பிப்ரவரி 22 ஆம் தேதி பிரதமர் மீரட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்
February 20th, 06:52 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 22, 2026 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டுக்குச் செல்கிறார். மதியம் 12:30 மணியளவில், சதாப்தி நகர் நமோ பாரத் நிலையத்தில் மீரட் மெட்ரோ மற்றும் நமோ பாரத் ரயிலை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். அங்கிருந்து மீரட் தெற்கு நிலையம் வரை மெட்ரோ பயணத்தை அவர் மேற்கொள்வார். பிற்பகல் 1 மணியளவில், மீரட்டில் சுமார் ரூ.12,930 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து, விழாவில் உரையாற்றுவார்.