PM Modi and President of France jointly visit ITER facility

February 12th, 05:32 pm

PM Modi and President Emmanuel Macron visited the ITER facility in Cadarache, the first such visit by any Head of State or Government. They praised ITER’s progress in fusion energy and India’s key contributions through scientists and industries like L&T, Inox India, and TCS, highlighting India's commitment to advancing global clean energy research.

PM Modi and President of France jointly inaugurate the Consulate General of India in Marseille

February 12th, 05:29 pm

PM Modi and President Emmanuel Macron inaugurated the Consulate General of India in Marseille. The new Consulate will boost economic, cultural, and people-to-people connections across four French regions. PM Modi deeply appreciated President Macron’s special gesture, as both leaders received a warm welcome from the Indian diaspora.

பிரதமரும், பிரான்ஸ் அதிபரும் மசார்குஸ் போர் நினைவிடத்தைப் பார்வையிட்டனர்

February 12th, 04:57 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மெக்ரானும் இன்று காலை மார்சேயில் உள்ள மசார்குஸ் போர் நினைவிடத்திற்குச் சென்று முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். உயிர்நீத்த வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் இரு தலைவர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்கள்.

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்

February 12th, 03:24 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் தங்களுக்கிடையிலான தனிப்பட்ட நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், நேற்று பாரிஸிலிருந்து மர்சேயிலுக்கு பிரான்ஸ் அதிபர் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தனர். இருதரப்பு உறவுகளின் முழு பரிமாணங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய, பிராந்திய பிரச்சனைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். மர்சேயில் வந்து இறங்கிய பின்னர் தூதுக்குழு நிலை பேச்சுவார்த்தைகள் நடந்தன. கடந்த 25 ஆண்டுகளில் பன்முக உறவாக சீராக உருவாகியுள்ள இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மைக்கான தங்கள் வலுவான உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிரான்ஸ் பயணம் குறித்த இந்தியா – பிரான்ஸ் கூட்டு அறிக்கை

February 12th, 03:22 pm

பிரெஞ்சுக் குடியரசின் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டார். பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில், பிரான்ஸ் மற்றும் இந்தியா இணைந்து செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்கின. இதில், பிளெட்ச்லி பார்க் (நவம்பர் 2023) மற்றும் சியோல் (மே 2024) உச்சிமாநாடுகளின் போது எட்டப்பட்ட முக்கியமான முடிவுகளை செயல்படுத்துவதற்காக, அரசு மற்றும் அரசாங்கத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், சிறு மற்றும் பெரிய நிறுவனங்கள், கல்வித்துறை பிரதிநிதிகள், அரசு சாரா நிறுவனங்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றுகூடினர். உலகளாவிய செயற்கை நுண்ணறிவு துறை பொது நலனுக்காக நன்மை பயக்கும் என்பதையும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கு நல்விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதையும் உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் தெரிவித்தனர். பிரான்சின் செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு பிரதமர் மோடி, அதிபர் மக்ரோனை வாழ்த்தினார். அடுத்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவதை பிரான்ஸ் வரவேற்றது.

நிகழ்வுகளின் பட்டியல்: பிரதமரின் பிரான்ஸ் பயணம் (10-12 பிப்ரவரி 2025)

February 12th, 03:20 pm

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த இந்தியா-பிரான்ஸ் பிரகடனம்

இந்தியா செயற்கை நுண்ணறிவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது, பொது நலனுக்காக அதைப் பயன்படுத்துகிறது: பிரதமர்

February 12th, 02:02 pm

செயற்கை நுண்ணறிவில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருவதுடன், அதனை பொதுமக்கள் நலனுக்காகப் பயன்படுத்தி வருவதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். இளைஞர் சக்தி மீது நம்பிக்கை வைத்து, உலக மக்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாரிஸில் நடைபெற்ற இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் தெரிவித்த கருத்துக்கள்

February 12th, 12:45 am

இந்த அறையில் ஒரு அற்புதமான ஆற்றல், உற்சாகம் மற்றும் சுறுசுறுப்பை நான் உணர்கிறேன். இது ஒரு சாதாரண வணிக நிகழ்வு மட்டுமல்ல.

14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்

February 12th, 12:25 am

பாரிஸில் இன்று நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் திரு. இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டாக உரையாற்றினர். பாதுகாப்பு, விண்வெளி, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, வாழ்க்கை அறிவியல், நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை முறை, உணவு மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் வகையில், இரு தரப்பிலிருந்தும் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மன்றத்தில் ஒன்று கூடினர்.

பாரிஸில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்

February 12th, 12:19 am

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை பாரிசில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அவர்கள் பல்வேறு தலைப்புகளில் அற்புதமான உரையாடலை நடத்தினர்.

எஸ்டோனியா குடியரசு அதிபரை பிரதமர் சந்தித்தார்

February 11th, 06:19 pm

இந்தியாவிற்கும், எஸ்டோனியாவிற்கும் இடையிலான அன்பான நட்புறவு என்பது ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரம், பன்மைத்துவத்தின் மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் பகிரப்படும் உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்று பிரதமர் மோடியும், அதிபர் காரிஸும் சுட்டிக்காட்டினார்கள். வர்த்தகம், முதலீடு, தகவல் தொழில்நுட்பம், மின்னணு, கலாச்சாரம், சுற்றுலா, மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இணையப் பாதுகாப்புத் துறையில் நடைபெற்று வரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இந்தியாவின் வளர்ச்சி குறித்த வாய்ப்புகளை ஆராயவும், டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் எஸ்டோனிய அரசு மற்றும் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் நிறைவுரை

February 11th, 05:35 pm

இன்றைய விவாதங்கள் ஒரு அம்சத்தை வெளிப்படுத்தியுள்ளன – தொலைநோக்குப் பார்வையிலும் பங்குதாரர்களின் நோக்கத்திலும் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.

பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொடக்க உரை

February 11th, 03:15 pm

உங்கள் மருத்துவ அறிக்கையை செயற்கை நுண்ணறிவு செயலியில் பதிவேற்றினால், அது உங்கள் ஆரோக்கியத்தின் நிலைமையை எந்த தொழில்நுட்ப சொற்களும் இல்லாமல் எளிய மொழியில் விளக்கிச் சொல்ல முடியும். ஆனால், அதே செயலியில் யாரோ ஒருவர் தனது இடது கையால் எழுதும் படத்தை வரையச் சொன்னால், அந்தச் செயலி பெரும்பாலும் வலது கையால் எழுதும் ஒருவரை வரைந்துவிடும். ஏனெனில் அதுதான் பயிற்சி தரவுகளின் ஆதிக்கமாகும்.

பிரதமர் திரு நரேந்திர மோடி பாரிஸில் செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சிமாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்கினார்

February 11th, 03:00 pm

பாரீசில் இன்று செயற்கை நுண்ணறிவு செயல்முறை உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மெக்ரோனுடன் இணைந்து தலைமை தாங்கினார். பிப்ரவரி 6-7 இல் அறிவியல் தினங்களுடன் தொடங்கிய ஒரு வார கால உச்சிமாநாடு, பிப்ரவரி 8-9 அன்று கலாச்சார வார இறுதியுடன், உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட நிலையுடன் நிறைவடைந்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

February 10th, 10:30 pm

பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் பாரிஸ் சென்றடைந்தார். அங்கு வந்த அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது, ​​பிரதமர் மோடி, அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பேச்சு நடத்துவார், AI உச்சி மாநாடு மற்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.

பாரிஸில் நடந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

July 15th, 07:03 am

இந்திக் கூட்டத்தில் விமானப் போக்குவரத்து, உற்பத்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஃபிரான்ஸ் அதிபருடனான கூட்டு ஊடக சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் செய்தி குறிப்பின் தமிழாக்கம்

July 15th, 01:47 am

தேசிய தினத்தை முன்னிட்டு ஃபிரான்ஸ் நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதை மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன். நமது உத்தி சார்ந்த கூட்டுமுயற்சியின் 25-வது ஆண்டை நாம் கொண்டாடுகிறோம். கடந்த 25 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை நாம் தயாரித்து வருகிறோம். இது சம்பந்தமாக துணிச்சல் மிக்க மற்றும் லட்சியமிக்க இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த காலகட்டத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்கவும் நாட்டு மக்கள் உறுதி ஏற்றுள்ளனர். நமது பொருளாதார உறவை வலுப்படுத்துவதற்கு இருவருமே முன்னுரிமை அளிக்கிறோம்.

ஃபிரான்ஸ் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

July 15th, 01:42 am

இருதரப்பு ராணுவம் மற்றும் பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு, விண்வெளி, பருவநிலை மேம்பாட்டு நடவடிக்கை மற்றும் மக்களுக்கு இடையேயான உறவு உள்பட பரந்த அளவில் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.

இந்தோ-பசிபிக் பகுதிக்கான இந்திய- ஃபிரான்ஸ் நாடுகளின் திட்டங்கள்

July 14th, 11:10 pm

நமது இரு நாடுகளும் தடையில்லாத, வெளிப்படையான, உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் அமைதியான இந்தோ- பசிபிக் பகுதியில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். பிரதமர் திரு மோடியின் சாகர் திட்டமும், அதிபர் திரு மேக்ரானின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு சார்ந்த திட்டமும் ஒருங்கிணைந்துள்ளன. விரிவான நமது ஒத்துழைப்பு, பாதுகாப்பு, ராணுவம், பொருளாதாரம், இணைப்பு, உள்கட்டமைப்பு, நிலைத்தன்மை மற்றும் மனித மேம்பாட்டை உள்ளடக்கி இருக்கிறது.

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் மாசுபாட்டை நீக்குவதற்கான கூட்டு உறுதிப்பாடு

July 14th, 11:00 pm

குப்பைகளாலும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களாலும் ஏற்படும் மாசு உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சனையாகும், இது அவசரமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். இது பொதுவாக சுற்றுச்சூழல் அமைப்புகளிலும், குறிப்பாக கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது (80% பிளாஸ்டிக் கழிவுகள் நில மூலங்களிலிருந்து உருவாகின்றன. 1950 முதல் 9.2 பில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, அவற்றில் 7 பில்லியன் டன் கழிவுகள் உருவாகின்றன. ஒவ்வொரு ஆண்டும், 400 மில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது, அதில் மூன்றில் ஒரு பங்கு ஒற்றை உபயோகப் பொருட்களுக்காக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சுமார் 10 மில்லியன் டன்கள் கடலில் கொட்டப்படுகின்றன..