பிரிட்டனின் மேன்மைதங்கிய மன்னர் மூன்றாம் சார்லஸை பிரதமர் சந்தித்தார்

July 24th, 11:00 pm

பிரிட்டனின் மேன்மைதங்கிய மன்னர் மூன்றாம் சார்லஸை அவரது கோடைகால இல்லமான சான்டிரிங்காம் எஸ்டேட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

இந்திய மற்றும் இங்கிலாந்து வணிகத் தலைவர்களுடன் இங்கிலாந்து பிரதமர் மற்றும் பிரதமர் திரு மோடி சந்திப்பு

July 24th, 07:38 pm

வரலாற்று சிறப்புமிக்க இந்திய - இங்கிலாந்து விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் [சிஇடிஏ] கையெழுத்தானதைத் தொடர்ந்து, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் திரு. சர். கீர் ஸ்டார்மர் ஆகியோர் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வணிகத் தலைவர்களைச் சந்தித்தனர். சுகாதாரம், மருந்துகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகனங்கள், எரிசக்தி, உற்பத்தி, தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், ஐடி, தளவாடங்கள், ஜவுளி மற்றும் நிதிச் சேவைகள் துறைகளைச் சேர்ந்த இரு தரப்பிலிருந்தும் முன்னணி தொழில்துறைத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தத் துறைகள் இரு நாடுகளிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.

இந்திய-இங்கிலாந்து தொலைநோக்குப் பார்வை 2035

July 24th, 07:12 pm

இந்தியா மற்றும் இங்கிலாந்து பிரதமர்கள், ஜூலை 24, 2025 அன்று லண்டனில் நடந்த சந்திப்பின் போது, புதிய இந்திய-இங்கிலாந்து தொலைநோக்குப் பார்வை 2035-ஐ அங்கீகரித்தனர். இது புத்துயிர் பெற்ற கூட்டாண்மையின் முழு திறனையும் வெளிக்கொணர்வதற்கான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த லட்சிய மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட ஒப்பந்தம், பரஸ்பர வளர்ச்சி, செழிப்பு மற்றும் விரைவான உலகளாவிய மாற்றத்தின் போது ஒரு வளமான, பாதுகாப்பான மற்றும் நிலையான உலகத்தை வடிவமைப்பதற்காக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இங்கிலாந்து பிரதமருடான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமரின் உரை

July 24th, 04:20 pm

முதலில், பிரதமர் ஸ்டார்மரின் அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நமது இருதரப்பு உறவுகளில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். பல வருட அர்ப்பணிப்பு முயற்சிகளுக்குப் பிறகு, நமது இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இங்கிலாந்து பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமரின் கருத்துக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு

July 24th, 04:00 pm

இந்த அன்பான வரவேற்புக்கும், மகத்தான கௌரவத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இன்று செக்கர்ஸில், நாம் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கப் போகிறோம். நமது பகிரப்பட்ட பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க இந்தியாவும் இங்கிலாந்தும் ஒன்றிணைகின்றன.

இங்கிலாந்து பிரதமருடன், பிரதமர் திரு மோடி சந்திப்பு

July 24th, 03:59 pm

ஜூலை 23-24, 2025 அன்று இங்கிலாந்துக்கு அதிகாரப்பூர்வமாக விஜயம் செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று இங்கிலாந்து பிரதமர் மாண்புமிகு சர் கீர் ஸ்டார்மரை சந்தித்தார். பக்கிங்ஹாம்ஷையரின் செக்கர்ஸில் உள்ள இங்கிலாந்து பிரதமரின் இல்லத்திற்கு வந்த அவரை, பிரதமர் திரு ஸ்டார்மர் அன்புடன் வரவேற்றார். இரு தலைவர்களும் நேரடி சந்திப்பையும், பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளையும் நடத்தினர்.

PM Modi arrives in London, United Kingdom

July 24th, 12:15 pm

Prime Minister Narendra Modi arrived in United Kingdom a short while ago. In United Kingdom, PM Modi will hold discussions with UK PM Starmer on India-UK bilateral relations and will also review the progress of the Comprehensive Strategic Partnership.

இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக புறப்பட்டு செல்வதற்கு முன்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

July 23rd, 01:05 pm

ஜூலை 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக செல்கிறேன்.

கிளாஸ்கோ சிஓபி26 உச்சிமாநாட்டில், பசுமை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்துதல் குறித்த அமர்வின் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

November 02nd, 07:45 pm

இன்று ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொகுப்பு’ தொடக்கத் திட்டத்திற்கு நீங்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறீர்கள். சர்வதேச சூரிய மின்சக்திக் கூட்டணி மற்றும் இங்கிலாந்தின் பசுமைமின் தொகுப்பு நடவடிக்கை, எனது பல ஆண்டு தொலைநோக்காக ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொகுப்பு’ திட்டம் இன்று வலுவான உருவத்தைப் பெற்றுள்ளது. மாண்புமிகு தலைவர்களே தொழில்புரட்சி, படிம எரிபொருள்களால் ஏற்பட்டது. பல நாடுகள் படிம எரிபொருள்களால் செழிப்படைந்துள்ளன. ஆனால் நமது பூமி மற்றும் சுற்றுச்சூழல் மோசமடைந்து. படிம எரிபொருள் கண்டுப்பிடிப்புக்கான போட்டி பூலோக –அரசியல் பதற்றங்களை ஏற்படுத்தியது. ஆனால் இன்று தொழில்நுட்பம் நமக்கு மிகப் பெரிய மாற்றை அளித்துள்ளது.

கிளாஸ்கோவில் சிஓபி-26 உச்சி மாநாட்டில் ‘மீளும் தீவு நாடுகளுக்கான கட்டமைப்பு தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை’

November 02nd, 02:01 pm

‘மீளும் தீவு நாடுகளுக்கான கட்டமைப்பு (ஐஆர்ஐஎஸ்) தொடக்கம் புதிய நம்பிக்கையை அளிக்கிறது. மிகவும் பாதிக்கப்படும் நாடுகளுக்கு எதையாவது செய்ய வேண்டிய திருப்தியை அளிக்கிறது

PM Modi launches IRIS- Infrastructure for Resilient Island States at COP26 Summit in Glasgow's

November 02nd, 02:00 pm

Prime Minister Narendra Modi launched the Infrastructure for the Resilient Island States (IRIS) initiative for developing infrastructure of small island nations. Speaking at the launch of IRIS, PM Modi said, The initiative gives new hope, new confidence and satisfaction of doing something for most vulnerable countries.

சமூக வலைதள மூலை ஏப்ரல் 19, 2018

April 19th, 07:44 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

125 கோடி இந்திய மக்களும் எனது குடும்பத்தினர்: பிரதமர் நரேந்திர மோடி

April 19th, 05:15 am

அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல்” நிகழ்ச்சியில் , பிரதமர் மோடி நாட்டில் ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர செய்ய வேண்டியதை கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை என்று கூறினார். இந்தியா ஒரு புதிய நம்பிக்கையுடன் உலக அரங்கில் நாட்டின் வளர்ந்து வரும் நிலைப்பாட்டில் உள்ளது மற்றும் 125 கோடி இந்திய மக்களும் எனது குடும்பத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

”அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல்” என்ற திட்டத்தின் லண்டன் கூட்டத்தில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் இடையே பிரதமர் கலந்துரையாடியதன் சுருக்கம்.

April 18th, 09:49 pm

இங்கிலாந்தில் லண்டன் நகரில் நடைபெற்ற அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல் என்ற திட்டத்தின் கூட்டத்தில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

சமூக வலைதள மூலை ஏப்ரல் 18, 2018

April 18th, 07:43 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

பிரதமரின் இங்கிலாந்து பயணத்தின் போது (2018 ஏப்ரல் 18) வெளியிடப்பட்ட இங்கிலாந்து-இந்தியா கூட்டறிக்கை

April 18th, 07:02 pm



லண்டனில் தத்துவஞானி பசவேஸ்வராவின் மார்பளவு சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மாலை அணிவித்து மரியாதை செய்தார்

April 18th, 04:02 pm

லண்டனில் தத்துவஞானி பசவேஸ்வராவின் மார்பளவு சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்

பிரதமர் மோடி வேல்ஸ் இளவரசரை சந்திக்கிறார்.

April 18th, 03:54 pm

பிரதமர் மோடி வேல்ஸ் இளவரசரை இன்று சந்திக்கிறார். இளவரசர் சார்லஸ் மற்றும் பிரதமர் மோடி இருவரும் இணைந்து 5,000 ஆண்டுகள் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டனர்.

இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இருத்தரப்பு உறவுகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக 'தீர்க்கமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளாகும் என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

April 18th, 02:36 pm

பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் தெரசா மேயுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். பல துறைகளில் இந்தியா-ஐக்கிய இராச்சியம் உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறினர்.

பிரதமர் மோடி லண்டனில் திருமிகு ராணியை சந்திக்கிறார்.

April 18th, 10:50 am

பிரதமர் நரேந்திர மோடி லண்டனில் திருமிகு ராணியை சந்திக்கிறார்.