய மனதின் குரல் நிகழ்வில் உடல் பருமனுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
February 24th, 09:11 am
உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்து வருவதை முறியடிப்பதன் அவசரத் தேவை பற்றி எடுத்துரைத்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைப்பது பற்றி அறிவுறுத்த பிரமுகர்களை அவர் பரிந்துரைத்துள்ளார். இந்த இயக்கத்தை மேலும் விரிவுபடுத்த அவர்கள் மேலும் 10 பேரை பரிந்துரைக்கவும் வலியுறுத்தி உள்ளார்.